Friday, May 13, 2016

On Friday, May 13, 2016 by Unknown in ,    



 காங்கயம் தொகுதியில் போட்டியிடும் திமுக,காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் பி.கோபியை ஆதரித்து காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய செய்தித் தொடர்பாளரான நடிகை குஷ்பு காங்கயத்தில் வியாழக்கிழமை இரவு பிரசாரம் மேற்கொண்டார்.
 அப்போது அவர் பேசியதாவது:
 முதல்வர் ஜெயலலிதா வெற்றி பெற்றால் படிப்படியாக மதுவிலக்கு கொண்டு வருவாராம். 2011-இல் ஜெயலலிதா முதல்வராகப் பொறுப்பேற்கும்போது தமிழகத்தில் 1,800 டாஸ்மாக் கடைகள் இருந்தன. ஆனால், கடந்த 5 ஆண்டுகளில் ஆண்டு தோறும் 1,000 கடைகள் அதிகரிக்கப்பட்டு, தற்போது 6,800 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இதுதான் ஜெயலலிதா அரசின் சாதனை. திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாயக் கடன் தள்ளுபடி, கல்விக் கடன் தள்ளுபடி, நெசவாளர்களுக்கு 750 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பாக முதியோர் உதவித் தொகையை ஆயிரத்திலிருந்து ரூ. 2 ஆயிரமாக உயர்த்தித் தரப்படும். 100 நாள் வேலைத் திட்டம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் கொண்டுவரப்பட்டது. திமுக ஆட்சிக்கு வந்ததும் இந்தத் திட்டம் 100 நாளிகளில் இருந்து 150 வேலை நாள்களாக உயர்த்தப்படும். திமுக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்ட 501 திட்டங்களில் 81 திட்டங்கள் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு ஆனது. மக்கள் மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள்.  அந்த மாற்றம் மே 16-இல் நிகழ இருக்கிறது என்றார்.

0 comments: