Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    

குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு                                                  குளித்தலை  அபாய நிலையில் இருந்த வாய்க்கால் பாலத்தில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ் ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

குளித்தலை- மணப்பாறை செல்லும் சாலையில் வை.புதூர் அருகே உள்ளது இரட்டை வாய்க்கால். இந்த வாய்க்காலுக்கு மாயனூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மிகவும் குறுகிய அளவில் உள்ள இந்த பாலம் இவ்வழியாகத்தான் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் சரக்கு வாகனங்கள் திருச்சி செல்லாமல் பெரம்பலூரில் இருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக துவரங்குறிச்சி சென்று மதுரை சாலையில் இணைகிறது. இதனால் 50 கிமீ குறையும். இதனால் குளித் தலை வழியாக தினமும் ஏரா ள மான சரக்கு லாரிகள், கார்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.
மேலும் குளித்தலையில் இருந்து தோகைமலை, மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, கடவூர், தரகம்பட்டி வரை அரசு மற் றும் தனியார் பஸ்கள் ஏரா ளமாக செல்கின்றன.மேலும் குளித்தலை முசிறியில் இருந் து அய்யர்மலை, பஞ்சப்ப ட்டி, வளையப்பட்டி, கள் ளை, தோகைமலை, திருமகவுண்டனூர், கொசூர் ஆகிய ஊர்களுக்கு டவுன்பஸ்களும்,தனியார் பள்ளி வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றன.
இந்நிலையில் இந்த பால கைப்பிடிச் சுவர்கள் இடிந்து விழுந்து கம்பிகளும் சேதமடைந்தன. இதனால் பாதுகாப்பின்றி எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை  எதிரொலியாக தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் இரும்புக்கம்பிகள் அமைத்து சீரமைத்து ள்ளனர். இந்நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.

0 comments: