Sunday, November 09, 2014

On Sunday, November 09, 2014 by Unknown in ,    
              கூடுதல் கட்டணம் வசூலித்த ஏழு தியேட்டருக்கு அபராதம்                                                                                                                                                                                                                             கரூர் மாவட்டத்தில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்ததாக, ஏழு சினிமா தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.கரூர் மாவட்டத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில், கூடுதலாக கட்டணம் வசூல் செய்யப்படுவதாக, கலெக்டர் ஜெயந்திக்கு புகார் வந்தது.கரூர் ஆர்.டி.ஓ., கார்த்திகேயன் தலைமையில், இன்ஸ்பெக்டர், துணைதாசில்தார் அடங்கிய குழுவினர், கரூர் நகர் முழுவதும் உள்ள சினிமா தியேட்டர்களில், சோதனை மேற்கொண்டனர். கரூர் நகரில், நான்கு தியேட்டர்களில், 25 ரூபாய் டிக்கெட்டை, 100 ரூபாய்க்கு விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதே போல், குளித்தலை ஆர்.டி.ஓ., சித்திரைராஜ், தலைமையிலான குழுவினர் குளித்தலை, காவல்காரன்பட்டி ஆகிய இடங்களில் உள்ள சினிமா தியேட்டர்களில் சோதனை செய்ததில், மூன்று தியேட்டர்களில், கூடுதல் கட்டணம் வசூல் செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு கேளிக்கை வரி சட்டப்படி, கூடுதல் கட்டணம் வசூலித்த தியேட்டர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

0 comments: