Saturday, November 08, 2014

On Saturday, November 08, 2014 by Unknown in ,    

அமராவதி அணையில் நீர் இருப்பு குறுவை சாகுபடி பணி மும்முரம்                          கரூர் அமராவதி அணை நீரை நம்பி விவசாயிகள் நெல், கரும்பு நடவு முன்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையினால் அணை நிரம்பி வந்த காலங்களில் முப்போகம் கரூர் மாவட்டத்தில் சாகுபடியானது. பருவ மழை பொய்த்ததன் காரணமாக அமராவதி அணைக்கு நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் அணை நிரம்புவதும், கரூர் மாவட்டத்திற்கு ஆற்றில் தண்ணீர் வருவதும் எப்போதாவது நடைபெறும் நிகழ்வாக மாறிவிட்டது. மேலும் கரூர் மாவட்டத்திற்கு உரிய நீர்உரிமையும் கடந்த சில ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருகிறது என விவசாயிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை போதிய அளவு கைகொடுக்கவில்லை. இதனால் வேளாண் பணிகளை மேற்கொள்ளவில்லை. சோளம், அவுரி செடி போன்றவைகளை மட்டும் பயிரிடப்பட்டது. 
ஆனால் வடகிழக்கு பருவ மழை காரணமாக அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்ததால் கடந்த மாதம் அமராவதி அணை நிரம்பியது. தற்போதும் நீர்மட்டம் 85அடிக்கு மேல் உள்ளது.
 இதனால் கரூர் மாவட்டத்தில் விவசாயிகள் குறுவை சாகுபடி முன்பணிகளில் ஈடுபட்டிருக்கின்றனர். ஒருபோக சாகுபடியாவது மேற்கொள்ளலாம் என்ற நம்பிக்கையில் உள்ளனர். இதேபோன்று கரும்பு விவசாயிகளும் கரும்பு பயிர் நடவு வேலைகளில் ஈடுபட்டிருக்கின்றனர்.

0 comments: