Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
சூலூர் பேரூராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைதேர்தலில் அண்ணா தி.மு.க.சார்பில் போட்டியிடும் வேட்பாளர் எஸ்.எஸ்.தங்கராசுவை ஆதரித்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி 18வது வார்டு மதியழகன் நகரில் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அமைச்சருடன் ஒன்றிய குழுத்தலைவர் மாதப்பூர் பாலசுப்பிரமணியம், மாவட்ட கவுன்சிலர் தோப்பு அசோகன், தொகுதி செயலாளர் லிங்கசாமி, நகர நிர்வாகிகள் போலீஸ் கந்தசாமி,முன்னாள் ஊராட்சி தலைவர்கள் கலங்கல் நடராஜ், காங்கயம்பாளையம் ரங்கசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் சென்று வாக்குகள் சேகரித்தனர்.

கோவை மாவட்டம், இருகூர் பேரூராட்சி மன்ற இடைத்தேர்தல், தலைவர் பதவிக்கு போட்டியிடும் அண்ணா தி.மு.க.வேட்பாளர் பத்மசுந்தரி துரைசாமியை ஆதரித்து மாவட்ட எம்.ஜி.ஆர்.மன்ற செயலாளர் என்.சி.குட்டியப்பன், தங்கமுத்து, கருமத்தம்பட்டி பேரூராட்சி தலைவர் ஏ.சி.மகாலிங்கம் ஆகியோர் 18 வது வார்டில் உள்ள மண்பாண்ட தொழிலாளர்களிடம் இரட்டை இலை  சின்னத்திற்கு ஓட்டு கேட்டனர். இந்த நிகழ்ச்சியில் இருகூர் துரைசாமி, ஒன்றிய பேரவை செயலாளர் பார்த்திபன், அசோக்குமார்,நாகராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

0 comments: