Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by Unknown in ,    




மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து திருப்பூரில் தேமுதிகவினர் செவ்வாய்க் கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பூர் வடக்கு மாவட்ட தேமுதிக சார்பில் மாநகராட்சி அலுவலகம் முன் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, கட்சியின் வடக்கு மாவட்டச் செயலாளர் தினேஷ்குமார் தலைமை வகித்தார். மாநில உயர்மட்ட குழு உறுப்பினர் அக்பர் முன்னிலை வகித்து உரையாற்றினார்.
தமிழகத்தில் வரலாறு காணாத அளவில் உயர்த்தப்பட்டுள்ள மின்கட்டணத்தால் சிறு, குறுந் தொழில்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஏற்றுமதி வர்த்தகத்திலும் உயர்ந்துள்ள உற்பத்திச் செலவுக்கு ஏற்ப விலை பெற முடியாமல் தொழில் முனைவோர் தவித்துக் கொண்டுள்ளனர். இதேபோல், பால் விலையேற்றம், அத்தியாவசிய பொருட்கள் விலையுயர்வால் அடித்தட்டு மக்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துள்ளனர்.
தொடரும் இப்பாதிப்புகளை கவனத்தில் கொண்டு அரசு உயர்த்தப்பட்ட மின்கட்டணம், பால் விலை ஆகியவற்றை திரும்பப் பெறுவதுடன், அத்தியாவசிய பொருட்கள் விலையேற்றத்தை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மாவட்ட தொழிற்சங்க தலைவர் மணி, மாவட்ட மகளிரணி செயலாளர் சர்மிளாபாரதி உள்பட கட்சி நிர்வாகிகள் நூற்றுக் கணக்கானோர் பங்கேற்றனர்.

0 comments: