Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
கோவை சிங்கநல்லூர் தொகுதியில் உள்ள நீலிகோணம்பாளையம் பகுதியில் அமைச்சர் ப.மோகன், எம்.எல்.ஏ.,சின்னசாமி ஆகியோர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருடன் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.
கோவை மாநகர மேயர் பதவிக்கு மாநகர மாவட்ட செயலாளர் கணபதி ப.ராஜ்குமார் அண்ணா தி.மு.க.வேட்பாளராக போட்டியிடுகிறார்.அவரை ஆதரித்து கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம், 58வது வார்டு, நீலிகோணம்பாளையம் பகுதியில் உள்ள ராமசாமி லே அவுட், பச்சாபாளையம் விவேகானந்தா நகர்,இந்திரா நகர், சீனிவாச காலனி உள்ளிட்ட பகுதிகள் உள்பட 60 க்கும் மேற்பட்ட இடங்களிலும், 57வது வார்டு மசக்காளிபாளையம் லட்சுமிபுரம், பெரியார் நகர், காந்திநகர், பாரதி நகர் உள்ளிட்ட  50 க்கும் மேற்பட்ட பகுதிகளில் இன்று காலை  பிரச்சாரம் துவங்கியது.விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளரும், தொழிலாளர்துறை அமைச்சருமான ப.மோகன் தலைமையில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் ஆர்.சின்னசாமி எம்.எல்.ஏ. வேட்பாளர் கணபதி ராஜ்குமாருடன் திறந்த ஜீப்பில் வீதி, வீதியாக சென்று பொதுமக்களை நேருக்கு நேர் சந்தித்து, கடந்த 3 ஆண்டில் முதல்வர் ஜெயலலிதா அளித்துள்ள திட்டங்கள் குறித்து, கோவை மாநகராட்சிக்கு ரூ.2378 கோடி நிதி ஒதுக்கீடு இருப்பதையும் விளக்கமாக பேசினார்.அவர்களை வாக்காளர்கள் ஆராத்தி எடுத்து வரவேற்றனர்.
அமைச்சருடன் விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் டாக்டர்.லட்சுமணன் எம்.பி., டாக்டர்.காமராஜ் எம்.பி., எஸ்.ராஜேந்திரன் எம்.பி.,ஜானகிராமன் எம்.எல்.ஏ.,சிங்காநல்லூர் பகுதி செயலாளர் சிங்கை ரங்கநாதன், 58வது வார்டு செயலாளர் பொன்னுசாமி, தொகுதி செயலாளர் மாரப்பன், விழுப்புரம் ஒன்றிய செயலாளர் ராஜசேகர்,பி.ராஜேந்திரன், ஆப்பிள்,கருப்புசாமி,குணசேகரன், இளைஞர் அணி பசுபதி, அம்மா பேரவை ராசுகுமார்,அண்ணா தொழிற்சங்க செயலாளர் அற்புதவேல்,கண்டமங்கலம் ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.
கோவை 37வது வார்டு பகுதியில் உள்ள பீளமேடு, ஹோப் காலேஜ் ஜீவா நகரில் கால்நடைத்துறை அமைச்சர் மேயர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருடன் வீதி, வீதியாக சென்று வாக்கு சேகரித்தார்.

கோவை மாநகராட்சி 37வது வார்டு பீளமேடு ஹோப் காலேஜ் ஜீவா வீதியில் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் டி.கே.என்.சின்னையா தலைமையில் மாநில இளைஞர் பாசறை செயலாளர் திருச்சி குமார், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் வாலாஜாபாத் பா.கணேசன் எம்.எல்.ஏ, காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. சோமசுந்தரம்,ஆகியோர் வேட்பாளர் கணபதி ராஜ்குமாருடன் நேரு வீதி, தண்ணீர் பந்தால் 2 ,தியாகிகுமரன் நகர், வினோபாஜி நகர், குருசாமி நகர் உள்பட 75 கும் மேற்ப்பட்ட இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தனர்.அமைச்சருடன் பகுதி செயலாளர் துரைசாமி, வார்டு  கவுன்சிலர் சால்ட் வெள்ளியங்கிரி ஆகியோர்கள் சென்றனர்.மேலும் திருப்பூர் மாநகர் மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் ஏ.எம்.சதீஷ், சேலம் மாநகர் மாவட்ட செயலாளர் டாக்டர். சதிஷ்குமார், நீலகிரி மாவட்ட செயலாளர் ஊட்டி வினோத் ஆகியோர் 37, 38, 39, 40, 55, 56 ஆகிய வார்டுகளில் ஒவ்வொரு வீடாக சென்று பெண்களிடம் இரட்டை இலை சின்னத்திற்கு வாகு சேகரித்து வருகின்றனர்.

0 comments: