Sunday, January 03, 2016

On Sunday, January 03, 2016 by Unknown in , ,    
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டாட்சியர் அலுவலகத்தில் 3.1.2016 நடைபெற்ற விழாவில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு விலையில்லா வேட்டி சேலையை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன்; 1067 பயனாளிகளுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.
விலையில்லா வேட்டி சேலையை  மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதன் அவர்கள் வழங்கி பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை புத்தாடை அணிந்து கொணடாடும் வகையில் மறைந்த புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் தொடங்கபட்ட உன்னத திட்டமே விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டமாகும். அவர்களை தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அம்மா அவர்களும் இந்த திட்டத்தினை செயல்படுத்தி வருகிறார். மக்களுக்கு வழங்கப்படும் விலையில்லா வேட்டி சேலைகள் தரமானதாகவும் சரியான அளவிலும் தமிழகத்தில் உள்ள 50 ஆயிரம் கைத்தறி நெசவாளர் மூலம் தயாரிக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள நெசவாளர்கள் ஏழை மக்கள்  என இரண்டு தரப்பு மக்களும் பயன்பெறுகின்றனர். வுpலையில்லா வேட்டி சேலை தயாரிப்பதின் மூலம் தமிழகத்தில் 50 ஆயிரம் நெசவாளர்களுக்கு வருடத்தில் 10 மாதங்கள் தொழில் நடக்கிறது. அந்த வேட்டி சேலைகளை வழங்குவதின் மூலம் ஏழை எளிய மக்கள் அணிந்து மகிழ்கின்றனர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த 28.12.2015 அன்று 2016 பொங்கல் பண்டிகைக்கான விலையில்லா வேட்டி சேலை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.அதன்படி தூத்துக்குடி மாவட்டத்தில் 4,01449 விலையில்லா ; வேட்டி சேலைகள் வழங்கப்பட உள்ளது. அதன் துவக்கமாக  1067 பேருக்கு விலையில்லா வேட்டி சேலையை வழங்குகின்றோம் இதை பெறும் நீங்கள் பொங்கல் விழாவை சிறப்பான முறையில் கொண்டாட வேண்டும் என கூறினார். 

0 comments: