Sunday, November 04, 2018
ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற செய்தியை பரப்புவதற்காக இந்தியன் ஆயில் நடத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான்
பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.
கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.
இந்தியன் ஆயில் நிறுவனம்ந டத்தும் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியை தென்னூர் உழவர் சந்தை திறந்தவெளி திடலில், திரு. எஸ்.செந்தில்குமார், எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. டி.ஜி.நாகராஜன், சீஃப் ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. சி.கோபாலகிருஷ்ணன், சீஃப் ஜெனரல் மேனேஜர் (சில்லறை விற்பனை) - இந்தியன் ஆயில் தமிழ் நாடு, திரு. திருவள்ளுவன், டெபுடி ஜெனரல் மேனேஜர் (விஜிலன்ஸ்), தென் மண்டலம் - இந்தியன் ஆயில், திரு. பாபு நரேந்திரா, சீஃப் டிவிஷனல் சில்லறை விற்பனை மேனேஜர், திருச்சி டிவிஷனல் அலுவலகம் ஆகியோர் முன்னிலையில் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ்., மாவட்ட கலெக்டர் - திருச்சிராப்பள்ளி மாவட்டம் துவங்கி வைத்தார்.
பள்ளி மாணவ மாணவியர், இந்தியன் ஆயில் அலுவலர்கள், டீலர்கள், கஸ்டமர் உதவியாளர்கள், பொதுமக்கள் உட்பட 500 பேர் உழவர் சந்தையிலிருந்து எம்.ஜி.ஆர் சிலை வரையில் 2 கி.மீ தூரத்திற்கு நடைபெற்ற இந்தியன் ஆயில் கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம் வாக்கத்தான் நிகழ்ச்சியில் பங்குபெற்றனர். பள்ளி மாணவ மாணவியர் விழிப்புணர்வு வாரத்தைக் குறித்த வாசகங்கள் அடங்கிய அட்டைகளை ஏந்தி, கோஷங்களை எழுப்பினர்.
ஊழலுக்கு எதிரான விழிப்புணர்வை உருவாக்க வேண்டும் என்று வலியுறுத்தி, ஊழலையும் ஊழல் செய்யப்படுவதையும் தடுப்பதன் அவசியத்தைக் குறித்து பேசினார். மேலும் அவர் "கண்காணிப்பு விழிப்புணர்வு வாரம்" மிக உயர்ந்த அளவில் வெளிப்படைத்தன்மையையும் நியாயமிக்க முறையில் செயல்பாடுகளை கையாளுவதையும் உறுதிப்படுத்துவதற்கு நமது சமூக அமைப்பையும் நாம் செயல்படும் முறையையும் மீண்டும் கவனத்தில் கொள்ள ஒரு வாய்ப்பை அளிக்கிறது. ஊழல் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் பொதுமக்கள் தொடர்பு செயல்பாடுகளில் இந்தியன் ஆயில் மானவ மாணவிகளை ஈடுபடச் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது" என்று திருச்சிராப்பள்ளி மாவட்ட கலெக்டர் திரு. கே.ராஜமணி ஐ.ஏ.எஸ் கூறினார்.
கண்காணிப்பு விழிப்புனர்வு வாரத்தின் செய்தியை மக்களிடம் சேர்ப்பிக்கும் வகையில், தமிழ் நாட்டிலுள்ல பல பண்பலை நிலையங்களிலிருந்து வானொலிச் செய்திகள் ஒலிபரப்பப்பட்டு, பொதுமக்கள் மத்தியில் ஊழல் தடுப்பு விழிப்புணர்வை உருவாக்கும் நோக்குடன் 2 லட்சம் வாடிக்கையாளர்களுக்கு கைபேசி குறுஞ்செய்திகளும் அனுப்பப்பட்டுள்ளன. இளம் மனங்களை ஊழலுக்கெதிரான பொறியை பற்ற வைத்து ஊழலற்ர தேசத்தை கட்டமைக்கும் நோக்குடன் "ஊழலை ஒழிப்போம் - புதிய இந்தியாவை உருவாக்குவோம்" என்ற தலைப்பில் ஓவியப் போட்டி மற்றும் கட்டுரை போட்டிகள் தமிழகமெங்குமுள்ள பள்ளிகளில் நடத்தப்பட்டுள்ளன.
இந்தியன் ஆயில் சில்லறை விற்பனை மையங்கள் தரம், அளவு ஆகியவற்றை உறுதி செய்யும் வகையில் எரிபொருள் நிரப்பும் முன்பு வாடிக்கையாளர்களே எரிபொருளை விஞ்ஞான ரீதியாக சோதித்துப் பார்க்கும் முகாம்களை நடத்தியுள்ளன. தமிழகத்தின் பல பகுதிகளிலும் அதிக விற்பனை நடைபெறும் சில்லறை விற்பனை மையங்களில், ஊழல் கண்காணிப்பு குறித்த தகவல் பலகைகள் வைக்கப்பட்டு வாடிக்கையாளர்கள் மத்திய கண்காணிப்பு கமிஷனுடைய ஆன்லைன் நேர்மை உறுதிமொழியை எடுப்பதில் பங்குபெறவும் ஊக்குவிக்கப்படுகின்றனர் என்று இந்தியன் ஆயில் தென் மண்டலம் எக்ஸிகியூட்டிவ் டைரக்டர் (ரீஜனல் சர்வீசஸ்) திரு. எஸ்.செந்தில்குமார் கூறினார்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
The 10 th mid-year Chemical Research Society of India (CRSI) Symposium in Chemistry was jointly organized by National Ins...
-
பாசனத்திற்கும், குடிநீர் தேவைக்காகவும் அமராவதி அணையில் இருந்து உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என்று திமுக மாவட்டச் செயலாளர் மு....
-
ஈரோட்டில் 80 கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் நடத்திய திடீர் சோதனையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்க...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கர்நாடக உயர் நீதிமன்றம்| கோப்புப் படம் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 1991-96 காலக்கட்டத்தில் ஹைதராபாத் திராட்சை தோட்டம் மூலம...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
பாரத மாதாவின் பாதமாக இருப்பது தமிழ் மொழிதான் என தமிழறிஞர் தமிழண்ணல் கூறினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் ச...
0 comments:
Post a Comment