Tuesday, December 09, 2014

On Tuesday, December 09, 2014 by Unknown in ,    
நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அருகே உள்ள வெட்டுக்காடு அருந்ததியர் தெருவை சேர்ந்தவர் மாதவி (வயது-14) (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது). இவர், அருகிலுள்ள திருமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார். 

இதே பகுதியை சேர்ந்தவர் கவிமகன் (வயது-20). என்ஜினீயரிங் பட்டதாரி. இவர்கள் இரண்டு பேருக்கும் ஒரே ஊரை சேர்ந்தவர்கள் என்ற முறையில் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் மாணவி மாதவி கடந்த சில தினங்களாக, கவிமகனிடம் பேசவில்லை. இதையடுத்து அவர் பள்ளிக்கு சென்ற மாணவியிடம் வாக்குவாதம் செய்து கையை பிடித்து இழுத்து அடித்து, பாலியல் தொல்லை செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவி மாதவி பேளுக்குறிச்சி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கவிமகனை கைது செய்தனர்

0 comments: