Friday, December 16, 2016

On Friday, December 16, 2016 by Unknown in    






திமுக தலைவரும் தமிழக முன்னாள் முதல்வருமான கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவிரி மருத்துவமனையில் இரவு 11.10 மணியளவில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
இது தொடர்பாக காவிரி மருத்துவமனை வெளியிட்டுள்ள மருத்துவக் குறிப்பில், "திமுக தலைவர் கருணாநிதி மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தொண்டையிலும், நுரையீரலிலும் தொற்று ஏற்பட்டுள்ளது. சுவாசிப்பதில் சிரமம் இருந்ததால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நோய்த் தொற்றை சீர்செய்வதற்கான சிகிச்சைகள் தொடங்கப்பட்டுள்ளன. தற்போது அவரது உடல்நிலை சீராக இருக்கிறது. மருத்துவக் குழு ஒன்று அவருக்கு சிகிச்சை அளித்து வருகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக மருந்து ஒவ்வாமையால் அவதிப்பட்டு வந்த திமுக தலைவர் கருணாநிதி கடந்த 1-ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்த டிசம்பர் 7-ம் தேதி இரவு வீடு திரும்பினார்.
தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தொடர் உடல்நலக் குறைவால் கடந்த 40 நாட்களாக கருணாநிதி எவ்வித பொது நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளவில்லை. அவர் ஓய்வில் இருப்பதால் யாரும் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என கட்சி சார்பிலும் அறிக்கை விடப்பட்டிருந்தது.

0 comments: