Friday, May 13, 2016
திருப்பூரில் தேர்தலுக்குப் பிறகு அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படும் என்று திமுக வேட்பாளர் வாக்குறுதி அளித்ததைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்கள் வீடுகளில் ஏற்றிய கருப்புக் கொடிகளை அகற்றினர்.
திருப்பூர் வடக்குத் தொகுதிக்கு உள்பட்ட மெய்யாண்டம்பாளையம், ஏ.டி.காலனியில் அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தரக் கோரி பொதுமக்கள் தங்களது வீடுகளில் மே 10-ஆம் தேதி முதல் கருப்புக் கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்புக் கொடி போராட்டம் வியாழக்கிழமை வரை தொடர்ந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை திமுக வடக்கு சட்டப் பேரவைத் தொகுதி வேட்பாளர் மு.பெ.சாமிநாதன் அப்பகுதியில் வாக்கு சேகரிக்க சென்றார். அப்போது, தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி அமைந்தால் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தார். அதைத் தொடர்ந்து வீடுகளில் ஏற்றப்பட்டிருந்த கருப்புக் கொடிகளை அப்பகுதி மக்கள் அகற்றினர். உழவர் உழைப்பாளர் கட்சித் தலைவர் செல்லமுத்து உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரியின் வணிக நிர்வாகவியல் துறை சார்பில் மாணவிகளின் தயாரிப்புகளை காட்சிப்படுத்தி விற்பனை செய்யும் க...
-
திருச்சி ஸ்ரீரங்கத்தில் ஸ்ரீதர்ம சாஸ்தா பூஜா மண்டலி சார்பாக ஸ்ரீஐயப்ப ஸ்வாமி தீயூட்டு பூஜை மஹோத்சவம் சிறப்பு யாகம் மற்றும் பூஜை நடைபெற்றத...
-
மதுரையில் விஜிபி ஹவுசிங் மண்டல அலுவலகத்தை துணைத்தலைவர் செல்வராஜ குத்துவிளக்கேற்றி வைத்தார். உடன் மோகன் சி லாரஸ், வத்சலாதேவி, பொது மே...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
குவாரி உரிமையாளர்கள் மிரட்டியதால் கடந்த 14 ஆண்டுகளாக வீடு கட்ட முடியவில்லை என சகாயத்திடம் போலீஸ் அதிகாரிகள் புகார் செய்தனர். மதுரை அருகே...
-
திருச்சி: திருச்சி மாவட்டம் முக்கொம்பு கொள்ளிடம் ஆற்றின் மேலணையில் இருந்த தடுப்பணை கடந்த 2017ம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது ...
-
திருச்சி சென்னை சில்க் ஸ் ஸ்ரீகுமரன் தங்க மாளிகை திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனை மற்றும் கி.ஆ.பெ விஸ்வநாதன் மருத்துவ மனை இ...
-
தமிழக காவல்துறையில் 10 காவல் துணைக் கண்காணிப்பாளா்களை (டிஎஸ்பி) பணியிட மாற்றம் செய்து டிஜிபி ஜே.கே.திரிபாதி வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா். ...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக ஸ்ரீரங்கம் தொகுதி வேட்பாளர் வளர்மதி தனது பிரச்சாரத்த...

0 comments:
Post a Comment