Tuesday, December 09, 2014
சேலம்
மாவட்டம், ஓமலூரை அடுத்த சிக்கனம்பட்டி பகுதியை சேர்ந்த கருணாகரன் மகன்
சக்திவேல் (வயது-17). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நூல் மில்லில்
வேலை செய்து வருகிறார். இதேபோன்று மேட்டூர் தாலுகா அரங்கனூர் பகுதியை
சேர்ந்த கூத்தன் மகள் சந்திரா (வயது-22). இவரும் அதே நூல் மில்லில் வேலை
பார்த்து வருகிறார். இருவருக்கும் வேலை செய்யும் இடத்தில் பழக்கம்
ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது.
இதை
தொடர்ந்து கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நூல் மில்லிற்கு வேலைக்கு சென்ற
சக்திவேலை காணவில்லை. இதையறிந்த அவரது உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.
வேலை செய்யும் நூல் மில்லில் விசாரித்தனர். அப்போது சந்திரா என்ற பெண்ணும்
இரண்டு நாட்களாக வேலைக்கு வரவில்லை என தெரிய வந்தது.
உடனே
அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று விசாரித்தனர். அப்போது சேலத்தை அடுத்த
சித்தர் கோவிலில் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் கடந்த இரண்டு
நாட்களாக சந்திராவின் வீட்டில் இருந்து வந்தது தெரியவந்தது. உறவினர்கள்
தேடுவதை அறிந்த காதலன் மற்றும் காதலி இருவரும் ஓமலூர் காவல் நிலையத்தில்
தஞ்சம் அடைந்தனர்.
இதை
அறிந்த இரு வீட்டின் உறவினர்களும் காவல் நிலையத்தில் கூடியதால் பரபரப்பு
ஏற்பட்டது. காதலர்களிடம் பயிற்சி டி.எஸ்.பி. கீதாஞ்சலி விசாரித்தார்.
அப்போது காதலன் சக்திவேலுக்கு இன்னும் திருமண வயதை கடக்கவில்லை என அறிவுரை
கூறி இருவரையும் அவரவர் வீட்டிற்கு பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.
17
வயது சிறுவனை 22 வயது பெண் திருமணம் செய்து கொண்டு ஓமலூர் காவல்
நிலையத்திற்கு வந்தது அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சக்திவேலின்
காதலி சந்திராவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்துள்ளது. ஆனால், அவர் கணவனுடன்
வாழாமல் தாய் வீட்டில் இருப்பது போலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
வாக்குப் பதிவின்போது வாக்காளர்கள் தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்...
-
பாண்டிபஜாரில் மாநகராட்சி கட்டிக்கொடுத்த வணிக வளாகத்தில் போதுமான வியாபாரம் இல்லாததால் வியாபாரிகள், தற்காலிகமாக கடைகளை காலி செய்துவிட்டு நடைப...
-
கடலுர் மாவட்ட முன்னாள் நீதிபதி மாண்புமிகு. வைத்தியநாதன் அவர்கள் !!! திருச்சி பொதுநல வழக்கறிஞர் வேங்கை ராஜா அவர்களின் அலுவலகத்திற்கு வருகை!!...
-
நிலக்கோட்டை, மதுரை அருகே உள்ள சிலைமான் பாசியாபுரத்தை சேர்ந்த கருப்பு மகன் முட்டைகண் பாண்டி. பிரபல ரவுடி. இவரை நேற்று முன்தினம் ஒரு கும்...
-
100 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிய ஒரே முதல்வர் ஜெயலலிதா அமைச்சர் டி . பி . பூனாட்சி புகழாரம் திருச்சி புறநகர்...
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
தூத்துக்குடியில் 8ம் வகுப்பு மாணவி, பிளஸ் 2 மாணவர் உட்பட 3பேர் காணாமல் போனது தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். தூத்துக்குட...
-
திருவண்ணாமலை அருகே ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய காவல் ஆய்வாளர், சிறப்பு உதவி ஆய்வாளரை வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 29) லஞ்ச ஒழிப்புப் போலீஸார் கை...
-
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பண...
0 comments:
Post a Comment