Monday, December 28, 2015

On Monday, December 28, 2015 by Unknown in , ,    
ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள கால்வாய் கிராமத்தில் கடந்த 24–ந்தேதி நடந்த கோஷ்டி மோதலில் ஆதிச்சநல்லூரை சேர்ந்த சுரேஷ் (வயது 23) என்பவர் கொலை செய்யப்பட்டார்.
தேர்தல் முன்விரோதம் காரணமாக 2013–ம் ஆண்டு பட்டமுத்து, சண்முகம் ஆகிய இருவர் கொலை செய்யப்பட்டனர். இதற்கு பழிக்கு பழியாக மணிகண்டன் என்பவரை கொலை செய்ய நடந்த முயற்சியில் சுரேஷ் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து செய்துங்கநல்லூர் போலீசார் வழக்குபதிவு செய்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடையவர்களை பிடிக்க ஸ்ரீவைகுண்டம் போலீஸ் துணை சூப்பிரண்டு விஜயகுமார், ஸ்ரீவைகுண்டம் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ், செய்துங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜசுந்தரம் ஆகியோர் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் பட்டமுத்துவின் சகோதரர்கள் சுடலைமுத்து, ரமேஷ், சண்முகத்தின் மகன்கள் அழகு கிருஷ்ணன், வீரபாகு, மற்றொரு முருகன், ஆச்சிமுத்து மற்றும் பலர் மணிகண்டன் உறவினர்கள் மீது தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் கால்வாய் பஞ்சாயத்து தலைவி ராஜவடிவின் கணவரும், முன்னாள் பஞ்சாயத்து தலைவருமான ஆச்சிமுத்துவை நேற்று கைது செய்தனர்.
இந்த நிலையில் மோதல் சம்பவம் குறித்து கொலை செய்யப்பட்ட சுரேஷ் தரப்பை சேர்ந்த மணிகண்டன் மற்றும் அவரது உறவினர்கள் 8 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இதில் மணிகண்டனின் சகோதரர்கள் அய்யப்பன் (43), சுடலைமுத்து (35), முத்துராமன் (31) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் இருதரப்பிலும் பலரை தேடி வருகின்றனர்.

0 comments: