Tuesday, September 30, 2014

On Tuesday, September 30, 2014 by farook press in ,    
தென்னை வளர்ச்சி வாரியம், மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு ஆகியவற்றின் சார்பில் தென்னை மரங்களின் நண்பர்கள் பயிற்சி முகாம் உடுமலையை அடுத்துள்ள சின்ன வீரம்பட்டி கிராமத்தில் முன்னோடி விவசாயி குமரவேல் தோட்டத்தில் நேற்று நடந்தது. முகாம் தொடக்க நிகழ்ச்சிக்கு ஊராட்சி மன்ற தலைவர் எம்.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மடத்துக்குளம் தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் டி.ஜெயமணி வரவேற்றார். உடுமலை தென்னை உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஜெ.பெரியநாயகம் முன்னிலை வகித்தார். பயிற்சி முகாமை தென்னை வளர்ச்சி வாரிய கள அலுவலர் ஆர்.பரமசிவம் தொடங்கி வைத்தார்.
கிராமபுற இளைஞர்கள் 40 பேருக்கு பயிற்சியளிக்கப்படுகிறது. நவீன கருவிகள் மூலம் எளிதாக தென்னை மரம் ஏறுதல், தென்னை பராமரிப்பு பற்றிய தொழில்நுட்பங்கள் குறித்து பயிற்சியளிக்கப்பட்டது. அவர்களுக்கு ஏ.மகேஷ்பிரபு, எஸ்.கணேஷ்குமார் ஆகியோர் பயிற்சியளித்தனர். இந்த பயிற்சி முகாம் வருகிற 4–ந் தேதி வரை தொடர்ந்து 6 நாட்கள் நடக்கிறது.

0 comments: