Showing posts with label கரூர். Show all posts
Showing posts with label கரூர். Show all posts

Thursday, January 15, 2015

On Thursday, January 15, 2015 by Unknown in ,    
f&h; khtl;lk;.     ehs;; : 07.01.15
kf;fspd; Kjy;th;;; kPz;Lk; Kjyikr;ruhf nghWg;Ngw;f Ntz;b f&h; khtl;l m,mjpKf rhh;gpy; jhe;Njhzp ntq;fl;ukz Rthkp Nfhtpypy;  rpwg;G mgpN\fk;> g+i[fs;; eilngw;wJ. mikr;rh;fs; tp.nre;jpy;ghyh[p> vd;.Rg;gpukzpad; gq;Nfw;G.
   m,mjpKf nghJr; nrayhsUk;> jkpof kf;fspd; Kjy;tUkhd nry;tp n[ n[ayypjh [hkPdpy; tpLjiy ngw;wij m,mjpKftpdh; kl;Lkpd;wp  jkpof kf;fSk; kfpo;r;rp nghq;f jkpofk; KOtJk; tpohf;Nfhyk; Nghy; nfhz;lhb tUfpd;wdh;. ,jid njhlh;e;J f&h; khtl;l m,mjpKf rhh;gpy; jkpof kf;fspd; Kjy;th; tpiutpy; kPz;Lk; jkpof Kjyikr;ruhf nghWg;Ngw;f Ntz;b gy;NtW rpwg;G g+i[fs;> Neh;j;jp fld;fs;> topghLfs;  eilngw;W tUfpwJ. 
,jidaLj;J f&h; khtl;l m,mjpKf rhh;gpy; f&h;;> mUs;kpF fy;ahz ntq;fl;ukz Rthkp Myaj;jpy; ghy;> gd;dPh;> kQ;rs;> re;jdk; kw;Wk; jputpa nghbfis nfhz;L mgpN\fk;> jPghuhjid kw;Wk; g+i[ eilngw;wJ. ,e;epfo;r;rpapy; mikr;rh;fs; tp.nre;jpy;ghyh[p> vd;.Rg;gpukzpad;;> ,uhkehjGuk; khtl;l fof nrayhsh; Mh;.jh;kh; cs;spl;l m,mjpKftpdh; kw;Wk; nghJkf;fs; vd VuhskhNdhh; fye;J nfhz;L Rthkpia topgl;ldh;. ,jidaLj;J gf;jh;fSf;F mz;zjhdk; toq;fg;gl;lJ.




On Thursday, January 15, 2015 by Unknown in ,    



On Thursday, January 15, 2015 by Unknown in ,    


On Thursday, January 15, 2015 by Unknown in ,    


 PAPER MILL OF THE YEAR AWARD 2013-2014
                                                     TO TNPL


TNPL has bagged the ‘IPMA Paper Mill of the Year Award 2013-2014’. Indian Paper Manufacturers’ Association (IPMA) , New Delhi, announces the ’Paper Mill of the Year  Award’ on  alternate years. The award for 2013-14 was given by IPMA to TNPL in New Delhi in the 15th  Annual General Meeting of IPMA held on 9th January 2015. TNPL has received this prestigious  award  on the last occasion for the year 2011-12 also.  The award was received by Shri A Velliangiri, Deputy Managing Director, TNPL from Shri Shailendra Singh IAS , Jt. Secretary, Department of Industrial Policy & Promotion (Paper), Ministry of Commerce & Industry ,Government of India.


TNPL operates with an installed capacity of 4.00 lakh MT per annum. TNPL exports about 20% of its production to over 35 countries . TNPL is currently setting up a state-of-the art Multilayer Double Coated Board Plant with an annual capacity of 2,00,000 tonnes at a capital outlay of Rs.1500 cr.  The project is likely to be completed by December 2015. With the commissioning of the Board Plant,  total production capacity  of TNPL  will rise to 6 lakh MT per annum from financial year 2016-17.

Tuesday, December 02, 2014

On Tuesday, December 02, 2014 by Unknown in ,    

¾Á¢ú §¾º¢Â ¾¨ÄÅ÷ À¢ÃÀ¡¸ÃÉ¢ý À¢È󾿡¨ÇÀðʦ¾¡ðʦÂøÄ¡õ ¦¸¡ñ¼¡¼§ÅñÎõ¸å÷Á¡Åð¼ Á¾¢Ó¸ «ÖÅĸò¾¢ø ¾£÷Á¡Éõ
¸å÷Á¡Åð¼ÁÚÁÄ÷¾¢.Ó.¸ «ÖÅĸò¾¢ø ¸ðº¢Â¢ý Á¡Å𼠫źà ¬§Ä¡º¨É Üð¼õ Á¡Åð¼ ¦ºÂÄ¡Ç÷ Àý¢.§¸.Á½¢ ¾¨Ä¨Á¢ø ¿¨¼¦ÀüÈÐ. þìÜð¼ò¾¢üÌ ¿¸Ã ¦ºÂÄ¡Ç÷ ±ý.À¢.§¸.À¡ÄÓÕý ÓýÉ¢¨Ä Ÿ¢ò¾¡÷. þìÜð¼ò¾¢ø ¾Á¢Æ¸ Áì¸ÙìÌ §¸Î Å¢¨ÇÅ¢ìÌõ Ũ¸Â¢ø «Áអ ¿¾¢ ¿£¨Ã ¾ÎìÌõ Ũ¸Â¢ø À¡õÀ¡üÈ¢ý ÌÚ째 «¨½ ¸ð¼ §¸ÃÇ¡ «ÃÍ ÓÂüº¢òÐ Åó¾Ð þ¾üÌ Á.¾¢.Ó.¸ ¦À¡Ð ¦ºÂÄ¡Ç÷ ¨Å.§¸¡ ¸Îõ ¸ñ¼Éõ ¦¾Ã¢Å¢ò¾§¾¡Î «¾üÌ ±¾¢÷ôÒ ¦¾Ã¢Å¢òÐ Á.¾¢.Ó.¸ º¡÷À¢ø Å¡¸É À¢ÃÃò¨¾ ¨Å.§¸¡ ¦¾¡¼í¸¢É¡÷. þó¾ À¢ÃÃò¾¢üÌ ¬¾Ã× ¦¾Ã¢Å¢ò¾ Ţź¡Â¢¸û ÁüÚõ ¦À¡ÐÁì¸ÙìÌ ¸å÷ Á¡Åð¼ Á.¾¢.Ó.¸ º¡÷À¢ø ¿ýÈ¢ ¦¾Ã¢Å¢ì¸ôÀð¼Ð. §ÁÖõ ¸¡Å¢Ã¢ ¬üÈ¢ý ÌÚ째 ¸÷¿¡¼¸¡ «ÃÍ «¨½ ¸ð¼ ÓÂüº¢òÐ ÅÕ¸¢ÈÐ. þ¾üÌ ±¾¢÷ôÒ ¦¾Ã¢Å¢ò¾ Á.¾¢.Ó.¸ ¦À¡Ð ¦ºÂÄ¡Ç÷ ¨Å.§¸¡ ¾ï¨ºÂ¢ø Á¡¦ÀÕõ âø ÁÈ¢ÂÄ¢ø ®ÎÀð¼¡÷. þó¾ ÁÈ¢Âø §À¡Ã¡ð¼ò¾¢ü ´òШÆôÒ ¿ø¸¢Â Ţź¡Â¢¸ÙìÌõ¦À¡ÐÁì¸ÙìÌõ ¸å÷Á¡Åð¼Á.¾¢.Ó.¸ º¡÷À¢ø ¿ýÈ¢ ¦¾Ã¢Å¢ì¸ôÀð¼Ð.ÅÕõ26õ¾Á¢Æ÷§¾º¢Â¾¨ÄÅ÷À¢ÃÀ¡¸ÃýÀ¢Èó¾¿¡Ç ÓýÉ¢ðÎ ¸å÷ Á¡Åð¼ò¾¢ø ¿¸Ã, ´ýÈ¢Â,§Àå÷¸Æ¸º¡÷À¢ø Á.¾¢.Ó.¸ ¿¢÷Å¡¸¢¸ûÅ£ðÊøº÷츨æÀ¡í¸ø ¨ÅòЫ¨ÉÅÕìÌõþÉ¢ôÒÅÆí¸¢¦¸¡ñ¼¡ÎÅбɾ£÷Á¡É¢ì¸ôÀð¼Ð.
§ÁÖõþìÜð¼ò¾¢ø ÅÕõ ʺõÀ÷ Á¡¾õ4õ§¾¾¢¾Á¢Æ¸ò¾¢ø âý ÁРŢÇìÌ«ÁøÀÎò¾§¸¡Ã¢Á.¾¢.Ó.¸º¡÷À¢øÁ¡¦ÀÕõ¬÷À¡ð¼í¸ûÁ¡Å𼾨Ŀ¸Ãí¸Ç¢ø¿¼ò¾ôÀθ¢ÈÐ.¸å÷Á¡Åð¼Á.¾¢.Ó.¸º¡÷À¢ø ¿¨¼¦ÀÚõ þó¾ ¬÷À¡ð¼ò¾¢üÌ ¦À¡ÐÁì¸Ùõ,Ž¢¸÷¸Ùõ ´òШÆôÒ ¿øÌÁ¡Ú Á¡Åð¼ Á.¾¢.Ó.¸ º¡÷À¢ø «¨ÆôÒ Å¢¼ôÀð¼Ð. Óýɾ¡¸ ¸å÷ Á¡Åð¼õ, ÌÇ¢ò¾¨Ä¨Â º¡÷ó¾ ºº¢ ÌÁ¡÷ ÁÚÁÄ÷ Á¡½Å÷ ÁýÈ Á¡¿¢Ä ¦ºÂÄ¡ÇḠ§¾÷ó¦¾Îì¸ôÀð¼¾üÌ ¸å÷ Á¡Åð¼ Á.¾¢.Ó.¸ ¦ºÂÄ¡Ç÷ Àý¢.§¸.Á½¢ À¡Ã¡ðÎ ¦¾Ã¢Å¢ò¾¡÷. §ÁÖõ þìÜð¼ò¾¢üÌ Á¡Åð¼ ¦À¡ÕÇ¡Ç÷ ¬÷ò¾¢Â¡.¦À¡ýÛº¡Á¢, Á¡¿¢Ä þÄ츢 «½¢ Ш½ ¦ºÂÄ¡Ç÷ ¦À¡ò¾ë÷ ®ÆÀ¡Ã¾¢, «Ãº¢Âø ¬ö× ¨Á ¯ÚôÀ¢É÷ º£É¢Å¡º ¦ÀÕÁ¡û, ÁÚÁÄ÷ Á¡½Å÷ ÁýÈ ¦ºÂÄ¡Ç÷ ÌÇ¢ò¾¨Ä ºº¢ÌÁ¡÷, Á¡Åð¼ Ш½ ¦ºÂÄ¡Ç÷¸û §¸ºÅý, Å¢§É¡¾¢É¢ ¾í¸§ÅÖ, Á¡Åð¼ þ¨Ç»Ã½¢ «¨ÁôÀ¡Ç÷ «ÕûÓÕ¸ý, ¾¡ó§¾¡ýÈ¢ ¿¸Ã ¦ºÂÄ¡Ç÷ ºò¾¢Âã÷ò¾¢, þÉ¡õ ¸å÷ ¿¸Ã ¦ºÂÄ¡Ç÷ «õÁý ¾í¸Ã¡ˆ, ´ýȢ ¦ºÂÄ¡Ç÷¸û «ÃÅìÌȢ ¸¨ÄÂúý, ¾¡ó§¾¡ýÈ¢ ¸À¢É¢ º¢¾õÀÃõ, ¸å÷ Á¢ýÉ¡õÀûÇ¢ þÇí§¸¡, ¸.ÀÃÁò¾¢ ¦¾üÌ ¸ó¾º¡Á¢, żìÌ ¸Ã¢Â¡õÀðÊ þÇí§¸¡, ¸¼ç÷ żìÌ ¸§½ºý, ¦¾üÌ ÓÕ§¸„ý, ¸¢Õ‰½Ã¡ÂÒÃõ §ÁüÌ ¾Á¢ú¦ºøÅý, ¸¢ÆìÌ ºí¸ôÀ¢û¨Ç, ¾¡ó§¾¡ýÈ¢ ¸¢ÆìÌ ¦¾ýÈø, ¦À¡ÐìÌØ ¯ÚôÀ¢É÷¸û ¾ñ¼À¡½¢, Ó¸ÁÐ þŠÁ¡Â¢ø, ¸å÷ ¿¸Ã ¿¢÷Å¡¸¢¸û ÌðÅ¢ø º¢ýɺ¡Á¢, À¢.¦ºøÅý, ¸ÀÊ Ã¡ƒ¡, ¿£Ä¢§ÁÎ ¬Éó¾ý, À¢.±Š.âÀ¾¢, ±Š.¬÷.ÍôÀ¢ÃÁ½¢, §¸.±ý.À¡Ò, ÓòÐáˆ, «Ã¨Å ÃÅ¢, «ã÷¾£ý, ¦¼öÄ÷ ¸ñ½ý, ÌÇ¢ò¾¨Ä Á¡½¢ì¸Å¡º¸õ ¯ûǢ𼠸𺢠¿¢÷Å¡¸¢¸û ÀÄ÷ ¸ÄóÐ ¦¸¡ñ¼É÷.



Sunday, November 23, 2014

On Sunday, November 23, 2014 by Unknown in ,    
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி                       கரூரைச் சேர்ந்த பாரதி என்ற பெண், மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கும்பரத நாட்டியத்தைக் கற்றுக் கொடுத்து அதிசயிக்க வைத்துள்ளார்.  
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி
 தமிழ்நாட்டின் பாரம்பரியமிக்கதும், மிகத் தொன்மை வாய்ந்த கலை பரத கலையாகும். பரதநாட்டியம் பரதமுனிவரால் உண்டாக்கப்பட்டதாகவும் அதனாலயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதே வேளையில் பரதம் என்ற சொல் ப-பாவம், ர-ராகம், த-தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது.   கரூர் கிழக்கு நஞ்சைய தெருவில் வசித்து வருகிறார். பாரதியின் தந்தை நாகராஜன் ஜவுளி தொழில் ஏற்றுமதி செய்து வருகிறார். தாய் மகாலட்சுமி கணவருக்கு உதவியாக உள்ளார். சகோதரர் பாலுச்சாமி எம்.பி.ஏ. பட்டதாரி.இதில் பாவம் - உணர்ச்சியையும், ராகம்-இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம் சேர்ந்த நடனம்தான் பரத நாட்டியம். தற்போது இக்கலை மேற்கத்திய நடனத்தின் மோகத்தால் அழிந்து வரும் நிலையில் பரத கலையில் மிகுந்த நாட்டம் கொண்டு தன்னையே அதற்காக அர்ப்பணித்து, கலையை வளர்க்கும் நோக்கத்தோடு இந்தியாவில் உள்ள 18 சித்தர்கள் கோவில்களில் பரத நாட்டிய நிகழ்ச்சிகள் நடத்தியவர் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாரதி.
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி
பாரதி தற்போது சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டிய பட்ட படிப்பு படித்து வருகிறார். தனியார் பள்ளி ஒன்றில் அவர் நடனம் கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தபோது கிடைத்த இடைவெளியில் அவர் அளித்த பேட்டியிலிருந்து....
நான் 4-வது படிக்கும்போது பரதநாட்டியம் கற்றுக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது. என் வீட்டின் அருகில் உள்ள சுஜாதா என்பவரை குருவாக ஏற்று பரத கலையை கற்று தேர்ந்தேன். பிறகு சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் சிவலோநாதன் என்பவரிடம் கற்றுக் கொண்டேன். மாவட்ட அளவிலான பரதநாட்டிய போட்டிகளில் பலமுறை முதல் இடத்தில் வெற்றி பெற்றுள்ளேன். மாநில அளவிலான போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளேன். அதற்குப் பிறகு பரதநாட்டியத்தில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. எனவே போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்தேன்.  அதன் பிறகு தஞ்சை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டிய பட்டய படிப்பு முடித்த நான் அதற்கான ஆசிரியர் பயிற்சியும் முடித்தேன்;. மேலும் பரதகலையை பற்றி அறிய தற்போது பட்டப்படிப்பு படித்து வருகிறேன். என்னுடைய இந்த 9 வருட காலத்தில் 400-க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளேன். கோவில்களில் மட்டுமே பரத நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளேன்.                       தமிழக அரசின் விருதான "கலை இளமணி" விருது கரூர் தமிழ்ச்சங்கம் வழங்கிய "கலை இசைவாணி" "வெற்றிச் செல்வி" "இளம் நாட்டிய தாரகை" "பரதகலா நிதி" "கலை அரசி" "நவரச நாட்டிய திலகம்" "அபிநய நாட்டிய கலாமணி" "அன்னபூரணி" இதுபோன்று 10-ற்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியுள்ளேன்.                  சுனாமியின் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக கரூரில் பல இடங்களில் நடனமாடி பல ஆயிரத்திற்கும் மேலான தொகையை நிவாரண நிதியாக வழங்கியது எனக்கு மனநிறைவைத் தந்தது. அதேபோல கரூரில் மாற்றுத்திறனாளிகளின் காப்பகத்தில் உள்ள வாய் பேசமுடியாத, காது கேளாத குழந்தைகள் சுமார் 40 பேருக்கு கட்டணம் ஏதுமின்றி பரதநாட்டியம் கற்றுத் தந்தது என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம். பரத கலை மீது எனக்கு இருந்த ஈடுபாட்டின் காரணமாக அக்கலையை பரப்பும் நோக்கத்தோடு தமிழக இந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று தமிழகம் மற்றும் வெளி மாநிலங்களில் உள்ள 18 சித்தர்கள் வாழ்ந்த, முக்தியடைந்த, சன்னிதானம் உள்ள திருக்கோவில்களில் "பரத கலைப்பயணம்" என்ற பயணத்தை மேற்கொண்டு அனைத்து திருத்தலங்களிலும் பரதநாட்டிய நிகழ்ச்சியை நடத்தியுள்ளேன்.
மாற்றுத் திறனாளிகளும் கற்கலாம் பரதம்... நம்பிக்கை தரும் கரூர் பாரதி
இக்கலைப்பயணத்தில் தமிழகத்தில் உள்ள சிதம்பரம், ராமேஸ்வரம், திருவண்ணாமலை, மதுரை உள்ளிட்ட 15 கோவில்களிலும், வெளி மாநிலங்களான ஆந்திராவில் திருப்பதி, கேரளாவில் திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி, உத்தரப்பிரதேசத்தில் காசி ஆகிய கோவில்கள் அடங்கும். இப்பயணம் என் வாழ்நாளில் மறக்க முடியாத அனுபவம்.இந்நிகழ்ச்சிக்காக கரூரில் கலெக்டர் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. அதுமட்டுமின்றி தமிழ்ச்சங்கம் பரதக்கலைப் பயணத்தின் அனுபவத்தை தொகுத்து நூலாக வெளியிட்டுள்ளனர்.இரண்டாம் கட்ட பயணமாக கர்நாடகாவில் உள்ள கொல்லூர் மூகாம்பிகா, உடுப்பி கிருஷ்ணர், தர்மஸ்தலா அன்னப்ப சுவாமி, சிருங்கேரி சாரதாம்பாள், கொரநாடு அன்னபூரணி, கட்டல் துர்கா பரமேஸ்வரி கோவில்களில் பரத நிகழ்ச்சி நடத்தியுள்ளேன் என்று கூறினார்.உங்கள் வாழ்க்கையின் லட்சியம் என்ன என்று கேட்ட போது உலகெங்கும் சென்று பரதகலையை பரப்ப வேண்டும். இக்கலையில் ஆர்வம் உள்ள ஏழை, எளிய குழந்தைகளுக்கு இலவசமாக நாட்டியம் கற்றுத் தரவேண்டும். பிற்காலத்தில் நாட்டியக் கல்லூரி அமைத்து அதன் மூலம் பரதக்கலையை வளர்க்க வேண்டும் என்றார் பாரதி.

Tuesday, November 18, 2014

On Tuesday, November 18, 2014 by Unknown in ,    

புதுப்பட சிடிக்கள் விற்ற 2 பேர் கைது            கரூரில் புதுப்பட சிடிக்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து கரூர் செங்குந்தபுரம் 2வது குறுக்குத்தெரு பகுதியில் விற்பதற்காக புதுப்பட சி.டிக்களை கொண்டு சென்ற பாலன்(45) என்பவரை பின் தொடர்ந்து சென்ற கரூர் டவுன் போலீசார் அவரை கைது செய்து அவரிடமிருந்த 6 புதுப்பட சி.டிக்களை பறிமுதல் செய்தனர். இதேபோல் சின்னாடாங்கோயில் பகுதியில் 6 புதுப்பட சி.டிக்களை வைத்திருந்த சண்முகம்(22) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடமிருந்த சி.டிக்களை கைப்பற்றினர்

On Tuesday, November 18, 2014 by Unknown in ,    

கரூர் பஸ் நிலையத்தில் ஓடும் இலவச கழிப்பிட கழிவுநீர் நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் மனு  கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் தங்கள் கோரிக்கை குறித்து மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர்.

கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமை வகித்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கோரிக்கை குறித்து வந்திருந்த பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு துறை அதிகாரிகளிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
இதனடிப்படையில், இஸ்லாமிய உலமாக்கல் மற்றும் பணியாளர்கள் நலச்சங்கத்தினர் அளித்த மனுவில், கரூர் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல அலுவலகம் மூலம் உறுப்பினர்கள் மற்றும் பணியாளர் நலவாரியத்தில் உறுப்பினர்களுக்கு நல உதவிகள் வழங்கப்படாமல் உள்ளது. மேலும், உறுப்பினர் அட்டை புதுப்பித்தல், புதிய உறுப்பினர் பதிவு போன்றவை பணிகளும் தாமதமாகி வருகின்றன. எனவே, இது குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்களின் மனுவில் தெரிவித்துள்ளனர்.
மாற்றுத்திறனாளி நாகராஜ் அளித்த மனுவில், தாந்தோணிமலை அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் உள்ள சாலையை தார் சாலையாக மாற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாலவிடுதி காவல் நிலையத்துக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இதேபோல், சீனிவாசபுரம் பகுதியில் உள்ள ரத்தினம் தெருவில் உள்ள சாக்கடை கழிவு நீரை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என இப்பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரும், கரூர் பஸ் நிலைய வளாகத்தில் இலவச, கழிப்பிட கழிவு நீர் பஸ் நிலையம் மத்தியில் பரவி வருவதை தடுக்க வேண்டும், பஸ் நிலைய பயணிகள் நடைபாதை ஆக்ரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும், மாலை நேரங்களில் பஸ்களில் அதிக கூட்டம் காரணமாக பள்ளி மாணவ, மாணவிகள் அவதிப்படுவது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மாவட்ட பகுதிகளில் துண்டிக்கப்பட்ட குடிநீர், இணைப்புகளுக்கு மீண்டும் குடிநீர் இணைப்பு வழங்கிட வேண்டும் எனவும் லோக்சத்தா கட்சியின் மாநில விவசாய அணிச் செயலாளர் அருணாசலம் வழங்கியுள்ள மனுவில் தெரிவித்துள்ளனர். இந்த மனுக்கள் மட்டுமின்றி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து அடிப்படை வசதிகள் மற்றும் உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் மனுக்கள் வழங்கப்பட்டன.
On Tuesday, November 18, 2014 by Unknown in ,    

டாஸ்மாக் ஊழியரிடம் தகராறு: ஒருவர் கைது                                                                             கரூரில் டாஸ்மாக் ஊழியரிடம் தகராறில் ஈடுபட்டவரை போலீசார் கைது செய்தனர்.

கரூரை சேர்ந்தவர் கார்த்திக் (26). இவர் அப்பகுதியில் உள்ள தியேட்டர் அருகே  ஒரு டாஸ்மாக் கடையில் வேலை செய்கிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 5 மணி அளவில் அங்கு வந்த வெங்கமேட்டை சேர்ந்த பொன்னுசாமி(53) என்பவர் கடையை திறக்கச் சொல்லியும், சரக்கு தரச்சொல்லியும் கார்த்திக்கிடம்  தகராறு செய்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் கரூர் டவுன் போலீசார் பொன்னுசா மியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.                 

On Tuesday, November 18, 2014 by Unknown in ,    

கடன் தொல்லை டீ மாஸ்டர் தற்கொலை                                                       கரூரில் கடனை திருப்பிக்கொடுக்க முடியாமல் மனமுடைந்த டீக்கடை தொழிலாளி   விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

கரூர் வாய்க்கால் சந்து பகுதியை சேர்ந்தவர் சேகர்(40). டீ மாஸ்டராக வேலை பார் த்து வந்தார். இவர் டிபன் கடை வைக்க கடன் வாங்கியிருந்தார். ஒரு வருடம் ஆகியும் கடனை கொடுக்க முடியவில்லை. இதனால் மனமுடைந்த சேகர் விஷம் குடித்து  தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கரூர் டவுன் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
On Tuesday, November 18, 2014 by Unknown in ,    

3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்3 ஏழைகளின் மருத்துவ சிகிச்சைக்காக தனது 40வது மாத ஊதியத்தை அளித்த அதிமுக எம்.எல்.ஏ காமராஜ்கரூர் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராயபுரம் சட்டசபைத் தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டவர் அதிமுகவைச் சேர்ந்த காமராஜ். இவர் உறுப்பினராக தேர்ந்தெடுக்கபட்டதிலிருந்து தனது எம்.எல்.ஏ. பதவிக்கான மாதச் சம்பளத்தை ஒவ்வொரு மாதமும் கரூர் மாவட்டதிற்குட்பட்ட பகுதியில் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்கள், கட்சியின் மூத்த உறுப்பினர்கள், மாநிலத்தில் முதலிடம் பிடித்த ஏழை மாணவனின் மருத்துவபடிப்புக்கு ஊக்கநிதி, மனநலம் பாதித்த குழந்தைகளுக்கான உதவி என மாதா மாதம் வழங்கி வருகிறார்.

இடையில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டபோது தனது மாதச் சம்பளத்தை கோவில்களுக்கும், பிறவற்றுக்கும் தானமாக அளிக்கவும் செய்தார்.இந்த நிலையில், இன்று ஆத்தூரில் வசிக்கும் சுகன்யா என்பவருக்கு ஹிரண்யா அறுவை சிகிச்சைக்காகவும், தீபக் என்பவருக்கு மூலநோய் மேல் சிகிச்சைக்காவும், விஜயலட்சுமி என்பவருக்கு புற்றுநோய் மேல் சிகிச்சைக்காவும் தனது 40வது மாத ஊதியத்தை வழங்கி ஆறுதல் தெரிவித்தார் எம்.எல்.ஏ காமராஜ்.
நிதி உதவியை பெற்று கொண்ட பயனாளிகள் தமிழக முதல்வருக்கும், எம்.எல்.ஏவுக்கும் நன்றி தெரிவித்தனர்.

Sunday, November 16, 2014

On Sunday, November 16, 2014 by Unknown in ,    
கரூர் மாவட்ட கூட்டுறவு துறை மூலம் 61–வது கூட்டுறவு வார விழா - போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்........
                              கரூர் மாவட்ட கூட்டுறவு துறை மூலம் 61–வது கூட்டுறவு வார விழா கொண்டாடப்பட்டது. கரூரில் நடந்த இந்த விழாவிற்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார். திருச்சிராப்பள்ளி மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராமு வரவேற்றுப் பேசினார். கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் சந்தானம் விளக்கவுரையாற்றினார்.
பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை போட்டியில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–
பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க திட்டங்களை தீட்டி, தமிழக மக்களின் முன்னேற்றம் தான் வாழ்க்கையின் லட்சியம் என்று ஜெயலலிதா அள்ளும், பகலும் அயராது உழைத்து வருகிறார். ஒட்டுமொத்தமாக இந்தியாவில் உள்ள அனைத்து துறைகளிலும், தமிழகம் முன்னேற்றம் அடைய வேண்டும் என்று நினைத்து, தொலை நோக்கு திட்டம் 2023 என்ற சீரிய திட்டத்தை ஜெயலலிதா தொடங்கி அதற்கான நிதியையும் வழங்கி உள்ளார்.
கூட்டுறவு சங்கத்திற்கு நியாயமாகவும், நேர்மையாகவும் தேர்தல் நடத்தப்பட்டது. அதன்படி தற்போது கூட்டுறவு சங்கம் சிறப்பாக மக்களுக்கு சேவை செய்யும் இயக்கமாக இயங்கி வருகிறது.
அதன்படி ஜெயலலிதா வழங்கிய திட்டங்கள் மூலம் கூட்டுறவு சங்கம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உள்ளது.
இதே போன்று விவசாயிகளின் வாழ்க்கை முன்னேற்றம் அடைய கடந்த 2011–12–ம் ஆண்டு விவசாயத்திற்காக ரூ.3 ஆயிரம் கோடி பயிர் கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் நிர்ணயிக்கப்பட்ட இலக்கையும் மிஞ்சி ரூ.3 ஆயிரத்து 280 கோடி ரூபாயை விவசாயிகளுக்கு ஜெயலலிதா வழங்கினார்.
இதே போன்று 2012–13–ம் ஆண்டு ரூ.4 ஆயிரம் கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் கூடுதலாக 69 ஒதுக்கி, ரூ.4069 கோடி வழங்கப்பட்டு உள்ளது. இதே போன்று 2013–14–ம் ஆண்டு ரூ.4,500 இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.4,716 கோடி விவசாய மக்களுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவில் கடந்த நிதி ஆண்டில் உணவு மானியமாக ரூ.5 ஆயிரத்து 300 கோடி வழங்கி உணவுக்கு உத்திரவாதம் கொடுத்தவர் ஜெயலலிதா.
இதே போன்று கரூர் மாவட்ட விவசாயிகளுக்கு கடந்த 2011–12–ம் ஆண்டு ரூ.92 கோடியே 90 லட்சம் பயிர் கடன் வழங்கப்பட்டு உள்ளது. அதே போன்று 2012–13–ம் ஆண்டில் ரூ.112 கோடியே 58 லட்சமும், 2013–14–ம் ஆண்டில் ரூ.132 கோடியே 12 லட்சமும் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் வரை 10 ஆயிரத்து 933 விவசாயிகளுக்கு ரூ.92 கோடியே 17 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டு உள்ளது.
எனவே ஜெயலலிதா வழங்கிய திட்டம் மூலம் தமிழக மக்கள் முன்னேற்ற அடைந்து வருகின்றனர். எனவே வரும் காலத்தில் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
தொடர்ந்து கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ–மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார்.
தொடர்ந்து பல்வேறு விவசாயிகளுக்கு ரூ.3 கோடியே 97 லட்சத்து 75 ஆயிரத்து 550 ரூபாயில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.                  

Friday, November 14, 2014

On Friday, November 14, 2014 by Unknown in ,    

ராஜவாய்க்கால் ஆக்கிரமிப்பால் பாசன நீர்வரத்து பாதிப்பு நடவடிக்கை எடுக்க விவசாயிகள் கோரிக்கை         


கரூர், திருக்காம்புலியூர் பகுதி அமராவதி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 அமராவதி ஆற்றில் இருந்து பிரியும் வாய்க்கால்களில் கரூர் பகுதியில் உள்ள ராஜவாய்க்கால் மிகப் பெரிய வாய்க்காலாகும். அமராவதி ஆற்றில் இருந்து இந்த பாசனவாய்க்கால்களு க்கு தண்ணீர் வருகிறது. பைபாஸ் சாலையில் இருந்து கரூர் குளத்துப்பாளையம், வெங்கமேடு, அருகம்பாளையம் வழியாக பாலம்மாள்புரம், அரசு காலனி வரை நீர் செல்ல வேண்டும். ஆனால் பைபாஸ் சாலையில் வாய்க்கால் அடைப்பு காரணமாக நீர் வரத்து தடைபட்டது. வாய்க்கால் கிளைகளில் ஆக்கிரமிப்புகள் மற்றும் நீர் நிலைகளை மறித்து கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளதே இதற்கு காரணம் என்றும், நாளுக்குநாள் வாய்க்கால் பகுதியில் கட்டடங்கள் பெருகி வருவதால் வாய்க்கால் சுருங்கி வருவதாகவும் விவசாயிகள் கூறுகின்றனர்.
 சமீபத்தில் அமராவதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டும் ஆக்கிரமிப்பு காரணமாக திருக்காம்புலியூர், கரூர் பைபாஸ் சாலையில் உள்ள வாய்க்கால்களுக்கு தண்ணீர் வரவில்லை. வந்த நீரும் வேறு பாதையில் வழிந்தோடி விட்டது.
 கரும்பு, வாழை, நெற் பயிர்கள் சாகுபடிக்கு தயாராக இருந்தும் திறந்து விடப்படும் தண்ணீர் வாய்க்கால் அடைப்பால் வந்து சேரவில்லை. ராஜ வாய்க்காலின் கிளைகளில் ஆக்கிரமிப்புடன், சீத்தை முட்களும் வளர்ந்து காணப்படுகிறது.
அமராவதி அணையில் இருந்து திறந்து விடப்படும் நீர் பல்வேறு வாய்க்கால்களில் பாசனத்திற்கு சென்றாலும் பள்ளபாளையம் ராஜவாய்க்கால்தான் மிகப்பெரிய வாய்க்காலாகும். இந்த வாய்க்கால் அணைப்பாளையம் பகுதியில் தொடங்கி திருமுக்கூடலூர் வரை கடை மடை பகுதி இருக்கிறது. ஆனால் தற்போது பாசன பகுதிகள் என பார்த்தால் அதற்கு முன்னதாக பஞ்சமாதேவி கிராமத்துடன் நிறைவு பெறுகிறது. அமராவதி ஆறுதான் திருமுக்கூடலுர் என்ற இடத்தில் காவிரியுடன் கலக்கிறது.
 இது குறித்து விவசாயி ராமசாமி கூறுகையில், ஆண்டாண்டு காலமாக ராஜவாய்க்கால் நீரை பயன்படுத்தி பாசனம் நடைபெற்று வருகிறது. ஆனால் தற்போது பைபாஸ் சாலை அமைக்கப்பட்டதில் இருந்து வாய்க்கால் ஆக்கிரமிப்பு அதிகமாகிக் கொண்டிருக்கிறது. வாய்க்கால் பகுதியில் பெரிய அளவில் வணிக பயன்பாட்டு கட்டடங்களை கட்டுகின்றனர். மேலும் பிளாஸ்டிக் கழிவுகள் வாய்க்காலில் கொட்டப்படுகிறது. பொதுப்பணித்துறை அதிகாரிகள் வாய்க்கால் எல்லைகளை கண்காணித்து ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில்லை. முன்பு பொதுப்பணித்துறை அமராவதி வடிநிலக்கோட்ட அலுவலகம் கரூரில் இதுவரை  இயங்கிக் கொண்டிருந்தது. கடந்த ஓராண்டாக இங்கிருந்த அலுவலகத்தை தாராபுரத்திற்கு மாற்றி விட்டனர். இதனால் இப்பகுதி அமராவதி பாசன விவசாயிகளுக்கு எந்த தகவலும் தெரிவிக்கப்படுவதில்லை. குறைகளை கூறுவதற்கும் இயலவில்லை என்றார். எனவே சான நீர் தடையின்றி வர ஆக்கிரமிப்புகளை அகற்ற உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.      
On Friday, November 14, 2014 by Unknown in ,    

குளித்தலை -மணப்பாறை சாலையில் இரட்டை வாய்க்கால் பாலம் சீரமைப்பு பொதுமக்கள் பாராட்டு                                                  குளித்தலை  அபாய நிலையில் இருந்த வாய்க்கால் பாலத்தில் பாதுகாப்பு கம்பிகள் அமைக்கப்பட்டதற்கு பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ் ச்சியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர்.

குளித்தலை- மணப்பாறை செல்லும் சாலையில் வை.புதூர் அருகே உள்ளது இரட்டை வாய்க்கால். இந்த வாய்க்காலுக்கு மாயனூரில் இருந்து தண்ணீர் திறந்து விடப்படுகிறது. மிகவும் குறுகிய அளவில் உள்ள இந்த பாலம் இவ்வழியாகத்தான் சென்னையில் இருந்து மதுரை, தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி செல்லும் சரக்கு வாகனங்கள் திருச்சி செல்லாமல் பெரம்பலூரில் இருந்து துறையூர், முசிறி, குளித்தலை, மணப்பாறை வழியாக துவரங்குறிச்சி சென்று மதுரை சாலையில் இணைகிறது. இதனால் 50 கிமீ குறையும். இதனால் குளித் தலை வழியாக தினமும் ஏரா ள மான சரக்கு லாரிகள், கார்கள் இவ்வழியாக சென்று வருகின்றன.
மேலும் குளித்தலையில் இருந்து தோகைமலை, மணப்பாறை, திண்டுக்கல், பழனி, மதுரை, கடவூர், தரகம்பட்டி வரை அரசு மற் றும் தனியார் பஸ்கள் ஏரா ளமாக செல்கின்றன.மேலும் குளித்தலை முசிறியில் இருந் து அய்யர்மலை, பஞ்சப்ப ட்டி, வளையப்பட்டி, கள் ளை, தோகைமலை, திருமகவுண்டனூர், கொசூர் ஆகிய ஊர்களுக்கு டவுன்பஸ்களும்,தனியார் பள்ளி வாகனங்களும் இந்த பாலத்தின் வழியாகவே செல்கின்றன.
இந்நிலையில் இந்த பால கைப்பிடிச் சுவர்கள் இடிந்து விழுந்து கம்பிகளும் சேதமடைந்தன. இதனால் பாதுகாப்பின்றி எந்நேரமும் அசம்பாவிதம் ஏற்படும் நிலை ஏற்பட்டது. இது குறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற பொதுமக்களின் கோரிக்கை  எதிரொலியாக தற்போது நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் பாலத்தில் இரும்புக்கம்பிகள் அமைத்து சீரமைத்து ள்ளனர். இந்நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த  நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுக்கும் அப்பகுதி பொதுமக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்தனர்.
On Friday, November 14, 2014 by Unknown in ,    

அரவக்குறிச்சியில் 3 மணி நேரம் கொட்டித் தீர்த்தது மழை                                                            அரவக்குறிச்சியில் பகுதியில் பெய்த நேற்று 3 மணிநேரம் கொட்டித் தீர்த்த  கன

மழையால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

அரவக்குறிச்சி பகுதியில் நேற்று பகல் முழுவதும் வானில் கரு மேகம் சூழ்ந்திருந்தது. மலை 5 மணியளவில் திடீரென்று கன மழை கொட்ட ஆரம்பித்தது. இடியுடன் பலத்த காற்றும் வீசியது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கனமழை சுமார் 3 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது. இதனால் பூமி குளிர்ந்து இதமான சீதோஷ்ணம் நிலவியது. அரவக்குறிச்சி ஒன்றிய பகுதி முழுவதும் இந்த மழை பெய்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.                         

Wednesday, November 12, 2014

On Wednesday, November 12, 2014 by Unknown in ,    

ஓய்வூதியர் சங்கக் கூட்டம்                                                  தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கக் கூட்டம் குளித்தலையில் உள்ள சங்க அலுவலகக் கட்டிடத்தில் நடைபெற்றது.

கூட்டத்துக்கு சங்கத் தலைவர் மாணிக்கம் தலைமை வகித்தார். செயலாளர் துரைசாமி தீர்மானங்களை வாசித்தார். 363ம் நம்பர் அரசாணையின் தற்போதைய நிலை குறைபாடுகளை நீக்க வேண்டும். காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகள் நீக்க முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக, பொதுச்செயலாளர் சிருங்கேசன் வரவேற்றார். முடிவில் பொருளாளர் வாசுதேவராஜ் நன்றி கூறினார்.                                         

On Wednesday, November 12, 2014 by Unknown in ,    

கூட்டுறவு வார விழா போட்டி நாளை மாற்றம்                                                                                  கரூரில் 61வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா கரூரில் தொடங்குகிறது. கூட்டுறவு வார விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரிகளில் பயி லும் மாணவ, மாணவிகளுக்கு இன்று (12ம் தேதி) ஓவியம், கட்டுரை மற்றும் பேச்சுப் போடடிகள் நடை பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இப்போட்டிகள் அனைத்தும் தவிர்க்கமுடியாத சில காரணங் களால் நாளை (13ம் தேதி) குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட இடத்தில் நடைபெறும் என கூட்டுறவுத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.     

Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by Unknown in ,    
              கூடுதல் கட்டணம் வசூலித்த ஏழு தியேட்டருக்கு அபராதம்                                                                                                                                                                                                                             கரூர் மாவட்டத்தில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததாக, ஏழு சினிமா தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக, கலெக்டர் ஜெயந்திக்கு புகார் வந்தது.கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர், துணைதாசில்தார் அடங்கிய குழுவினர், கரூர் நகர் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், சோதனை மேற்கொண்டனர். கரூர் நகரில், நான்கு தியேட்டர்களில், 25 ரூபாய் டிக்கெட்டை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல், குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ், தலைமையிலான குழுவினர் குளித்தலை, காவல்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் சோதனை செய்ததில், மூன்று தியேட்டர்களில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
On Sunday, November 09, 2014 by Unknown in ,    
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு                                                                                                                                    
கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோணி பொன்நகர் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில், குடிநீர் வழங்குவதற்காக நடைபெறும் திட்டப்பணிகளை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.தான்தோணி பொன் நகர் பகுதியில், 25 கோடியே, 18 லட்சம் மதிப்பீட்டில் ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், அருகில் தரை நிலை நீர் தேக்க நிலையம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் இருந்து குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு, தற்போது, நீர் தேக்க தொட்டியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதாக, பொறியாளர்கள் தெரிவித்தனர். பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.திண்ணப்பா நகர் பகுதியில், 25 கோடியே, 38 லட்சம் மதிப்பில், 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.கரூர் நகர் பகுதியில், இருந்து பசுபதிபாளையம் இணைக்கும் அமராவதி ஆற்றின் குறுக்கே, தற்போது மழை வெள்ளத்தால், சேதமான தற்காலிக தரைப்பாலம், நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு, இரண்டு நாட்களில் சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார்.தான்தோணி பஞ்சாயத்து யூனியன், டி. செல்லாண்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கன்னவாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக கழிப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிகார்த்திகேயன், கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
On Sunday, November 09, 2014 by Unknown in ,    
              அசம்பாவித சம்பவங்களால்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்                                                                                                                                                                                                                       கரூர் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தனர். இப்பிரச்னைக்கு பின், மாயனூர் இன்ஸபெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பிச்சம்பட்டி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.மோதலை தடுக்கச் சென்ற, இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், கோடிலிங்கம், ஏட்டு ஆனந்த் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இரு தரப்பை சேர்ந்த, 42 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, பதட்டம் நிலை ஏற்பட்டதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கிடையில் மாயனூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கரூர் மதுவிலக்கு பிரிவுக்கும், வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், மாயனூர் ஸ்டேஷனுக்கும், மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, தஞ்சாவூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஜயாபுரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வெங்கமேடு ஸ்டேஷனுக்கு வருகிறார்.மாயனூர் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடப்பதால், இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, போலீஸார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.