Thursday, November 15, 2018

On Thursday, November 15, 2018 by Tamilnewstv   
திருச்சி 15.11.18


திருச்சியில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்…
திருச்சியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கமும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் சங்கமும் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்கள்.
டாஸ்மாக் நிறுவனத்தின் பல்வேறு நிர்வாக குறைபாடுகள் உள்ளது. மதுபான சில்லரை விற்பனை கடைகளில் அன்றாட தொகையை இரவில் கடைகளில் வைத்துவிட்டு செல்ல முடியாத நிலையுள்ளது. அனைத்து கடைகளிலும் விற்பனை தொகையை கடை ஊழியர்கள் இரவில் பணி முடிந்த பிறகு வீட்டுக்கு எடுத்து செல்லும் சூழல் ஏற்படுகிறது. அவ்வாறு எடுத்தும் செல்லும் போது கொள்ளையர்கள் அவர்களிடம் இருந்து பணத்தை கொள்ளை அடித்து செல்லுகின்ற நிலை இன்று ஏற்பட்டுள்ளது.
பணத்தை கடைகளில் வைத்து செல்ல அரசு உத்தரவு போட்டிருந்தும் காவல் துறையினர் கட்டாயம் பணத்தை கடையில் வைத்து செல்ல வேண்டாம். அது பாதுகாப்பாக இருக்க வாய்ப்பில்லை என்று கூறுகின்றனர். அப்படி வீட்டுக்கு எடுத்தும் செல்லும் வழியில் கொள்ளையர்கள் எடுத்து செல்லும் பணத்தை டாஸ்மாக் ஊழியர்கள் தனது கையில் இருந்து கட்ட வேண்டும் என்று அவ்வாறு கட்டவில்லை என்றால் அவர்கள்மீது பொய் வழக்கு போடுகின்றனர்.  திருச்சியில் சோமரசம்பேட்டை காவல் நிலையத்திற்கு உட்பட்ட சுண்ணாம்புகாரப்பட்டியில் பணம் கொள்ளை போனது. காவல் அதிகாரிகள் பணியாளர்கள்மீது கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தி உள்ளனர்.  பணியாள்களின் பாதுகாப்பு கேள்விகுறியா இருந்து வருகிறது.
எனவே டாஸ்மாக் கடைகளில் சில்லரை விற்பனை தொகைகளை தினமும் கடைகளில் பெற்றும் செல்லும் முறையினை நடைமுறைபடுத்த வேண்டும், பணியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுருத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தை மாநில துணைச் செயலாளர் முருகானந்தம் தலைமை ஏற்று நடத்தினார். முன்னிலை மாவட்ட தலைவர் ஜவஹர்லால் நேரு, மாவட்ட அமைப்பு செயலாளர் பெருமாள்,
மற்றும் மாவட்ட நிர்வாகிகள் அன்பழகன், அனந்தகிரி, தனபால் மற்றும் பலர் கலந்து கொண்டனர். மாநில தலைவர் ஐயா கு. பால் பாண்டியன் வாழ்த்துரை வழங்கினர்.. மாநில நிர்வாகிகள் காமராஜ், ஜெய்கணேஷ், பணியாளர் சங்க நிர்வாகி பொது நூலக துறை தோழர் சிவகுமார் மற்றும் திருச்சி மாவட்ட தலைவர் ஜவாஹர்லால் நேரு, செயலாளர் கண்ணன், தோழர் பெருமாள் மற்றும் திருச்சி மாவட்ட தோழர்கள் திரளாக கலந்து கொண்டனர்.


பேட்டி பால்பாண்டி மாநில தலைவர்


0 comments: