Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by Unknown in ,    
குடிநீர் தொட்டி கட்டும் பணி - கலெக்டர் ஜெயந்தி ஆய்வு                                                                                                                                    
கரூர் நகராட்சிக்குட்பட்ட தான்தோணி பொன்நகர் பகுதியில், தமிழ்நாடு குடிநீர் வடிக்கால் வாரியத்தின் மூலம் குடிநீர் அபிவிருத்தி திட்டத்தில், குடிநீர் வழங்குவதற்காக நடைபெறும் திட்டப்பணிகளை, கலெக்டர் ஜெயந்தி ஆய்வு செய்தார்.தான்தோணி பொன் நகர் பகுதியில், 25 கோடியே, 18 லட்சம் மதிப்பீட்டில் ஒன்பது லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்கத் தொட்டி கட்டப்பட்டு வருவதையும், அருகில் தரை நிலை நீர் தேக்க நிலையம் கட்டப்படுவதையும் பார்வையிட்டு, பொறியாளர்களிடம் பணியின் தன்மை குறித்து கேட்டறிந்தார்.காவிரி ஆற்றின் கட்டளை பகுதியில் இருந்து குடிநீர் குழாய்கள் பொருத்தும் பணி முடிக்கப்பட்டு, தற்போது, நீர் தேக்க தொட்டியில் குழாய்கள் பதிக்கும் பணி நடைபெறுவதாக, பொறியாளர்கள் தெரிவித்தனர். பணியை டிசம்பர் மாத இறுதிக்குள் முடிக்குமாறு அறிவுறுத்தினார்.திண்ணப்பா நகர் பகுதியில், 25 கோடியே, 38 லட்சம் மதிப்பில், 6.40 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பார்வையிட்டார்.கரூர் நகர் பகுதியில், இருந்து பசுபதிபாளையம் இணைக்கும் அமராவதி ஆற்றின் குறுக்கே, தற்போது மழை வெள்ளத்தால், சேதமான தற்காலிக தரைப்பாலம், நெடுஞ்சாலை துறையின் மூலம் சீரமைக்கப்படுவதை பார்வையிட்டு, இரண்டு நாட்களில் சரி செய்து, மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர கேட்டுக் கொண்டார்.தான்தோணி பஞ்சாயத்து யூனியன், டி. செல்லாண்டிபாளையம் பஞ்சாயத்து யூனியன் துவக்கப்பள்ளி வளாகத்தில் பயன்பாடற்ற கட்டிடத்தை பார்வையிட்டு, அங்கன்னவாடி மையம் வாடகை கட்டிடத்தில் செயல்படுவதால், புதிய கட்டிடம் கட்ட நடவடிக்கை எடுக்குமாறும், மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளதால், கூடுதலாக கழிப்பறை கட்டிடம் கட்ட உத்தரவிட்டார்.நிகழ்ச்சியில், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் ரவிகார்த்திகேயன், கரூர் நகராட்சி கமிஷனர் வரதராஜன், பொறியாளர் புண்ணியமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

0 comments: