Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    
திருப்பூர், முதலிபாளையம் சிட்கோவில் செயல்பட்டு வரும் நிஃப்ட்-டீ கல்லூரி, பின்னலாடை சார்ந்த பல்வேறு படிப்புகளை வழங்கிவருகிறது. மேலும், இக்கல்லூரியில் பல்வேறு வகையான திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளுக்கான மென்பொருளை சிங்கப்பூரைச் சேர்ந்த பெகாஸஸ் நிறுவனம் வடிவமைத்துள்ளது. இந்த மென்பொருளை கல்லூரிக்கு இலவசமாக வழங்குவது குறித்தும், தையல் இயந்திர தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்குவது குறித்தும் ஆலோசிப்பதற்காக அந்நிறுவன அதிகாரிகள் இக்கலூரிக்கு வருகைபுரிந்துள்ளனர். பெகாஸஸ் நிறுவன நிர்வாக இயக்குநர் ஜான் டான், துணைத் தலைவர் டகாசி, அந்நிறுவனத்தன் இந்தியக் கிளை பொது மேலாளர் ராஜீவ் பிள்ளை ஆகியோர் இக்கல்லூரிக்கு வந்துள்ளனர்.
அவர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் கல்லூரியின் தலைமை ஆலோசகர் ராஜா எம்.சண்முகம், கல்லூரியின் சேர்க்கைக் குழுத் தலைவர் டி.ஆர்.விஜயகுமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

0 comments: