Sunday, February 23, 2020

On Sunday, February 23, 2020 by Tamilnewstv in ,    
திருச்சியில் 6 லட்சம் ரூபாய் தொகுதி மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட பேருந்து பயணியர் நிழற்குடையை அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று திறந்து வைத்தார்.

                   

திருச்சி செந்தண்ணீ புரம் ஆஞ்சநேயர் கோவில் அருகே  பேருந்து பயணியர் நிழற்குடை அமைத்து தர, திருச்சி சட்டமன்ற உறுப்பினரும், தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழியிடம் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை  விடுத்தனர்.  இதனை தொடர்ந்து தனது  தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிய பேருந்து பயணியர் நிழற்குடையை கட்டினார். 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அந்த பேருந்து பயணியர் நிழற்குடையை அவர் இன்று பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். அப்போது அவர் பேசும் போது....... நான் எதிர்கட்சி சட்டமன்ற உறுப்பினராக இருப்பதால் மக்கள் என்னிடம் வைக்கும் பத்து கோரிக்கைகளில் என்னால் முடிந்த இரண்டு, மூன்று கோரிக்கைகளை நிறைவேற்றி தருகிறேன். திமுக ஆட்சி அமையும்போது பத்துக்கு பத்து என அனைத்து கோரிக்கைகளும்  நிறைவேற்றித் தருவேன் என்றார். இவ்விழாவில் பகுதி செயலாளர் தர்மராஜ், வட்டச்செயலாளர்கள் ரெங்கநாதன், சண்முகம், துரை, வரதராஜன், மணி, தவசீலன் தங்கவேல் , செல்வராஜ், இளைஞரணி ஜோஸ்வா, செந்தில்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

0 comments: