Monday, February 24, 2020

On Monday, February 24, 2020 by Tamilnewstv in ,    
பெண்களுக்கு சவாலான காலகட்டம் நிலவுவதால் பள்ளிகளில் கராத்தே பயிற்றுவிக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று திருச்சியில் கராத்தே பயிற்சியாளர்கள் சார்பில் கோரிக்கை எழுந்துள்ளது.                                                                     திருச்சியில் நடைபெற்ற பயிற்சி நிறைவு விழாவில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே தகுதிப்பட்டை வழங்கப்பட்டது.                                              
                  
 ஷோட்டோ கான் கராத்தே வேர்ல்டு பெடரேஷன் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு கராத்தே பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்தப் பயிற்சி நிறைவு விழா திருச்சி தேசிய கல்லூரியில் நடைபெற்றது. சுமார் 500க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்த விழாவில் கலந்துகொண்டனர். தாங்கள் பெற்ற பயிற்சியினை அவர்கள் செய்முறை வழியாக வெளிப்படுத்திய பின் தகுதி அடிப்படையில் கராத்தே பட்டைகள் வழங்கப்பட்டது. வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு, பச்சை, நீலம், உள்ளிட்ட பல்வேறு நிறங்களில் தகுதி பட்டைகளை தலைமை பயிற்சியாளர் சங்கர் வழங்கினார்.  இது குறித்து திருச்சி மாவட்ட தற்காப்பு பயிற்சி தலைமை பயிற்சியாளர் பத்மா கூறும்போது..... பெண்களுக்கு சவால் தரும் காலகட்டம் தற்போது நிலவி வருகிறது. எனவே இதன் அவசியத்தை கருதி பெண்கள் கராத்தே பயில்வதற்கு முக்கியத்துவம் தர வேண்டும். தமிழக அரசு இதனை பள்ளிகளில் பாடமாகக் கொண்டு வந்து பயிற்றுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையை அவர் விடுத்தார்.

0 comments: