Saturday, May 02, 2015

On Saturday, May 02, 2015 by Unknown in ,    
சட்டசபை தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது என மு.க.ஸ்டாலின் கூறினார்.
 
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் நேற்று சென்னையில் இருந்து கோவைக்கு விமானத்தில் சென்றார். அவர் விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்த போது கூறியதாவது,
 
தமிழக சட்டசபைக்கு குறிப்பிட்ட 2016 ஆம் ஆண்டு மே மாதம் தேர்தல் நடந்தாலும், அதற்கு முன்னதாகவே தேர்தல் நடந்தாலும் அதை சந்திப்பதற்கு திமுக தயாராக இருக்கிறது. தேர்தலை கண்டு திமுக எப்போதும் அஞ்சியது கிடையாது.
 
ஆந்திராவில் 20 அப்பாவி கூலி தொழிலாளர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முழுமையான விசாரணை நடத்தி அதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த விசாரணை முறையாக நடக்க வேண்டும் என்றால் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்.
 
தமிழக மற்றும் ஆந்திர அரசுகள் சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும். அப்போதுதான் அப்பாவி தொழிலாளிகள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைக்கும்.
 
கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்டுவதை ஏற்க முடியாது. கர்நாடக அரசு அணை கட்டுவது என உறுதியாக இருக்கிறது. மேகதாது அணை கட்டுவதில் கர்நாடக முதலமைச்சருக்கு இருக்கும் உறுதி, அதை தடுப்பதில் தமிழக முதல்வருக்கும் வரவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறினார்.

0 comments: