Monday, April 06, 2020

On Monday, April 06, 2020 by Tamilnewstv in    
திருச்சி முசிறி

முசிறி அருகே தாங்களாகவே முன்வந்து கிராமத்தை வெளி தொடர்பிலிருந்து தனிமை படுத்திகொண்ட கிராமத்தினர் - சமூக ஆர்வலர்கள் பாராட்டு
 

திருச்சி மாவட்டம், முசிறி அருகே கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மங்கலம்புதூர் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களே தங்கள் கிராமத்தை வெளிதொடர்புகளிலிருந்து துண்டித்து தனிமைபடுத்தி கொண்ட சம்பவம் சமூகஆர்வலர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
  முசிறி அருகே மங்கலம்புதூர் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் இருக்க வெளியாட்களை கிராமத்திற்குள் வராமல் இருக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து கிராமத்திற்கு வரும் இரண்டு பிரதான வாயில்களை தடுப்புகள் அமைத்து அடைத்தனர். பின்னர் கொரோனா வைரஸ் பாதிப்பு,  144 தடை உத்தரவு, அந்நியர்கள் கிராமத்திற்குள் நுழையதடை விதித்தும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது. அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வேப்பிலை, மஞ்சள் ஆகியவற்றை தண்ணீரில் கலக்கி கிருமி நாசினி மருந்தாக கிராமங்களின் தெருக்களில் தெளித்தனர். பொதுமக்களுக்கு கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவையும் வழங்கப்பட்டது. கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சமூகஇடைவெளியை பின்பற்றுமாறு அரசு வலியுறுத்தி வரும் நிலையில் கடைக்கோடி கிராமத்தை சேர்ந்த மக்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது கிராமத்தை தனிமை படுத்திகொண்ட சம்பவம் சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்திஉள்ளது.

0 comments: