Monday, April 06, 2020

On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி முசிறி
முசிறி அருகே தா.பேட்டை சலவைத் தொழிலாளர் சங்கத்தினர் கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக 1200  நபர்களுக்கு  இலவசமாக முக  கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

திருச்சி மாவட்டம், தா.பேட்டையில் சலவை தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் நோக்கில் பொதுமக்களுக்கு முக  கவசம்  வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர் .
இதற்காக தையல் கலைஞர் ஒருவரை அணுகி சுமார் ஆயிரத்து இருநூறு முக கவசங்களை தங்களது சொந்த செலவில் தயார் செய்து அதனை ஒரு பாலித்தீன் கவரில் போட்டு ,அதனுடன் கொரோனா  வைரஸ் தொடர்பான விழிப்புணர்வு வாசகங்கள் அச்சிடப்பட்ட அட்டையையும் வைத்து ஒட்டி தா.பேட்டை நியாயவிலை கடைக்கு வந்திருந்த பொதுமக்கள்  மற்றும் தெருக்களில் வீடு வீடாக சென்று முகக் கவசங்கள்  இலவசமாக வழங்கியதோடு சுத்தமாக இருக்கவும், வெளியே வரவேண்டாம் எனவும், முக கவசம் அணிந்து கொள்ளுங்கள் என கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தினர். அயல் நாடுகளில் தற்போது முக கவசத்திற்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் தையல் கலைஞர் உதவியோடு பனியன் துணியில் தயாரிக்கப்பட்ட முக கவசங்களை பொதுமக்களுக்கு வழங்கி சலவைத் தொழிலாளர்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியது சமூக ஆர்வலர்களிடையே மிகுந்த  வரவேற்பை பெற்றுள்ளது

0 comments: