Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by Unknown in ,    
கரூரில் தி.மு.க. கூட்டத்தில் மோதல்–சட்டை கிழிப்பு: தொண்டர்கள் தள்ளு முள்ளுகரூரில் தி.மு.க. கூட்டத்தில் மோதல்–சட்டை கிழிப்பு: தொண்டர்கள் தள்ளு முள்ளு ....                                     கரூர் மாவட்டத்தில் கரூர் மற்றும் அரவக்குறிச்சி ஒன்றியங்களில் தி.மு.க. உள்கட்சி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலின் போது எழுந்த பிரச்சனைகளை தீர்க்கும் வகையில் இன்று கரூர் அண்ணாநகரில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மாவட்ட பொறுப்பாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இந்த கூட்டத்தில் பிரச்சனைக்குரிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
பிரச்சனை குறித்து சமாதானம் பேசிக் கொண்டிருந்த போது துணைச் செயலாளர் ஆண்டாள் பாலகுரு, மற்றும் நகர செயலாளர் எஸ்.பி.கனகராஜிற்கு இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து ஒருவருக் கொருவர் தாக்கினார்கள். இதில் கனராஜின் சட்டை கிழிந்தது.
இதனை கண்டதும் நன்னியூர் ராஜேந்திரன் கனகராஜை அறிவாலயத்திற்கு வெளியே அழைத்து வந்தார். அப்போது கனக ராஜின் ஆதரவாளர்கள் பாலகுருவை தாக்குவதற்காக தடியுடன் கூடினார்கள். அப்போது அங்கு வந்த அரவக்குறிச்சி எம்.எல்.ஏ. கே.சி.பழனிச்சாமி கூட்டத்தை கலைந்து போகும்படி கேட்டுக் கொண்டார். அப்போது கனகராஜின் ஆதரவாளர்கள் ஆண்டாள் பாலகுரு மற்றும் அவரது ஆதரவாளர்களை தாக்க ஆக்ரோஷமாக பாய்ந்தனர். இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.
அப்போது அங்கு வந்த போலீசார் இரு தரப்பினரையும் கலைந்து போக எச்சரிக்கை விடுத்தனர். மேலும் நிலைமை மோசமானதால் தடியடி நடத்தி அங்கு கூடியிருந்த கும்பலை கலைத்தனர். இந்த சம்பவத்தால் அறிவாலயம் பகுதி போர்க்களமாக காட்சியளித்தது.

0 comments: