Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
ஈரோடு மாவட்டம், அந்தியூர் அடுத்த நகலூர், பெருமாபாளையத்தை சேர்ந்தவர் அன்புரோஸ்(வயது- 72). இவர், தனக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலத்தை, மகன்கள் மார்ட்டின், சில்வர் ஸ்டார் ஆகிய இருவருக்கும், சமீபத்தில், பாகபிரிவினை செய்து வைத்துள்ளார்.

இதில் உடன்பட்டு ஏற்படாததால், மூத்தமகன் மார்ட்டின், அடிக்கடி தந்தையிடம் கூடுதல் சொத்து கொடுக்கவேண்டும் என்று கேட்டு தகராறு செய்துள்ளார்.

அத்தோடு, சரிவர வேலைக்கு போகாமல், சும்மா சுற்றிக்கொண்டு, மது அருந்திவிட்டு உள்ளூரில் ரகளையில் ஈடுபட்டு வந்துள்ளார். வழக்கம் போல, நேற்று, அளவுக்கு அதிகமாக மதுகுடித்த மார்ட்டின், எனக்கு மட்டும் சொத்து குறைவாக கொடுத்தாய் என்று சொல்லி பிரச்னை செய்து, அன்புரோஸை தாக்க முயன்றார்.

இதனால், ஆத்திரமடைந்த அன்புரோஸ், தன்னிடம் இருந்த நாட்டு துப்பாக்கியால் மகன் மார்டினை சுட்டுள்ளார். குறி தவறி சுட்டதில், மார்டினின் வயிற்று பகுதியில், பால்ரஸ் குண்டுகள் பாய்ந்ததால், அவர் ரத்த காயத்துடன், உயிர் தப்பினார். அக்கம் பக்கம் இருந்த உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக, அந்தியூர் தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இது தொடர்பாக, அந்தியூர் போலீஸார் வழக்குபதிவு செய்து, அன்புரோஸை கைது செய்து, அவர் வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியை பறிமுதல் செய்தனர்.

0 comments: