Friday, August 15, 2014

On Friday, August 15, 2014 by farook press in ,    
அந்தியூர் அரசு மேல்நிலைப்பள்ளிக்கூட வளாகத்தில் அனைவருக்கும் கல்வி இயக்கம், அந்தியூர் வட்டார வளமையம் சார்பில் ஆசிரிய –ஆசிரியைகளுக்கு தமிழ் படித்தல், எழுதுதல், திறன் வளர்த்தல், கற்பித்தல் பயிற்சி 4 நாட்கள் நடைபெற்றது. அந்தியூர் வட்டார வளமைய மேற்பார்வையாளர் சுஜாதா தலைமையில் பயிற்சி அளிக்கப்பட்டது. ஈரோடு மாவட்ட அனைவருக்கும் கல்வி இயக்க கூடுதல் முதன்மை கல்வி அதிகாரி குணசேகரன் கலந்து கொண்டு தமிழ்படித்தல் மற்றும் எழுதுதலில் உள்ள இடர்பாடுகளை குழந்தைகளுக்கு கற்பிக்கும் முறைகள் பற்றி கற்றுக்கொடுத்தார்.
அதைத்தொடர்ந்து ஆசிரியர்களுக்கு குழுவிளையாட்டு மூலம் கலந்துரையாடுதல் மேற்கொள்ளப்பட்டன. இந்த பயிற்சியில் அந்தியூர், அத்தாணி, பிரம்மதேசம், பர்கூர், எண்ணமங்கலம், தேவர்மலை, செம்புளிச்சாம்பாளையம், நகலூர் உட்பட 33 பள்ளிகளில் உள்ள தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் பணியாற்றும் 300–க்கும் மேற்பட்ட ஆசிரிய –ஆசிரியைகள் கலந்து கொண்டனர்.

0 comments: