Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
 இதுகுறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் ச.ஜெயந்தி கூறியதாவது:
 தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் வாக்களிக்க, வாக்காளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள சீட்டுகள், கடவுச் சீட்டு, ஓட்டுநர் உரிமம், பொதுத்
துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு நிறுவனங்களால் தங்கள் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, வங்கி மற்றும் அஞ்சலகங்களில் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வங்கிக் கணக்குப் புத்தகம், வருமான வரித் துறை நிரந்தரக் கணக்கு எண் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட பணிக்கான அடையாள அட்டை, தொழிலாளர் நலத் துறையால் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப் பேரவை உறுப்பினர், மக்களை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்ட அலுவலக ரீதியான அடையாள அட்டைகளை பயன்படுத்தலாம்.
 வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை பயன்படுத்த இயலாதவர்கள், மேற்கூறப்பட்ட ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைப் பயன்படுத்தி தங்கள் வாக்கினைச் செலுத்தி, நூறு சதவீத வாக்குப் பதிவு என்ற இலக்கினை அடைவதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றார்.

0 comments: