Monday, February 24, 2020

On Monday, February 24, 2020 by Tamilnewstv in ,    
திருச்சி


 திருச்சி தி.மு.க செயல்வீரர்கள் கூட்டத்தில் நேரு பேச்சு



திருச்சி மாவட்ட தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைப்பெற்றது. இதில் தி.மு.க முதன்மை செயலாளர் கே.என்.நேரு,திருச்சி வடக்கு மாவட்ட செயலாளர் தியாகராஜன்,தெற்கு மாவட்ட செயலாளர் மகேஷ் பொய்யாமொழி,மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.இந்த கூட்டத்தில்

 திருச்சி, கரூர்,அரியலூர் ஆகிய மாவட்டங்களை சிறப்பு வேளாண் மண்டலங்களாக இணைக்க வேண்டும்,
ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது,உட்கட்சி தேர்தலை சிறப்பாக நடத்துவது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.கூட்டத்தில் பேசிய கே.என்.நேரு,

தான் தி.மு.க வில் இணைந்தது முதல் மாவட்ட செயலாளராக பணியாற்றியது வரையிலான நினைவுகளை பகிரிந்து கொண்டு புதிய மாவட்ட செயலாளர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கினார்.அதில்,மாவட்ட செயலாளராக பொறுப்பேற்ற பின்பு
பல அவமானங்களை சந்தித்துள்ளேன்.அதனால்  தான் தற்போது முதன்மை செயலாளர் என்கிற நிலைக்கு வந்துள்ளேன்.

கட்சிக்குள் ஜாதியை பார்க்காதீர்கள்.கட்சி வளர்ச்சிக்கு கட்சி தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்ல வேண்டும்.சிறுபான்மை மற்றும் ஆதிதிராவிட கட்சி தோழர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

என்ன வருத்தங்கள் இருந்தாலும் அதை பிறகு பார்த்து கொள்ளலாம்.சட்டமன்ற தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களிலும் வெற்றி பெற வேண்டும்.

நான் மாவட்ட செயலாராக பொறுப்பேற்ற பிறகு மாவட்ட செயலாளராக கட்சிகாரர்கள் என்னை அங்கீகரிக்கவே 8 ஆண்டுகள் ஆனது.

தி.மு.க விலிருந்து ம.தி.மு.க பிரிந்த பின்பு ஏன்  ம.தி.மு.க விற்கு செல்லவில்லை என பலர் கேட்டார்கள்.அப்போதே  கருணாநிதி,அவர் மகன்,அவர் பேரன் என யார் இருந்தாலும் அவருக்கு ஆதரவாக தான் இருப்போம் என கூறினேன்.தற்போது அது உண்மையாகி உள்ளது என கூறினார்.

0 comments: