Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by Unknown in ,    
              அசம்பாவித சம்பவங்களால்இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்                                                                                                                                                                                                                       கரூர் கிருஷ்ணராயபுரம் அடுத்துள்ள பிச்சம்பட்டி கிராமத்தில், இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில், இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தனர். இப்பிரச்னைக்கு பின், மாயனூர் இன்ஸபெக்டர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் டவுன் பஞ்., பிச்சம்பட்டி கிராமத்தில், பகவதியம்மன் கோவில் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் மது அருந்தி விட்டு, அப்பகுதியில் ரகளையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக, இரு தரப்பினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது.மோதலை தடுக்கச் சென்ற, இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், கோடிலிங்கம், ஏட்டு ஆனந்த் உள்ளிட்டோர் காயமடைந்தனர்.இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார், இரு தரப்பை சேர்ந்த, 42 பேரை கைது செய்தனர். தொடர்ந்து, பதட்டம் நிலை ஏற்பட்டதால், 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.இதற்கிடையில் மாயனூர் இன்ஸ்பெக்டர் சுப்பையா, கரூர் மதுவிலக்கு பிரிவுக்கும், வெங்கமேடு இன்ஸ்பெக்டர் கோடிலிங்கம், மாயனூர் ஸ்டேஷனுக்கும், மது விலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜா, தஞ்சாவூருக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். விஜயாபுரம் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், வெங்கமேடு ஸ்டேஷனுக்கு வருகிறார்.மாயனூர் ஸ்டேஷனுக்குட்பட்ட பகுதியில் தொடர்ந்து, அசம்பாவித சம்பவங்கள் நடப்பதால், இன்ஸ்பெக்டர்கள் மாறுதல் செய்யப்பட்டுள்ளதாக, போலீஸார் வட்டாரத்தில் தெரிவித்தனர்.                           

0 comments: