Wednesday, December 31, 2014

On Wednesday, December 31, 2014 by Unknown in ,    



போக்குவரத்து தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை அடுத்து திருப்பூர் மாவட்டத்தில் மூன்றாம் நாளான செவ்வாய்க்கிழமை சுமார் 70 சத பேருந்துகள் இயக்கப்படவில்லை. எனினும், பொதுமக்களின் பாதிப்பை கருத்தில் கொண்டு பணிக்கு வந்துள்ள தொழிலாளர்களைக் கொண்டு நகர பேருந்துகளுக்கு முக்கியத்தும் அளித்து இயக்கப்பட்டு வருகின்றன.
ஊதிய உயர்வு, பணிவரன்முறை உள்ளிட்ட 22 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஞாயிற்றுக்கிழமை மதியம் முதல் வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. மூன்றாம் நாளாக தொடர்ந்த இந்தப் போராட்டத்தால் திருப்பூர் 2, காங்கயம், பல்லடம், உடுமலை, தாராபுரம் என திருப்பூர் மாவட்டத்தில் பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் 612 பேருந்துகளில் செவ்வாய்க்கிழமை 400க்கும் அதிகமான பேருந்துகள் இயக்கப்படவி்ல்லை. இதனால், உள்ளூர், வெளியூர் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு இடையே பயணம் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
பணிக்கு வந்திருந்த அண்ணா போக்குவரத்து தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ஓட்டுநர்கள், நடத்துநர்களைக் கொண்டு சுமார் 200 பேருந்துகள் மட்டுமே இயக்கப்பட்டன. அவை உள்ளூர், சுற்றுவட்டார கிராமப்புற பகுதிகளிலிருந்து நகரங்களுக்கு வேலைக்காகவும், இதர தேவைகளுக்காகவும் வந்து செல்லும் பொது மக்கள், தொழிலாளர்கள், மாணவ, மாணவிகள் பாதிப்புகளை கருத்தில் கொண்டு நகர பேருந்துகளுக்கு முக்கியத்துவம் அளித்து போலீஸ் இயக்கப் பட்டன. வெளியூர், வெளி மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகள் குறைத்து இயக்கப்பட்டன. இதன்காரணமாக இயக்கப்பட்ட பேருந்துகளில் கூட்டம் மிகுந்த காணப்பட்டன.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் தொடர்ச்சியாக அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் போக்குவரத்து ஊழியர்கள் திருப்பூர் மாநகராட்சி முன் பிச்சையெடுக்கப் போராட்டமும், தொடர்ந்து சாலை மறியலிலும் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த போலீஸார், தடையை மீறி சாலை மறியலில் ஈடுபட்டதாக அரசு போக்கு வரத்துக் கழக ஊழியர்கள் 42 பேரை கைது செய்தனர்.
அப்போது அரசு போக்குவரத்து ஊழியர்கள் கூறியது: அரசு பேருந்துகள் இயங்காத நிலையில் பெர்மிட் இல்லாத ஊர்களுக்கும் தனியார் பேருந்துகளை இயக்கிட அரசு நிர்பந்தித்துக் கொண்டுள்ளது. இதனால், திருப்பூரில் இருந்து பல ஊர்களுக்கும் செல்லும் தனியார் பேருந்துகளில் நடைமுறை கட்டணத்தைவிட இரு மடங்கு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டுக் கொண்டுள்ளது என்றனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடர்ந்து திருப்பூர் பணிமனைகளில் பேருந்துகள் இயக்கப்படுவதை வனத்துறை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், ஆட்சியர் கு.கோவிந்தராஜ் ஆகியோர் செவ்வாய்க்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ததுடன், கிராமப்புற மக்களுக்கு தங்குதடையின்றி பேருந்து வசதிகள் கிடைக்கச் செய்யவும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அப்போது, மாநகராட்சி துணைமேயர் சு.குணசேகரன், மண்டலத் தலைவர்கள் பலர் உடனிருந்தனர்.

0 comments: