Thursday, September 11, 2014

On Thursday, September 11, 2014 by farook press in ,    
தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:–
மத்திய அரசின் புள்ளியியல்துறை 2012–13–ம் ஆண்டு இந்தியாவிலுள்ள மாநிலங்களின் பொருளாதார வளர்ச்சி குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையின் படி தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சியில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறது என்பது தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பின்தங்கிய மாநிலங்களாக கருதப்படும் மாநிலங்கெல்லாம் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறி வருகின்றன. ஆனால் பொருளாதார வளர்ச்சியில் முன்னேறிய தமிழ்நாடு கடைசி இடத்திற்கு சென்றுள்ளது.
இந்தியாவின் சராசரி பொருளாதார வளர்ச்சி 4.5 சதவீதம் ஆகும். ஆனால் இந்த சராசரியைவிட தமிழ்நாடு, பொருளாதார வளர்ச்சியில் 3.39 சதவீதம் என்று குறைந்துள்ளது. தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி குறைந்ததற்கு கடுமையான மின்வெட்டு, எளிதில் அணுக முடியாத நிர்வாகம், தொழில் தொடங்கு வோருக்கு பல்வேறு நிர்பந் தங்கள் போன்ற காரணங்களால்தான் தொழில்துறை நலிவுற்று பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது.
நேற்று டெல்லியில் அனைத்து மாநில மின்துறை அமைச்சர்கள் கூட்டம் நடை பெற்றது. அங்கே சென்று தமிழ்நாட்டில் நிலவிவரும் மின்வெட்டு பிரச்சனையை பேசி தீர்க்க வேண்டி தமிழக அரசின் மின்துறை அமைச்சரோ தூத்துக்குடியில் மேயர் தேர்தல் பணிகளை பார்த்துக் கொண்டிருக்கிறார்.
இந்த நிலையை பார்த்த பிறகு தொழிலதிபர்கள், தமிழ்நாட்டில் தொழில் தொடங்க எப்படி முன்வருவார்கள். மக்கள் பிரச்சனையில் கவனம் செலுத்தி இருந்தால், நம் தமிழகம் உண்மையான வளர்ச்சியை கண்டிருக்கும்.
தமிழகத்தின் உண்மை நிலையை மத்திய அரசின் புள்ளியியல் துறை வெளிச்சம் போட்டு காட்டி உள்ளதை, இனியும் தமிழக மக்களிடம் மறைக்க முடியாது. எனவே இனியாவது தொழில்துறை வளர்ச்சிக்கு தேவையான நடவடிக்கை எடுத்து, பொருளாதார வளர்ச்சியில் கடைகோடியில் இருக்கும் தமிழகத்தை வளர்ச்சி பெறும் மாநிலமாக மாற்ற முன்வர வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என கூறினார்.

0 comments: