Showing posts with label Chennai. Show all posts
Showing posts with label Chennai. Show all posts
Friday, December 16, 2016
On Friday, December 16, 2016 by Unknown in Chennai
திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இரவு 11.10 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில், "திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையிலும், நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய்த் தொற்றை சீர்செய்வதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவக் குழு ஒன்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மருந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ம் தேதி இரவு வீடு திரும்பினார்.
தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் உடல்நலக் குறைவால் கடந்த 40 நாட்களாக கருணாநிதி எவ்வித பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் யாரும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கட்சி சார்பிலும் அறிக்கை விடப்பட்டிருந்தது.
Wednesday, August 31, 2016
On Wednesday, August 31, 2016 by Unknown in Chennai
தீனதயாளன் (வயது 84). இவரை கடந்த ஜூன் மாதம், சிலை கடத்தல் வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜாமீன் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தீனதயாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 65 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதாகவும், வயதான தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார்.
இந்நிலையில் தீனதயாளனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, தீனதயாளனின் ஜாமீன் மனுவை நீதிபதி மீண்டும் தள்ளுபடி செய்தார்.
Tuesday, May 17, 2016
இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ் நாட்டின் பல பகுதிகளில் நேற்று மழை பெய்தது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் வேதாரண்யத்தில் அதிகபட்சமாக 100 மி.மீ. மழை பதிவாகியது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
இலங்கை, மன்னார் வளைகுடா மற்றும் தென்மேற்கு வங்கக் கடல் அருகே தீவிர குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள் ளது. அதன்காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் சில இடங்களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக வேதாரண்யத்தில் 100 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறலாம்.
இந்நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்யும். தென் தமிழகத்திலும், வட தமிழகத்தின் கடலோர மாவட்டங்களிலும் ஒருசில இடங்களில் கனமழை பெய்யும். வட உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் விட்டுவிட்டு மழை பெய்யும். குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வட தமிழகத்தை நோக்கி மெதுவாக நகர்கிறது. கடல் பகுதியில் 50 முதல் 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுகிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். தூத்துக்குடி, குளச்சல், நாகை, காரைக்கால் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கைக்கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
சென்னையில் இரவு முழுவதும் நகரில் பரவலாக பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்தது. கடந்த 2 மாதங்களாக கடும் வெயிலால் அவதியுற்ற சென்னைவாசிகள் இந்த மழையால்
கண்டிப்பாக இந்த தேர்தல் வித்தியாசமான தேர்தல் தான் என்று சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்களித்துவிட்டு ரஜினிகாந்த் தெரிவித்தார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "அனைவரும் தங்களது கடமையை உணர்ந்து வாக்களிக்க வேண்டும். அது நமது கடமை. கண்டிப்பாக இம்முறை வித்தியாசமான தேர்தல் தான்" என்று தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து பணம் பட்டுவாடா குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "அது குறித்து கருத்துக்கூற விரும்பவில்லை" என்று தெரிவித்தார்.
தமிழகத்தில் தஞ்சாவூர், அரவக்குறிச்சி தவிர 232 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. சென்னை தி.நகரில் சிவகுமார் மற்றும் கார்த்தி ஆகியோர் தங்களது வாக்கை பதிவு செய்தார்கள்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் மத்தியில் பேசிய சிவகுமார், "எல்லா கட்சியுமே மதுவிலக்கை அமல்படுத்துவதாக வாக்குக் கொடுத்திருக்கிறார்கள். யார் ஜெயிப்பாங்க என்பது தெரியாது. யார் ஜெயித்தாலும் முதல் வேலையாக அதை செய்ய வேண்டும்.
தமிழ்நாட்டில் 40 வருடத்தில் 1 கோடி பேரைக் குடிகாரர்களாக ஆக்கிவிட்டோம். 50 லட்சம் பேர் குடி நோயாளியாக இருக்கிறார்கள். குடும்பத்தலைவனைக் குடிகாரனாக்கி அவன் ஈரலைப் பெரிதாக்கி அவனை சாகடித்துவிட்டு இலவசங்கள் என்ற பெயரில் ஏன் வாக்கரிசிப் போடுகிறீர்கள்.
பாலியல் பலாத்காரம் என்று சொல்றோமே அதற்கு காரணம் மது. எவ்வளவு பெரிய கோழையாக இருந்தாலும் 400 மில்லி மது குடித்தான் என்றால் அசாத்திய தைரியம் வருகிறது. அதன் விளைவு அவனுடைய மிருக வெறிக்கு அம்மா, மகள், மனைவி என எந்த வித்தியாசமும் தெரியாது.
95 வருடமாக எந்த ஒடுக்கப்பட்ட சமூகத்திற்காக பெரியார் கஷ்டப்பட்டாரோ அந்த இனம் தான் டாஸ்மாக்கில் செத்துக் கொண்டிருக்கிறது. 7 கோடி மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறேன். முதல் வேலையாக மதுவிலக்கை அமல்படுத்துங்கள் இல்லையென்றால் படிப்படியாக அமல்படுத்துங்கள்" என்று தெரிவித்தார்.
இவர்களில் இருவர் ஒட்டு மொத்தமாக மாநில அளவில் முதலிடம் பிடித்த ஆர்த்தி, ஜஸ்வந்த் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழில் முதலிடம் பெற்ற 4 பேர் விவரம்:
ஆர்த்தி - கிருஷ்ணகிரி, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
ஜஸ்வந்த் - கிருஷ்ணகிரி, ஸ்ரீ வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
ஜெனிபர் ஜெயநந்தினி - நாமக்கல் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
கீர்த்தனா - நாமக்கல் க்ரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
Friday, May 13, 2016
தென்மேற்கு வங்கக்கடலில் இலங் கைக்கு அருகே நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகி, அடுத்த 2 நாட்க ளில் அது வலுவடையும். வெப்பச் ச லனம் காரணமாக மே 15, 16 தே திகளில் தென் தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் கூறியதாவது:
தென்மேற்கு வங்கக்கடலில் இலங்கைக்கு அருகில் நாளை (மே 14) குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை ஒன்று உருவாகும். அடுத்த இரு நாட்களில் (மே 16) இது அதே இடத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும். இதனை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நகரும்போதுதான் அதனால் எந்த அளவுக்கு மழைப் பொழிவு இருக்கும் என்பதைக் கூற முடியும்.
கடந்த 24 மணி நேரத்தைப் பெ ாருத்தவரை வெப்பச் சலனம் காரண மாக தென் தமிழகத்தில் அனேக இடங்களிலும், வட தமிழகத்தில் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங் களிலும் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தைப் பொருத்தவரை (மே 13) வட தமிழகத்தில் உள் மாவட்டங்கள், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் சேலம் மாவட்டம் வாழப்பாடியில் 60 மில்லி மீட்டர், திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை, விருதுநகர் மாவட்டம் திருச்சுழி, திருப்பூர் மாவட்டம் தாராபுரம், தேனி மாவட்டம் உத்தமபாளையம் ஆகிய இடங்களில் தலா 50 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
நாகர்கோவில், பெரம்பலூர், பு துக்கோட்டை மாவட்டம் பெருங்க ளூர், தேனி மாவட்டம் பெரியாறு, கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை ஆகிய இடங்களில் தலா 40 மில்லி மீட்டர், உடுமலைப் பேட்டை, கோவை மாவட்டம் சூலூர், திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், அம்பாசமுத்திரம், செங்கோட்டை, தேனி மாவட்டம் கூடலூர், பெரியகுளம், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, திருச்சி மாவட்டம் முசிறி, புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர், கந்தர்வக்கோட் டை, கோவை ஆகிய இடங்களில் தலா 30 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
வெப்பநிலையைப் பொருத்த வரை நேற்று அதிகபட்சமாக திருத்தணியில் 39 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது. வெப்பச் சலனம் காரணமாக மே 14 ல் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யும். மே 15,16 தேதிகளில் ராமநாதபுரம் , திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, சிவகங்கை, விரு துநகர், தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.
சென்னையைப் பொருத்தவரை மே 13, 14 தேதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸாகவும், குறைந்த பட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
Thursday, May 12, 2016
தமிழகத்தின் அடுத்த முதல்வர் உண்மையான மக்கள் முதல்வராக இருப்பார். 'நாட் ரீச்சபிள்' முதல்வரும், வாய்ப்பு கொடுத்தால் செய்வோம்' என்று கூறும் முதல்வரும் தமிழகத்துக்கு வேண்டாம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
சென்னை, விருகம்பாக்கம் தொகுதியில் பாஜக சார்பில், அக்கட்சியின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிடுகிறார். பிரச்சாரத்துக்கு இடையில் அவர் தி இந்து (தமிழ்) இணையதளத்துக்கு அளித்த சிறப்புப் பேட்டி.
ஒரு மருத்துவராக, அரசியல்வாதியாக நான் உருவானது இங்கிருந்துதான். என்னுடைய மருத்துவப் படிப்புக்காக சென்னை வந்து குடியேறிய தொகுதி விருகம்பாக்கம். 25 வருடங்களாக இங்கேதான் இருக்கிறேன். படிப்பை முடித்து கிளினிக்கை ஆரம்பித்ததும் இதே தொகுதியில்தான். மழை, வெள்ளம் வந்தபோது இங்கே இருந்துதான் மக்களுக்காக பணியாற்றினேன்.
என் சேவையை முதலில் வீட்டிலிருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறேன். தொடர்பு எல்லைக்கு வெளியே உள்ள தற்போதைய சட்டமன்ற உறுப்பினரைப் போல அல்லாமல், 24 மணி நேரமும் மக்களோடு தொடர்பில் இருக்க ஆசைப்படுகிறேன். தொகுதி மக்கள் எந்த நேரமும் என்னைத் தொடர்பு கொள்ளலாம். அவர்கள் அழைப்பதற்கு வசதியாக தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. விருகம்பாக்கம் உதவிக்குழு என்ற பெயரில், விருகம்பாக்க தன்னார்வல இளைஞர்கள் ஒன்றிணைக்கப்படுவார்கள். அவர்கள் உதவி தேவைப்படும் இடங்களுக்கு நேரடியாகச் சென்று பணியாற்ற உள்ளார்கள்.
பிரகாசமாய் இருக்கிறது. மக்களுக்கு எதுவும் செய்யாத அதிமுக கூட்டணி மீது மக்கள் வெறுப்பில் இருகிறார்கள். நான் வெற்றி பெற வேண்டும் என்று, என்னை விட என் தொகுதி மக்கள் அதிகம் விரும்புகிறார்கள். முக்கியக் கட்சி வேட்பாளர்கள் மீது ஏராளமாக புகார்கள் இருக்கின்றன. வழக்குகள் கூட உள்ளன. ஆனால் நான் அவர்கள் செய்யாத பணிகளை விடுத்து, நான் செய்ய உள்ளதைச் சொல்லி ஓட்டு கேட்கிறேன்.
விருகம்பாக்கம் தொகுதியின் முக்கியப் பிரச்சினை, குப்பைகள். அவற்றை முதலில் அகற்ற வேண்டும். அடுத்ததாக சாலை விரிவாக்கம். கோயம்பேடு - ஆற்காடு சாலையை இணைக்கும் காளியம்மன் கோயில் சாலை மிகவும் குறுகலாக இருப்பதால், கடுமையான வாகன நெரிசல் ஏற்படுகிறது. அதனால் சாலை அகலப்படுத்தப்பட வேண்டும். மூன்றாவதாக சாக்கடையைப் போல மாறியுள்ள கோயம்பேடு கால்வாயை தூர் வார வேண்டும். சாக்கடை நீர் வடிகால் திட்டம் கொண்டுவரப்பட வேண்டும். கோயம்பேடு சந்தையில் கொட்டப்படும் காய்கறி மற்றும் பழக்கழிவுகளால், விருகம்பாக்கம் நோய்களைப் பரப்பும் தொகுதியாக மாறியுள்ளது. அதை மாற்ற வேண்டும்.
மோடி அலை இருக்கிறது என்பதைவிட, மோடியின் அவசியம் வெகு நிச்சயமாய் இருக்கிறது. திருமங்கலம் ஃபார்முலா, இலவசங்கள் ஃபார்முலாவைப் பார்த்துவிட்டோம். வளர்ச்சியைப் பேசக்கூடிய மோடி ஃபார்முலாவையும் கொஞ்சம் பார்க்கலாமே?
திராவிடக் கட்சிகள் அல்லாத கட்சிகளில் போட்டியிடும் பெண்கள், பண பலமும் ஆள் பலமும் இல்லாமல் இருக்கின்றனர். இந்நிலை மாற வேண்டும். வேட்பாளராக மட்டும் இருந்துவிடாமல், வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினராகவும் ஆக வேண்டும்.
அவர் நிச்சயம் உண்மையான மக்கள் முதல்வராக இருப்பார். 'நாட் ரீச்சபிள்' முதல்வரும், 'வாய்ப்பு கொடுத்தால் செய்வோம்' என்று கூறும் முதல்வரும் தமிழகத்துக்கு வேண்டாம். தமிழக மக்கள் நல்லதைப் பெற தகுதியானவர்கள். அந்த தகுதியை
காவல் துணை ஆணையர்கள் 2 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை பெருநகர போக்குவரத்து (வடக்கு) துணை ஆணையராக இருந்த டி.மகேஷ்குமார் அம்பத்தூர் துணை ஆணையராகவும், காத்திருப்போர் பட்டியலில் இருந்த கே.பெரோஸ்கான் அப்துல்லா அண்ணா நகர் துணை ஆணையராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை தமிழக அரசின் முதன்மை செயலாளர் அபூர்வ வர்மா வெளியிட்டுள்ளா
குறும்படம் என நினைத்து அதிமுக தேர்தல் பிரச்சார விளம்பரத்தில் நடித்து விட்டதாக அதிமுக, திமுக விளம்பரத்தில் நடித்த கஸ்தூரி பாட்டி விளக்கம் அளித்துள்ளார்.
சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு அதிமுகவும், திமுகவும் போட்டிபோட்டுக் கொண்டு தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்து வருகின்றன. நிமிடத்துக்கு நிமிடம் இரு கட்சிகளின் பிரச்சார விளம்பரங்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
‘‘பெத்த புள்ள சோறு போடல, எனக்கு சோறு போட்ட தெய்வம் புரட்சித் தலைவி அம்மாதான்.’’ என அதிமுக விளம்பரம் ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க, மறுபக்கம், ‘‘வானத்துல பறக்கறவங்களுக்கு நம்ம பிரச்சினை எப்படித் தெரியும்? மக்களைப் பற்றியே கவலைப்படாத ஆட்சி இனி எதுக்குங்க? போதும்மா…’’ என்ற விளம்பரம் ஓடிக் கொண்டிருக்கிறது.
நிமிடத்துக்கு நிமிடம் மாறிமாறி ஒளிபரப்பாகும் இந்த இரு விளம்பரங்களும் தமிழகம் முழுவதும் பேசப்படும் ஒன்றாகி விட்டது. காரணம் இந்த இரு விளம்பரங்களிலும் நடித்தது கஸ்தூரி பாட்டி என்கிற ஒரே நபர்.
இது தொடர்பாக கஸ்தூரி பாட்டி ‘தி இந்து’விடம் கூறியதாவது:
சினிமாவிலும் சிறுசிறு வேடங்களில் நடித்து வருகிறேன். இப்போது குறும்படங்களிலும் நடித்து வருகிறேன். ஏஜென்ட் அழைத்ததால் குறும்படம் என நினைத்து அதிமுக விளம்பரத்தில் நடித்து விட்டேன்.
சில நாட்களில் மீண்டும் நடிக்க ஏஜென்ட் அழைத்தார். அது விளம்பரம் என்பது தெரியும். ஆனால் கட்சி விளம்பரம் என்று தெரியாது.
திமுக விளம்பரத்தில் கடைசியில் ‘போதும்மா..’ என்று சொல்வேன். என்னைப் பார்ப்பவர்கள் எல்லாம் அதனைச் சொல்லி கிண்டல் செய்கிறார்கள். இதனால் சில நாள்களாக வேலைக்கே செல்ல முடியவில்லை.
நான் எந்தக் கட்சியையும் சார்ந்தவள் இல்லை. எனக்கு அரசியல் தெரியாது. ஏஜென்ட் சொன்னதை நம்பி நடித்து விட்டேன். அதிமுக விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ. 1,500-ம், திமுக விளம்பரத்தில் நடித்ததற்காக ரூ.1,000-ம் கொடுத்தார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்தத் தேர்தலில் யார் வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறீர்கள் எனக் கேட்டபோது, ‘யார் வெற்றி பெற்றாலும் எனக்கு மகிழ்ச்சிதான்’ என்றார் கஸ்தூரி பாட்டி.
Saturday, June 27, 2015
பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ஆர்கே நகர் தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தல் அமைதியாக நடந்து முடிந்துள்ளது. ஒருசில இடங்களில் கள்ள ஓட்டு போடுவதாக எழுந்த புகார்களைத் தவிர அமைதியாகவும் விறுவிறுப்பாகவும் வாக்குப்பதிவு நடந்தது. சென்னை ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் முதல்வர் ஜெயலலிதா, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சி.மகேந்திரன், டிராபிக் ராமசாமி உள்பட 28 பேர் போட்டியிட்டனர். இடைத்தேர்தல் நடைபெறும் ஆர்.கே நகர் தொகுதியில் இன்று காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது.
மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்தது.
Sunday, May 03, 2015
சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.18 குறைந்துள்ளது.
ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.2,522க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் ரூ.20,176க்கு விற்பனை ஆகிறது.
24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூ.2,697க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் (10 கிராம்) ரூ.26,970க்கு விற்பனை ஆகிறது.
ஒரு கிராம் வெள்ளி ரூ.39.50க்கு விற்பனை செய்யப்படுகிறது. கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.36,955க்கு விற்பனை ஆகிறது.
"கடமையை உணர்ந்துதான் செயல்படுகிறீர்களா?" என தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள திறந்த மடலில் கேள்வி எழுப்பியுள்ளார்.
அக்கடிதத்தில், "தமிழகத்தைச் சூழ்ந்துள்ள தற்போதைய நிலைமைகள் குறித்து உங்களுடைய கவனத்திற்குக் கொண்டு வரவே இந்தக் கடிதத்தை அனுப்புகிறேன்.
நீங்களும், உங்கள் அமைச்சரவை சகாக்களும், சிறிதும் கவலைப்படாமலும் அறியாமலும் இருக்கும் தமிழகத்தின் யதார்த்த நிலைகள் பற்றி தான் இங்கே நான் குறிப்பிட விரும்புகிறேன்.
மிகப்பெரிய நிறுவனங்கள் எல்லாம் தொழில் தொடங்க ஆர்வத்துடன் நம் மாநிலத்தை நோக்கி அணி அணியாக வந்த காலம் ஒன்று இருந்தது. அப்போது தமிழகம் ஆற்றல் நிறைந்ததாகவும், ஆக்கப்பூர்வமானதாகவும், தொழில்நேயம் கொண்டதாகவும் திகழ்ந்தது.
ஆனால், இன்றைக்கோ தமிழகம் மிகுந்த நோய்வாய்பட்டு அவசர சிகிச்சைப் பிரிவில் (ICU) கவலைக்கிடமாகக் கிடத்தப்பட்டு இருக்கிறது.
உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஒத்திவைப்பு நியாயம்தானா?
நாட்டிலேயே அதிகமான தொழில் முதலீடுகளைப் பெறும் முதல் மூன்று மாநிலங்கள் பட்டியலில் இருந்த தமிழகம் இப்போது, விட்டால் போதும் என்று கம்பெனிகள் ஓடி ஒளியும் முதல் மூன்று மாநிலங்களுள் ஒன்றாகி விட்டது. அரசின் ஆதரவு இல்லாததால் ஃபாக்ஸ்கான், நோக்கியா போன்ற கம்பெனிகள் கதவை மூடிவிட்டு நம் மாநிலத்தை விட்டே வெளியேறிவிட்டன. ஹூண்டாய், ஃபோர்டு, செயின்ட் கோபைன் போன்ற கம்பெனிகள் தங்களது அடுத்த கட்ட விரிவாக்கத்தை மற்ற மாநிலங்களுக்கு மாற்றிக் கொண்டு செல்லவே விரும்புகின்றன. சிறு மற்றும் குறுந் தொழில் நிறுவனங்கள் கடந்த நான்கு வருடங்களாகச் செத்து மடிந்து கொண்டிருக்கின்றன.
தொழிலதிபர்களைச் சந்திக்க "சரியான" முதலமைச்சர் இல்லாததால் மிகவும் விளம்பரப்படுத்தப்பட்ட "உலக முதலீட்டாளர்கள் மாநாடு" இரண்டு முறை தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த மாநாட்டின் விளம்பரங்களுக்காக மக்கள் வரிப்பணத்தில் இருந்து 100 கோடி ரூபாயை வீணடித்துள்ளீர்கள். இந்த மாநாட்டின் மூலம் 76,000 கோடி ரூபாய் முதலீடு வரப்போகிறது என்று கூறினீர்கள்.
70 சதவீத பட்டதாரிகள் வேலையின்றி தவித்துக் கொண்டிருக்கும் தமிழகத்தில் 76,000 கோடி ரூபாய் முதலீடு மூலம் எத்தனை வேலை வாய்ப்புகளை உருவாக்கியிருக்க முடியும் என்பதை நீங்கள் உணர்ந்துள்ளீர்களா? உங்கள் அரசுக்கு இளைஞர்களின் எதிர்காலத்தைப் பற்றி ஏதாவது அக்கறை உண்டா? லட்சக்கணக்கான இளைஞர்களின் எதிர்கால கனவுகளை அழித்துக் கொண்டிருக்கிறீர்களே, இது நியாயமா?
அறிவிப்புகள் மட்டும்தானா?
உங்கள் அரசால் எண்ணற்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, அவையெல்லாம் வெற்று அறிவிப்புகளாக காகிதங்களில் முடங்கி உள்ளனவே தவிர, அதற்கு செயல் வடிவம் தருவதற்கான அறிகுறி எதுவும் தென்படவில்லை.
பெரிய அளவிலான உள்கட்டமைப்புத் திட்டங்கள் ஏதும், இதுவரை உங்கள் ஆட்சியில் செயல்படுத்தப்படவில்லை. உங்கள் அரசாங்கத்திற்கு, மாநில முன்னேற்றத்திற்கான தொலைநோக்குப் பார்வையும் இல்லை. அதனால் அரசு நிர்வாகமே இன்றைக்கு ஸ்தம்பித்துப் போய் நிற்கிறது.
கடந்த நான்கு வருடங்களில் மக்களைப் பெரிதும் அச்சுறுத்தும் அளவிற்கு குற்றங்கள் பெருகி விட்டன. குறிப்பாகக் குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகமாகி விட்டன. மின் பற்றாக்குறை கட்டுக்கடங்காமல் கைமீறிச் சென்று விட்டது.
ஊழல் மலிந்துவிட்டது:
ஊழல் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறது. கோடை வெயிலில் அவதிப்படும் மக்களின் போக்குவரத்திற்குப் பெரிதும் பயன்படும் 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான குளிர்சாதன மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரை முடிவடைந்தும் திறந்து வைக்க யாருக்காக காத்திருக்கிறீர்கள்? ஒரு திறப்பு விழாவிற்குக் கூட தலைமை தாங்க முடியாத ஒரு முதல்வராக இருக்கிறீர்களே.
கண் அசைவுக்காக காத்திருப்பதா?
நம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை முற்றிலும் அழித்தொழிக்கும் வகையில் அணை கட்ட கர்நாடக மாநிலம் முயற்சி செய்வதை வாய் பொத்தி வேடிக்கை பார்த்து கொண்டிருக்கிறீர்கள். போக்குவரத்து ஊழியர்கள், ஆசிரியர்கள், சத்துணவு ஊழியர்கள், மாற்றுத் திறனாளிகள் என அனைத்து தரப்பினரும் தம் கோரிக்கைகளுக்காக போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
போயஸ் கார்டனின் கண் அசைவின்றி யாருடனும் பேச முடியாது என்பதால், போராடும் ஊழியர்களுடன் நீங்கள் பேச்சுவார்த்தை கூட நடத்தாமல் மவுனம் சாதிக்கிறீர்கள். மாநில வளர்ச்சிக்கான தொலைநோக்குத் திட்டங்கள் குறித்து விவாதிக்கவும், ஜனநாயகத்தின் தூணாகவும் விளங்கும் சட்டமன்றத்தை உங்கள் தலைவிக்குத் துதி பாடும் மன்றமாக மாற்றிக் காட்டிவிட்டீர்கள். உங்கள் அமைச்சர்களின் வசூல் வெறி மிரட்டல் தாங்க முடியாமல் அரசு அதிகாரிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். முதலமைச்சர் திரு. ஒ.பன்னீர் செல்வம் அவர்களே! இது தான் இன்றைக்கு உங்கள் ஆட்சியில், தமிழகத்தின் அவல நிலை!
வேண்டுதல்கள் அவசியமா?
அரசை நிர்வாகம் செய்ய வேண்டிய நீங்களும் உங்கள் அமைச்சர்களும் தினந்தோறும் பூஜைகள் செய்து, பால் குடம் தூக்கி, தீ மிதித்து கொண்டிருக்கிறீர்கள். இது என்ன தமிழக மக்கள் நலன் கருதியா செய்கிறீர்கள்? ஊழல் வழக்கிலிருந்து உங்கள் தலைவி விடுதலை பெற வேண்டும் என்பதற்காகத் தானே செய்கிறீர்கள்? நீங்கள் உங்கள் வேண்டுதலுக்காகச் செலவு செய்யும் முழு நேரத்தில் ஒரு சிறிய பங்கையாவது அரசு நிர்வாகத்தை நடத்துவற்குச் செலவழிக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றவில்லையா?
உங்கள் அரசு நிர்வாகத்தில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் ஒரேயொரு நிறுவனம் டாஸ்மாக் தான். அது தான் இன்றைக்கு உங்கள் அரசின் மொத்த வருவாயில் 30 சதவீதத்தைக் ஈட்டுகிறது. மது அருந்துவதில் மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் முதன்மை மாநிலமாக அ.தி.மு.க ஆட்சியில் தமிழகம் உருவாகி இருக்கிறது.
டாஸ்மாக்..ஒரே சாதனை!
இது தான் உங்களுக்கும், அ.தி.மு.க அரசுக்கும் பெருமை தேடித் தருகிறதா? உங்கள் நான்காண்டு ஆட்சிக் காலத்தில் இதுவே உங்கள் ஒரே சாதனை என்று விளம்பரம் கொடுக்கப் போகிறீர்களா? மதுவை மட்டுமே நம்பியுள்ள ஒரே மாநிலமாக தமிழகத்தை ஆக்குவது தான், எங்கள் ஒற்றைக் குறிக்கோள் என்று இந்த அரசாங்கம் நடைபெற்று கொண்டிருக்கிறதா?
பொறுப்புணர்வே இல்லையா?
உங்கள் தலைவி ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டுள்ளார் என்பதற்காக நீங்கள் தமிழக மக்களைத் தண்டிப்பது சரியா? மாநிலத்தின் நலனில் அக்கறை காட்டாமல் உங்கள் தலைவியின் நலனில் மட்டுமே நீங்கள் அக்கறை காட்டுவதால் ஏழரைக் கோடி தமிழ் மக்களின் எதிர்காலமும், வாழ்வாதாரமும் இன்றைக்கு கேள்விக்குறியாகி நிற்கிறது.
உங்களுக்கும், உங்களின் கீழ் உள்ள அமைச்சர்களுக்கும் பொறுப்புணர்வு எப்பொழுது வரும்? தங்களுடைய குடும்பத்தின் எதிர்காலம் நிம்மதியானதாக இருக்க வேண்டும் என்ற நம்பிக்கையிலும், எதிர்பார்ப்பிலும் தானே மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள்? அப்படி நம்பி வாக்களித்த மக்களின் நம்பிக்கையை நாம் நாசம் செய்துவிட்டோமே, அவர்களுடைய பிள்ளைகளின் எதிர்காலத்தையும் பாழ்படுத்துகிறோமே என்ற வருத்தமும், வெட்கமும் உங்களுக்குச் சிறிதும் இல்லையா?
உங்கள் கடமை என்ன தெரியுமா?
நான் தமிழக அரசின் இணையதளத்தைப் பார்த்தேன் (http://www.tn.gov.in/government/keycontact/18358) ஒ.பன்னீர் செல்வம், முதலமைச்சர் என்று குறிப்பிட்டிருந்தது.
நீங்கள் இன்று வரை அப்படி நடந்து கொண்டதாக தெரியவில்லை. ஆட்சியின் கடைசி வருடத்தில் அடி எடுத்து வைத்துள்ள உங்களது நிர்வாகம் இனிமேலாவது விழித்துக் கொள்ளுமா? மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய இப்போதாவது முயற்சி செய்வீர்களா?
தமிழ்நாட்டு மக்கள் நலனில் கொஞ்சமாவது அக்கறை காட்டுவீர்களா? இந்த கடிதத்தை நிறைவு செய்யும் முன்பு இறுதியாக ஒரு கேள்வியை உங்களிடம் கேட்க ஆசைப்படுகிறேன். உங்களிடம் மட்டுமல்ல, அ.தி.மு.க.வின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஒவ்வொருவரிடமும் கேட்க விரும்புகிறேன். "உங்களது முதல் கடமை தமிழக மக்கள் நலனுக்காகப் பாடுபடுவதா? அல்லது நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டுள்ள உங்கள் கட்சி தலைவியின் நலனுக்காக மட்டும் பாடுபடுவதா?"
இந்த கேள்விக்கு மனச்சாட்சியை தொட்டு பதில் அளிக்கும் துணிச்சல் உங்களுக்கு உண்டா?" இவ்வாறு மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்திய நாடு முழுதும் எழுந்துள்ள எதிர்ப்பையும், மாநில உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு, மத்திய அரசு சாலைப் போக்குவரத்து மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், '' கூட்டாட்சித் தத்துவத்தை மறந்து, மாநில அரசுகளின் உரிமைகளைப் பறித்து, அதிகார ஆக்கிரமிப்புக்கும், அத்துமீறலுக்கும் வழிவகுக்கும் மத்திய அரசின் புதிய சாலைப் போக்குவரத்து - பாதுகாப்பு மசோதாவைக் கண்டித்து, இந்தியாவில் உள்ள அனைத்துத் தொழிற் சங்கங்களின் சார்பில் 30-4-2015 அன்று நடைபெற்ற வேலை நிறுத்தம் பெருமளவுக்குப் பரவலாகவும், வெற்றிகரமாகவும் நிறைவேறியிருக்கிறது.
தொழிற் சங்கங்கள் மட்டுமல்லாமல், மாநிலங்களில் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழக ஊழியர்களும், தனியார் போக்குவரத்து நிறுவனங்களின் உரிமையாளர்களும், லாரி, ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநர்களும் தங்களுடைய கடும் எதிர்ப்பை வெளிப்படுத்திடும் வகையில் வேலைநிறுத்த அறப்போரில் பங்கெடுத்துக் கொண்டனர்.
டெல்லி, பஞ்சாப், அரியானா, சண்டிகர், ஆந்திரா, தெலுங்கானா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் அரசுப் பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
தமிழகத்தைப் பொறுத்தவரை 30-4-2015 அன்று நடைபெற்ற போராட்டத்தில் ஆளும் அதிமுகவின் தொழிற் சங்கத்தைத் தவிர, திமுகவின் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கங்களும் ஈடுபட்டன.
மூன்றரை லட்சம் லாரிகள், ஏழாயிரம் டிரைலர் லாரிகள், மூவாயிரம் கேஸ் டேங்கர் லாரிகள் இயக்கப்படவில்லை. தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அலுவலர் சங்கம் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர் சங்கம் சார்பில் அலுவலர்கள், ஆய்வாளர்கள், ஊழியர்கள் அனைவரும் மத்திய அரசின் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அந்த சங்கங்களின் சார்பில்,மாநில அரசின் அனைத்து அதிகாரங்களையும் மத்திய அரசு தன்வசம் எடுத்துக் கொண்டு, புதியதாக தேசியப் போக்குவரத்து ஆணையம் மற்றும் மாநிலப் போக்குவரத்து ஆணையம் ஆகிய அமைப்புகளை உருவாக்கச் சாலைப் போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு மசோதா வகை செய்கிறது.
இச்சட்டம் நடைமுறைக்கு வரும்போது, பன்னாட்டு நிறுவனங்களும் தனியார் நிறுவனங்களும் மட்டுமே பயன் அடைந்து, பொதுத் துறை நிறுவனங்கள் அனைத்தும் முடக்கப்படும் சூழ்நிலை ஏற்படும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வாகன ஓட்டிகள் அனைவரும் தயாரிப்பு நிறுவனங்களின் பாகங்களை மட்டுமே மாற்றிக் கொள்ள வேண்டும்; அங்கீகரிக்கப்பட்ட சேவை மையங்களில்தான் வாகனங்களைப் பராமரிக்க வேண்டும்; பொது ஏல முறை மூலமாகவே பஸ் பர்மிட்டுகள் வழங்கப்பட வேண்டும்; இரு சக்கர வாகன உதிரி பாகங்களுக்குக் கூட, தயாரிப்பு நிறுவனத்தின் உதிரி பாகங்களைத்தான் வாங்க வேண்டும்; வாகனம் ஓட்டும்போது நிகழும் சாதாரண தவறுக்கும்கூட அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வேண்டும் என்பன போன்ற எதிர்மறை அம்சங்களே மத்திய அரசின் மசோதாவில் நிறைந்துள்ளன.
தற்போது நடைமுறையில் இருக்கும் மோட்டார் வாகனச் சட்டம் - 1988 முழுமையான மாறுதல்களுக்கு உள்ளாக்கப்படுவதால், சாலைப் போக்குவரத்துத் தொழிலையே தங்களுடைய வாழ்வாதாரத்தின் மையமாகக் கொண்டிருக்கும் கோடிக்கணக்கான ஓட்டுநர்கள், வாகனப் பராமரிப்புப் பணியாளர்கள், சாலைப் போக்குவரத்துத் தொழிலாளர்கள் ஆகியோர் பெரும் பாதிப்புக்கு ஆளாவார்கள்.
பொதுத் துறை போக்குவரத்துக் கழகங்களின் எதிர்காலமும், அந்தக் கழகங்களில் பணியாற்றி வரும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்நவாதாரமும் நிச்சயமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.
நலிந்த பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ள இலவச பஸ் பாஸ் சலுகைகள் விலகிப் போகும். பாதுகாப்பான சாலைப் பயணம்; விபத்து இல்லாத போக்குவரத்து என்ற போர்வையில் மத்திய அரசு கொண்டுவர முயற்சிக்கும் சாலைப் போக்குவரத்து - பாதுகாப்பு மசோதா, பசுத் தோல் போர்த்திய புலி என்பதைப் போல, தற்போது இந்தியாவில் பல்லாண்டுக் காலமாக இருந்து வரும் சாலைப் போக்குவரத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே பலியிட்டு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு இரையாக்கும் கொடுமைக்குப் பாதை அமைத்துக் கொடுத்துவிடும்.
நில எடுப்புச் சட்டம் மற்றும் வட்டி மானியத்தில் மாற்றம் ஆகியவற்றின் மூலம் விவசாயிகளுக்கும்; தொழில் திருத்தச் சட்டங்களின் மூலம் தொழிலாளர்களுக்கும்; டாக்டர் மீனாகுமாரி பரிந்துரைகளை ஏற்பதன் மூலம் மீனவர்களுக்கும்; பெரும் பாதிப்பையும், தாங்கொணாத வேதனைகளையும் உருவாக்கி வரும் மத்திய பாஜக. அரசு; புதிய சாலைப் போக்குவரத்து மசோதாவின் மூலம் கோடிக்கணக்கான போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு நேர்ந்திடவிருக்கும் துன்ப துயரங்களையும், இந்திய நாடு முழுதும் எழுந்துள்ள எதிர்ப்பையும், மாநில உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டிய அவசியத்தையும் கருத்தில் கொண்டு, மசோதாவை முன்னெடுத்துச் செல்லாமல், திரும்பப் பெற்றிடவேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
சமுதாயத்தின் அனைத்துத் தரப்பினரையும்பகைத்துக் கொண்டு, மக்களுடன் மத்திய அரசு என்று பரப்புரை செய்வது எந்தவிதப் பயனையும் தராது என்பதையும் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.
தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் காங்கிரஸார் நேற்று மிகப்பெரிய பேரணி நடத்தினர். பேரணியின் முடிவில் 25 துறைகளின் முறைகேடுகள் குறித்த பட்டியலை ஆளுநர் ரோசய்யாவிடம் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைமையில் நிர்வாகிகள் அளித்தனர்.
தமிழகத்தில் நடக்கும் அதிமுக ஆட்சியில் பல துறைகளிலும் முறைகேடுகள் நடப்பதாக மாநில காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் குற்றம்சாட்டி வந் தார். இந்த முறைகேடுகள் குறித்த பட்டியலை ஆளுநரிடம் அளிக்கப் போவதாகவும் தெரிவித்திருந்தார். அதன்படி, சென்னையில் நேற்று மிகப்பெரிய பேரணியை நடத்தி, ஆளுநரைச் சந்தித்து மனு அளித்தார்.
முக்கிய தலைவர்கள்
பேரணியில் பங்கேற்பதற்காக சென்னை எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு மைதானம் அருகில் ஆயிரக்கணக்கான காங்கிரஸார் திரண்டனர். மாலை 3.40 மணிக்கு தொடங்கிய பேரணி லேங்க்ஸ் பூங்கா சாலையில் முடிவடைந்தது. இதில் தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரம், அகில இந்திய செய்தித் தொடர்பாளர் குஷ்பு சுந்தர், மாநில துணைத் தலைவர் எச்.வசந்தகுமார் உட்பட ஏராளமானவர்கள் பங்கேற்றனர். பேரணியில் தமிழக அரசுக்கு எதிரான வாசகங்கள் கொண்ட பதாகைகளை காங்கிரஸார் ஏந்திச் சென்றனர்.
பேரணியின் முடிவில் இளங்கோவன் பேசியதாவது:
காங்கிரஸை எந்தக் கொம்பனாலும் அழிக்க முடியாது என்பதையே இந்தப் பேரணி காட்டியுள்ளது. தேர்தல் தோல்வி என்பது சாதாரணம். மக்களிடம் இருந்து காங்கிரஸை பிரிக்க முடியாது. ராகுல் எங்கே என்று எல்லோரும் கேலி செய்தார்கள். இன்றைக்கு அவர் கேட்கும் கேள்விக்கு ஆளுங்கட்சியினரால் பதில் சொல்ல முடியவில்லை.
தமிழகத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்சிப் பொறுப்பேற்ற அதிமுக, மக்களை காக்க வந்தேன் என்று கூறியது. ஆனால் இந்த 4 ஆண்டுகளில் லஞ்சமும் ஊழலும்தான் நிறைந்துள்ளன. தவறு யார் செய்தாலும் தட்டிக் கேட்போம். சுதந்திரம் வாங்கிக் கொடுத்த காங்கிரஸ்காரர்களுக்கு தவறை தட்டிக்கேட்க அதிக அக்கறை உள்ளது.
விவசாயிகளுக்கு பிரச்சினை என்றதும் வீதிக்கு வந்த சோனியா காந்தி, எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைத்து குடியரசுத் தலைவரிடம் மனு அளித்தார். நாங்கள் பதவிக்கு ஆசைப் படவில்லை. ஆனால், 2016-ல் காங்கிரஸ் ஆதரவில்லாமல் யாரும் ஆட்சியமைக்க முடியாது என்ற நிலையை உருவாக்குவோம்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
குஷ்பு புகார்
குஷ்பு பேசும்போது, ‘‘தமிழக மக்களுக்கு காங்கிரஸ் மீது நம்பிக்கையுள்ளது. 2016-ல் காங்கிரஸ் இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. கடந்த 4 ஆண்டுகளாக தமிழகத்தை ஆட்சி செய்பவர்கள் என்ன செய்தார்கள் என்றே தெரியவில்லை’’ என்றார்.
பேரணி முடிந்ததும் இளங்கோவன் தலைமையில் முக்கிய நிர்வாகிகள் மட்டும் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சென்றனர். ஆளுநர் ரோசய்யாவை சந்தித்து, தமிழகத்தில் 25 துறைகளில் ஊழல் நடப்பதாக குற்றம்சாட்டி அதற்கான பட்டியலை அளித்தனர். பின்னர் நிருபர்களை சந்தித்த இளங்கோவன், “தமிழக அரசின் 25 துறைகளில் நடக்கும் ஊழல் குறித்து ஆதாரங்களோடு புகார் அளித்துள்ளோம். உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்தார்’’ என்றார்.
தற்போது ஏற்பட்டுள்ள பெட்ரோல் டீசல் விலை உயர்விற்கு எம்.எல்.ஏ வான சரத்குமார் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
பெட்ரோல் டீசல் விலை அவ்வப்போது உயர்த்தப்படுவதால் நடுத்தர மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். எனினும் இதுபோன்ற விலை உயர்வுகள் மக்களுக்கு பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தினாலும் விலை உயர்வு மட்டும் குறைந்தபாடில்லை. எனினும் இந்த தொடர்கதையை முன் வைத்து கட்சி தலைவர்கள் தங்கள் கண்டத்தை பதிவு செய்யவும் தவறுவதில்லை.
இந்த விலை உயர்வு குறித்து சரத்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் பெட்ரோல் விலையை சில காசுகள் குறைப்பதும், பெரிய அளவில் உயர்த்துவதும் கண்டிக்கத்தது ஆகும். லாபத்தை ஈட்டும் நோக்கில் எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுகிறது. எனவே இந்த விலை உயர்வை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என சரத்குமார் வலுயுறுத்தியுள்ளார்.
Saturday, May 02, 2015
திமுக சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது,
தமிழக சட்டசபைக்கு குறிப்பிட்ட 2016 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தாலும், அதற்கு முன்னதாகவே தேர்தல் நடந்தாலும் அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. தேர்தலை கண்டு திமுக எப்போதும் அஞ்சியது கிடையாது.
ஆந்திராவில் 20 அப்பாவி கூலி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
தமிழக மற்றும் ஆந்திர அரசுகள் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் அப்பாவி தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைக்கும்.
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது. கர்நாடக அரசு அணை கட்டுவது என உறுதியாக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக முதலமைச்சருக்கு இருக்கும் உறுதி, அதை தடுப்பதில் தமிழக முதல்வருக்கும் வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.
Wednesday, April 15, 2015
மதவாத சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு திராவிடர் கழகத்தினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது என விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அலுவலகத்தின் எதிரே அமைந்துள்ள பெரியார் திடலுக்கு முன்பு முற்றுகைப் போராட்டம் என்னும் பெயரில் ஒரு சில மதவாத சக்திகள் திரண்டுள்ளனர். அவர்களை தொலைவிலேயே தடுத்திருக்க வேண்டிய காவல்துறையினர் பெரியார் திடலின் வாசல் வரையில் அனுமதித்துள்ளனர்.
இதனால், திராவிடர் கழகத்தைச் சார்ந்தவர்களுக்கும் மதவாதசக்திகளுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பெரியார் திடலுக்குள் நுழைய முயற்சித்தவர்களை திராவிடர் கழகத்தினர் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், காவல்துறையினர் திராவிடர் கழகத்தினர் மீது திடீரெனத் தடியடி நடத்தியுள்ளனர். இதில், திராவிடர் கழகத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் உள்பட பலர் காயமடைந்துள்ளனர்.
மதவாத சக்திகளின் பிற்போக்குத்தனமான நடவடிக்கைகளைக் அம்பலப்படுத்தும் வகையில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த உறுப்பினர்கள் ஆணாதிக்கத்தின் அடையாளச் சின்னமாக உள்ள தாலியைத் தாங்களே அகற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது ஒரு கொள்கை அடிப்படையிலான சனநாயக வழியிலான போராட்ட வடிவமே ஆகும். அதுவும், திராவிடர் கழகத்தின் அலுவலக வளாகத்திற்குள்ளேயே இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தில் உரிய அனுமதி பெற்று, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் தலைமையில் இன்று காலையில் இப்போராட்டத்தை நடத்தி முடித்தனர். அதன் பின்னர், தமிழக அரசு மேல் முறையீடு செய்து திராவிடர் கழகத்துக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்தது. ஆனால் அதற்கு முன்னதாகவே அப்போராட்டம் நடந்து முடிந்துவிட்டது. 21 குடும்பத்தினர் தாங்களாகவே முன்வந்து தங்களுடைய தாலிகளை அகற்றினார்கள். இது எந்த வகையிலும் சட்டத்திற்கு விரோதமானதல்ல.
அப்போராட்டத்தை நடைபெறவிடாமல் எப்படியாவது தடுத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டவர்கள், அது திட்டமிட்டபடி நடந்தேறிவிட்டதால் ஆத்திரத்திற்காட்பட்டிருக்கிறார்கள். இதனால் மாலை 4 மணியளவில் பெரியார் திடலை நோக்கி மதவாத சக்திகள் திரண்டு வந்துள்ளனர். அவர்கள் நாட்டு வெடிகுண்டுகளுடன் வந்ததாக திராவிடர் கழகத்தினருக்குத் தெரியப்படுத்தியிருக்கிற காவல்துறையினர், அவர்களைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஏனோ ஈடுபடவில்லை.
காவல்துறையினரின் தடியடியின்போது குறிப்பாக, திராவிடர் கழகத்தினரே குறிவைத்துத் தாக்கப்பட்டிருக்கிறார்கள். சட்டம்-ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டிய காவல்துறையே அதற்கு நேர்மாறாகச் செயல்படுவது வேதனைக்குரியதாகும்.
புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் ஆகிய இருவரும் மூட நம்பிக்கைகளையும், சாதியின் பெயராலும் மதத்தின் பெயராலும் நடைபெறும் ஆதிக்கத்தையும் ஒடுக்குமுறைகளையும் மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடிய தலைவர்களாவர். குறிப்பாக, தலித்துகளுக்கும் பெண்களுக்கும் எதிரான ஆதிக்கத்தை எதிர்த்துள்ளனர்.
அந்த வகையில், பெண்களுக்கு அணிவிக்கப்படும் தாலியும் ஆணாதிக்கத்தின் அடையாளச் சின்னம் என்பதை அம்பலப்படுத்தியுள்ளனர். பெண்கள் கல்வி பெறவும், அதிகார வலிமை பெறவும், ஆண்களுக்கு இணையாக சொத்துரிமைகள் பெறவும் வேண்டுமெனக் குரல் கொடுத்துள்ளனர்.
அவர்களின் வழியில் தொடர்ந்து போராடிவரும் திராவிடர் கழகத்தினர் பெண்களுக்கெதிரான ஆணாதிக்கத்தைச் சுட்டிக்காட்டும் வகையில்தான் தாலி அகற்றும் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்தியுள்ளனர். இது எந்த வகையிலும் தனிப்பட்ட முறையில் யாருக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய ஒன்றல்ல.
திராவிடர் கழகத்தில் உள்ள குடும்பத்தினர் யாருடைய வற்புறுத்தலோ அச்சுறுத்தலோ எதுவுமின்றி தாங்களே முன்வந்து தங்களுக்குத் தாங்களே தாலியை அகற்றிக்கொண்டனர்.
ஆனால், ‘தாலியை அகற்றிக்கொண்ட பெண்களை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள்’ என்று கொச்சைப்படுத்தும் வகையில் தமது ஆணாதிக்கப் போக்கை வெளிப்படுத்தும் வகையில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த முன்னணிப் பொறுப்பாளர் ஒருவர் பேசியிருக்கிறார்.
அவருடைய அநாகரிகமான இந்தப் போக்கையும், இத்தகைய மதவாத சக்திகளோடு கைகோர்த்துக்கொண்டு திராவிடர் கழகத்தினர் மீது தடியடி நடத்திய காவல்துறையினரின் போக்கையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிக வன்மையாகக் கண்டிக்கிறது" என தெரிவித்துள்ளார்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் 2013-ம் ஆண்டு அக்டோபர் 25-ம் தேதி கூடுதல் நீதிபதிகளாக பதவியேற்ற பி.என்.பிரகாஷ், புஷ்பா சத்தியநாராயணா, கே.கல்யாணசுந்தரம், எஸ்.வைத்தியநாதன், ஆர்.மகாதேவன், வி.எஸ்.ரவி, ஜி.சொக்கலிங்கம், வி.எம்.வேலுமணி ஆகிய 8 பேர் நிரந்தர நீதிபதிகளாகியுள்ளனர்.
இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி பிறப்பித்துள்ளார்.
இதையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், இவர்கள் 8 பேரும் நிரந்தர நீதிபதிகளாக பதவியேற்றனர். இவர்களுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
மொழி மாற்றத் தொடர்களை நிறுத்தக் கோரி, அதிமுக பொதுச் செயலர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்து மனு அளிக்க, சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
மொழி மாற்றத் தொடர்களை நிறுத்தக் கோரி இன்று (ஏப்ரல் 15) ஒரு நாள் சின்னத்திரை தொடர்பான பணிகளும் நிறுத்தப்பட்டன.
தென்னந்திய சின்னத்திரை தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம், தென்னந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு ஆகியவை இப்போராட்டத்தை ஒருங்கிணைந்து நடத்தினார்கள்.
வடபழனியில் உள்ள மியூசிக் யூனியனில் இன்று காலை சின்னத்திரை நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் பங்கேற்ற கூட்டம் நடைபெற்றது. பலரும் மொழி மாற்றத் தொடர்களால், சின்னத்திரை நடிகர்கள், நடிகைகள் எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்று விவரித்தார்கள்.
இக்கூட்டத்தின் முடிவில் 4 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அத்தீர்மானங்கள் வருமாறு,
* மொழி மாற்றத் தொடர்களால் சின்னத்திரையில் பணிபுரியும் தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர், நடிகையர் மற்றும் பிற தொழில் நுட்ப கலைஞர்கள் என்று 20,000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்படுவதால் தமிழ் தொலைகாட்சிகளில் ஒளிபரப்பாகும் மொழி மாற்றத் தொடர்களை உடண்டியாக தவிர்க்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களை கேட்டுக் கொள்வது.
* மொழி மாற்றத் தொடர்களுக்கு பதிலாக நேரடி தொடர்களுக்கு வாய்ப்பளித்து பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களை வாழ்விக்க வேண்டும் என்று தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு வேண்டுகோள் விடுப்பது.
* இது தொடர்பாக, ஜெயலலிதாவை நேரடியாக சந்தித்து அந்த பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்றும் கோரிக்கை மனு அளிப்பது.
* மேலும், இன்றே அனைத்து தொலைக்காட்சி நிறுவனங்களுக்கும் நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களை வழங்குவது.
இக்கூட்டத்தில் ராதிகா சரத்குமார், நளினி, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன், பெப்சி சிவா, இயக்குநர் கெளதமன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.
Subscribe to:
Posts (Atom)
Total Pageviews
News
"
});
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
திருச்சி மார்ச் 24 தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் ...