Thursday, April 09, 2015
On Thursday, April 09, 2015 by Tamilnewstv in trichy reporter sabarinathan
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைபெற்றது.
திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழுவின் ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் மனுக்கள் குழுவின் தலைவரும் அரசு தலைமைக் கொறடாவுமான மனோகரன் அவர்கள் தலைமையில் இன்று (09.04.2015) நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மனுக்கள் குழுவின் தலைவர் அவர்கள் பேசியது
மக்களின் முதல்வர் அம்மா அவர்களின் வழிகாட்டுதலின்படிää திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் ஏறத்தாழ 144 பணிகள் முடிவுற்றும்ää சில பணிகள் முடியும் தருவாயிலும் உள்ளது. ஸ்ரீரங்கம் பஞ்சக்கரை சாலையில் ரூ.47.90 கோடி மதிப்பில் நவீன வசதிகளுடன் கூடிய யாத்திரிகர்கள் தங்கும் விடுதிää நவலூர் குட்டப்பட்டில் 44.13 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.40 கோடி மதிப்பில் மகளிர் தோட்டக்கலைக் கல்லூரிää ரூ.22 கோடி மதிப்பில் தரம் உயர்த்தப்பட்ட துணை மின்நிலையம்ää பேரூர் மேக்குடி சாலையில் ரூ.135 இலட்சம் மதிப்பில் இணைப்புப் பாலம்ää காவிரியாற்றின் குறுக்கே ரூ.32 கோடியில் தடுப்பணைää ரூ.100 கோடி மதிப்பில் தேசிய சட்டப்பள்ளிää காவிரிக்கரையில் 25 ஏக்கர் பரப்பளவில் 8.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள வண்ணத்துப்பூச்சி பூங்காவில் மேலும் சுற்றுலாத்துறை மூலம் ரூ.3.3 கோடி செலவில் நட்சத்திர வனம்ää சேதுராப்பட்டியில் 5 ஏக்கர் பரப்பளவில் ரூ.37 கோடி மதிப்பில் பல்வகை தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் 56.39 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.128 கோடி மதிப்பில் தகவல் தொழில்நுட்பக் கழகம் என எண்ணிலடங்கா திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோல்ää சேதுராப்பட்டியில் ரூ. 60.84 கோடி மதிப்பில் அரசு பொறியியல் கல்லூரிää ஸ்ரீரங்கம் தொகுதிää மணப்பாறையில் 1077 ஏக்கர் பரப்பளவில் ரூ. 107 கோடி மதிப்பில் புதிய தொழில்பூங்காää மொண்டிப்பட்டி கிராமத்தில் 874.44 ஏக்கரில் ரூ.1200 கோடி மதிப்பில் பல அடுக்கு காகித அட்டை தயாரிக்கும் ஆலைää கே.கள்ளிக்குடி கிராமத்தில் ரூ. 77 கோடி மதிப்பில் குளிர்பதன வசதியுடன் கூடிய காய்கனி சந்தைää ஸ்ரீரங்கத்தில் ரூ. 25.82 கோடி மதிப்பில் குடிசை மாற்றுவாரிய அடுக்கு மாடி குடியிருப்பு என பல மக்கள் நலத்திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
சட்டமன்ற பேரவை மனுக்கள் குழு பொதுமக்கள் பிரச்சினைகளை நேரடியாக ஆய்வு செய்து பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கக் கூடிய ஒரு குழுவாக உள்ளது. அந்தவகையில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 35 தகுதியான மனுக்களின் மீது ஆய்வும்ää ஏற்கனவே பேரவையினால் பரிந்துரை செய்யப்பட்ட 60 மனுக்கள் மீது மறு ஆய்வும் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்படுகிறது எனத் தெரிவித்தார்.
முன்னதாகää சட்டமன்ற மனுக்கள் குழுவினர் ஸ்ரீரங்கம் மேலூர் சாலையில் 25 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வரும் வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் நட்சத்திர வனம்ää ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனையில் ரூ. 2.80 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள 30 படுக்கைகள் கொண்ட மகப்பேறு பிரிவுää ரூ.1.40 கோடி மதிப்பில் வழங்கப்பட்டுள்ள சிடி ஸ்கேன் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் ஆகியவற்றை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வுக் கூட்டத்தில் மனுக்கள் குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் கணேசன் (உத்திரமேரூர்)ääகிட்டுசாமி (மொடக்குறிச்சி)ää பொன்னுசாமி (தாராபுரம்)ää விஜயலெட்சுமி பழனிசாமி (சங்ககிரி)ää டாக்டர் ஹரிதாஸ் (திண்டிவனம்)ää ராமசாமி (நிலக்கோட்டை)ää சட்டமன்ற பேரவை செயலர் ஜமாலுதீன்ää ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் வளர்மதிää மாண்புமிகு மாநகராட்சி மேயர் ஜெயாää மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் கே.எஸ்.பழனிசாமிää மாவட்ட வருவாய் அலுவலர் தர்ப்பகராஜ்ää ஊரக வளர்ச்சி முகமை திட்டட இயக்குநர் ராமசாமிää மாநகராட்சி ஆணையர் விஜயலெட்சுமிää மாவட்ட வன அலுவலர் இணை இயக்குநர் (சுகாதாரம்) பிரானே~;ää ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சம்சாத்பேகம்ää மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ந.ஆனந்திää பொதுப்பணித்துறை செயற்பொறியாளர்கள் கலைச்செல்வன் (ஆற்றுப்பாதுகாப்பு கோட்டம்)ää ரபீந்திரன் (கட்டடம்)ää கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன்ää துணை மேயர் சீனிவாசன் உட்பட துறை உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருப்பூர், : திருப்பூர் அரசு மருத்துவமனையில் பூட்டிக் கிடக்கும் மண்டல நோய் கண்டறியும் மையத்தை செயல்படுத்த வலியுறுத்தி போராட்டத்தில...
-
திருச்சி திருச்சி ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத் துறை சார்பில் ஊராட்சி பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. திருச்சி ஜோ...
-
OXFORD ENGINEERING COLLEGE, TRICHY 16th Convocation day was held on 25-08-2018 at Oxford Engineering College. The function was preside...
-
திருப்பூர், திருப்பூர் பூக்கடை வீதி சந்திப்பில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்தை சீர் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ம...
-
Blossom Kochhar Aroma Magic launches a new range of Professional Facial Kit in Trichy Trichy, August 6, 2015: Designed to remove...
-
திருச்சி 29.09.18 மத்திய மாநில அரசுகள் பெட்ரோல், டீசலுக்கான வரியை பாதியாக குறைக்க வேண்டும்-திருச்சியில் எல்.ஜே.டி. மாநில பொதுச் செ...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
Hollywood star Richard Gere on Monday met Prime Minister Narendra Modi in New Delhi on Monday. Gere is also chairman of Gere Foundatio...
0 comments:
Post a Comment