Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

தரைப்பாலம் சீரமைக்கும் பணி                              கரூர்  கடந்த 1967ம் ஆண்டு அமராவதி ஆற்றின் குறுக்கே பசுபதிபாளையம் பகுதியில் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. இப்பாலம் பழுதடைந்ததால் உயர்மட்டப்பாலம் இதே இடத்தில் அமைக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். அமராவதி ஆற்றின் குறுக்கே பசுபதிபாளையத்தையும், ஐந்துரோடு பகுதியையும் இணைக்கும் வகையில் புதிய உயர்மட்டப்பாலம் கட்ட தமிழக அரசு அனுமதி வழங்கியது.
கடந்த ஆண்டு அக்டோபர் 14ம்தேதி புதிய பாலப்பணி துவக்கி வைக்கப்பட்டது. பழைய பாலம் இருந்த இடத்திலேயே புதிய பாலம் கட்டப்படுவதால்  பழைய பாலம் முற்றிலும் இடித்து அகற்றப்பட்டது. இந்த இடத்தில் புதிய உயர்மட்ட பாலத்திற்கான தூண்கள் அமைக்கும் வேலை தற்போது நடைபெற்று வந்தது.

 புதிய பாலப்பணிகள் நடைபெறுவதால் பசுபதிபாளையம்- கரூர் இடையே பொதுமக்கள்  போக்குவரத்துக்கு தற்காலிக குழாய் பாலம் இதன் அருகே அமைக்கப்பட்டுள்ளது. புதிய ராட்சத சிமெண்டு குழாய்களை அமைத்து அதன்மேல் மணல் மூட்டைகளை அடுக்கி வைத்து அமைக்கப்பட்ட தற்காலிக பாலத்தில் தற்போது இருசக்கர வாகனங்கள். ஆட்டோக்கள், கார்கள், வேன்கள் சென்று வந்தன. கடந்த ஓராண்டாக இப்பாலத்தில் டூ வீலர்கள், ஆட்டோ, வேன்கள் சென்று வந்தன. மண்பாலம் தொடர்மழை காரணமாக சேறும் சகதியுமாக இருந்தது. இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பெய்த மழையில் அமராவதி அணை நிரம்பியது. ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கடந்த 22ம்தேதி பசுபதிபாளையம் தற்காலிக தரைப்பாலம் நீரில் அடித்துச் செல்லப்பட்டது.

 தற்போது அமராவதி ஆற்றில் வெள்ளநீர் வடிந்து விட்டது. இதனையடுத்து நெடுஞ்சாலை மற்றும் நகராட்சி நிர்வாகத்தினர் தற்காலிக தரைப்பாலத்தை மீண்டும் அமைக்கும் பணியை தொடங்கியுள்ளனர். இருபுறமும் உள்ள அணுகுசாலையை செப்பனிடும் பணி அடுத்து நடைபெற உள்ளதாக அலுவலர்கள் தெரிவித்தனர்.    

0 comments: