Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by Unknown in ,    



முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக, விஜயகாந்த் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது. இவ்வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரத்தில் 30.8.2012 அன்று தே.மு.தி.க. சார்பில் விஜயகாந்த் பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக கூறி விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
 
இவ்வழக்கு விசாரணையில் ஆஜராவதிலிருந்து விஜயகாந்துக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. 
 
இந்நிலையில் உளுந்தூர் பேட்டை அருகே பிப்ரவரி 2 ஆம் தேதி தே.மு.தி.க. சார்பில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்ட விஜயகாந்த், மனைவி பிரேமலதா, எம்.எல்.ஏ.க்கள் பார்த்த சாரதி, வெங்கடேசன் ஆகியோர் தமிழக அரசு மற்றும் காவல் துறையினரை, அவதூறாக பேசியதாக அரசு வக்கீல் பொன்.சிவா, விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
 
இவ்வழக்கு விழுப்புரம் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது விஜயகாந்த், பிரேமலதா, பார்த்தசாரதி, வெங்கடேசன் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. அவர்கள் சார்பில் வக்கீல்கள் ஆஜராகி நீதிமன்றத்திற்கு வருவதிலிருந்து விலக்கி அளித்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ள அந்த நகலை சமர்பித்து மனுதாக்கல் செய்தனர்.
 
பின் வழக்கை விசாரித்த நீதிபதி இவ்வழக்கு விசாரணையை அக்டோபர் 20 தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

0 comments: