Wednesday, August 31, 2016

On Wednesday, August 31, 2016 by Unknown in

தீனதயாளன் (வயது 84). இவரை கடந்த ஜூன் மாதம், சிலை கடத்தல் வழக்கில், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவர் ஏற்கனவே ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. ஜாமீன் மனு தள்ளுபடியானதைத் தொடர்ந்து 2-வது முறையாக ஜாமீன் கேட்டு தீனதயாளன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், 65 நாட்களுக்கு மேலாக சிறையில் இருந்து வருவதாகவும், வயதான தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, மனுவுக்கு பதில் அளிக்கும்படி சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டார். 
இந்நிலையில் தீனதயாளனின் ஜாமீன் மனு மீதான விசாரணை இன்று முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, தீனதயாளனின் ஜாமீன் மனுவை நீதிபதி மீண்டும் தள்ளுபடி செய்தார்.