Wednesday, September 28, 2016
*சென்னை குமரன் காவல் நிலையத்தில் செய்தி சேகரிக்க சென்ற நிருபர் மீது தாக்குதல் கேமரா பறிப்பு போலிசார் அராஜகம் கண்டுகொள்ளாமல் வேடிக்கை பார்த்த சக போலிசார்.*
சென்னை குமரன் நகர் காவல் நிலையத்தில் அதிமுகவினரை போலிசார் தாக்கியது தொடர்பாக 50 க்கும் மேற்பட்ட தொண்டர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த செய்தியை சேகரிக்க சென்ற கேப்டன் தொலைக்காட்சி நிருபர் செளந்தரராஜன் அவர்களை தாக்கி கேமராவை பறித்து ஆயுதப்படை போலிசார் கார்த்திகேயன் அராஜகம். சிறப்பு உதவி ஆய்வாளர் ஜெயபாலன் தூண்டுதலின் பேரில் தான் ஆயுதப்படை போலிசார் இந்த அத்து மீறலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் அரங்கேறும் போது 10 க்கும் மேற்ப்பட்ட போலிசார் இருந்தும் கண்டுகொள்ளவில்லை. நிருபர் சென்று ஜெயபாலன் அவர்களிடம் முறையிட்ட போது நீ என்ன புடிங்கி விடுவாய என ஆணவமாகவும் இழிவாகவும் பேசி அவமதித்துள்ளார். இச்சம்பவம் குறித்து பத்திரிக்கையாளர்கள் இணை ஆணையரிடம் புகார் கொடுக்க உள்ளனர். இச்சம்பவத்திற்கு பத்திரிக்கையாளர் சங்கங்கள் கடும் கண்டனங்களை பதிவு செய்து உள்ளனர். மேலும் இந்த செயலில் ஈடுபட்ட கார்த்திகேயன், ஜெயபாலன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தன்னை மீறிய அதிகார அமைப்பு இல்லை என்பதுபோல செயல்படுவது சரியல்ல என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு அந்நாட்டு கடற்படைக்கு அறிவுறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை, திண்டுக்கல் பிரமுகர் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை நடுநிலையுடன் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தமிழக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அவர்களுடைய அதிகாரத்தை உரிய முறையில் செயல்படுத்தும் என்றார்.
உச்ச நீதிமன்ற ஆணைப்படி தமிழகத்திற்கு காவிரி தண்ணீர் திறக்க கர்நாடகம் மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது.
காவிரியில் இன்று தொடங்கி தமிழகத்திற்கு மூன்று நாட்கள் தினசரி 6000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டிருந்தது.
இதுகுறித்து விவாதிப்பதற்காக கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இன்று அனைத்து கட்சி கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறந்து விடுவதில்லை என்று ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது.
உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தில்லியில் இரு மாநில உயர் அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பிறகு இந்த விவகாரம் குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது
Saturday, September 10, 2016
சென்னை,பிரேசிலில் ரியோ டி ஜெனீரோ நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியின் உயரம் தாண்டுதல் போட்டியில் இந்திய வீரர் மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்று சாதனை படைத்தார். உயரம் தாண்டும் போட்டியில் அவர் 1.89 மீட்டர் தாண்டி தங்கம் வென்று புதிய வரலாறு படைத்தார். தங்கம் வென்று வராலாற்று சாதனை படைத்த மாரியப்பன் தங்கவேலுவுக்கு தமிழக அரசு ரூ. 2 கோடி பரிசுத்தொகை அறிவித்துள்ளது. தங்கம் வென்று நாட்டிற்கும் தமிழகத்திற்கும் மாரியப்பன் பெருமை சேர்த்துள்ளார் என்று முதல் அமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். ஏற்கனவே, மாரியப்பன் தங்கவேவேலுவுக்கு மத்திய அரசு ரூ. 75 லட்சம் பரிசுத்தொகை வழங்கியது குறிப்பிடத்தக்கது
ஜெ. சொத்து குவிப்பு வழக்கை விசாரித்த பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த கர்நாடக உயர் நீதிமன்றம் நால்வரையும் விடுதலை செய்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து கர்நாடக அரசு மற்றும் வழக்கின் முதல் புகார்தாரரான சுப்பிரமணியன் சுவாமி தரப்பில் உச்ச நீதிமன்றத் தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இவ்வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது
இந்நிலையில் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரத்னம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் “ஜெயலலிதாவுக்கு எதிரான சொத்துக் குவிப்பு வழக்கில் அரசு வழக்கறிஞராக ஆஜரான ஆச்சார்யா எழுதியுள்ள சுயசரிதையில், தனக்கு பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்தன. சட்டத்தின் பாதையில் நீதியை நிலைநாட்ட பல்வேறு தடைகள் போடப்பட்டது என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நீதியை நிலைநாட்டும் பொறுப்பில் உள்ள அரசு வழக்கறிஞர் ஆச்சார்யாவுக்கு இடையூறு ஏற்படுத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மேலும் ஆச்சார்யாவுக்கு போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விசாரணை நடத்த வேண்டும்’’என குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாகி சந்திர கோஸ், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘‘மூல வழக்கான ஜெயலலிதாவின் சொத்துக்குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் இன்னும் 4 வாரங்களில் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அந்த வழக்கில் தீர்ப்பு வெளியான பிறகு, இம்மனுவை விசாரணை செய்கிறோம்’’ எனக்கூறி 4 வாரங்களுக்கு வழக்கை ஒத்திவைத்தனர்.
Friday, September 09, 2016
போபால், அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.தமிழ் நாட்டில் முதல் - அமைச்சர் ஜெயலலிதா தொடங்கிய 'அம்மா உணவகம்' திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. ஏழை - எளிய மக்கள் மிக குறைந்த செலவில் வயிறார சாப்பிடுவதால் அம்மா உணவகம் திட்டம் மற்ற மாநிலங்களிலும் பாராட்டுப் பெற்றுள்ளது. பல மாநிலங்கள் தமிழ் நாட்டுக்கு அதிகாரிகளை அனுப்பி, அம்மா உணவகம் பற்றி ஆய்வு செய்து தங்கள் மாநிலத்தில் அது போன்று அமல்படுத்த ஏற்பாடு செய்து வருகின்றன. அம்மா உணவகம் திட்டத்தை பார்த்து ராஜஸ்தான், புதுடெல்லி உள்ளிட்ட மாநில முதல்-மந்திரிகளும் தங்களுடைய மாநிலங்களில் மலிவு விலையில் அரசு உணவு விற்பனையை தொடங்கினர்.இவ்வரிசையில் இப்போது மத்திய பிரதேச மாநில பா.ஜனதா அரசு இணைந்து உள்ளது. அம்மா உணவகத்தினால் ஈர்க்கப்பட்ட சிவராஜ் சிங் சவுகான் அரசு மத்திய பிரதேசதம் மாநிலத்தில் ரூ. 10-க்கு 'தாளி' உணவை விற்பனை செய்ய திட்டமிட்டு உள்ளது.மத்திய பிரதேசத்தில் மலிவு விலையில் உணவு விற்பனை செய்யும் திட்டத்தை செப்டம்பர் 25-ம் தேதி தொடங்க பாரதீய ஜனதா அரசு திட்டமிட்டு உள்ளது. பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா பிறந்த நாளான 25-ம் தேதி தொடங்க திட்டமிட்டு உள்ளது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. சப்பாத்தி, பருப்பு, சாதம், காய்கறிகள் மற்றும் உறுகாய் அடங்கிய ’தாளி’ உணவை ரூபாய் 10-க்கு விற்பனை செய்ய சவுகான அரசு முடிவு செய்து உள்ளது. முதலில் மலிவு விலை உணவகங்களை குவாலியர், போபால், இந்தூர் மற்றும் ஜாபல்பூரில் தொடங்கப்பட உள்ளது
சென்னை கொருக்குப்பேட்டை கே.சி. கார்டன் 2–வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி(வயது 45). இவர், முதல் கணவரான சேகரை விட்டு பிரிந்து தற்போது குமாருடன் வசித்து வருகிறார்.லட்சுமி, 42–வது வட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ஆவார். மேலும் கணவர் குமாருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.நேற்று காலை லட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், லட்சுமியுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்தார். பின்னர் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.ஆஸ்பத்திரியில் சாவு
கழுத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே வந்த லட்சுமி மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கொருக்குபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.செல்போன் சிக்கியது
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது கொலையாளியின் செல்போன் போலீசாரிடம் சிக்கியது. அந்த செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் கொலையாளி ராஜபாளையத்தை சேர்ந்த கணேஷ்(26) என்பதும், சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.கொலை செய்யப்பட்ட லட்சுமியின் உறவினரான மேகலாவுக்கும், கணேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மேகலாவுக்கு கணேஷ் அடிக்கடி பணம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேகலா, கணேஷ் உடனான கள்ளத்தொடர்பை துண்டித்து விட்டு தனியாக சென்று விட்டார்.வாலிபர் கைது
இதனால் தனது கள்ளக்காதலி மேகலாவை தேடி வந்த கணேஷ், நேற்று காலை லட்சுமியின் வீட்டுக்கு சென்று மேகலா குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பதுங்கி இருந்த கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 2 மணி நேரத்துக்குள் கொலையாளியை கைது செய்த கொருக்குப்பேட்டை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெகுவாக பாராட்டினார்.பட்டப்பகலில் தி.மு.க. பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ என்ற பெயரில் 4ஜி சேவையை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இதற்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த சூழலில் மத்திய அரசு நிறுவனமான பிஎஸ்என்எல், ரூ.249-க்கு மாதம் 300 ஜிபி அளவுக்கு இணையத்தை பயன்படுத்திக்கொள்ளும் சேவையை இன்று அறிமுகப்படுத்த வுள்ளது.
இந்த திட்டத்தின்படி ஒரு ஜிபி இணைய சேவையை ரூ.1-க்கும் குறைவான செலவில் பயன்படுத்த முடியும். இணைய பயன்பாடு 300 ஜிபியை தாண்டினாலும், ஒரு ஜிபி இணையத்துக்கான கட்டணம் ரூ.1-க் கும் குறைவாகவே கணக்கிடப்பட்டு, மொத்த பயன்பாட்டுக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படும்.
Thursday, September 08, 2016
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து, கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இந்த தண்ணீர் தமிழக எல்லைக்கு இன்று வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மைசூரு,
தமிழ்நாட்டில் காவிரி பாசன பகுதியில் சம்பா சாகுபடிக்காக, மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறந்துவிடப்படுவது வழக்கம்.தமிழக அரசு இடைக்கால மனு
அணையின் நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடி இருந்தால் மட்டுமே அந்த தேதியில் தண்ணீர் திறக்கப்படும். இல்லையேல் தண்ணீர் திறப்பது தாமதப்படும்.
இந்த ஆண்டில் மேட்டூர் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைவாக இருந்ததால் சம்பா சாகுபடிக்காக ஜூன் 12-ந் தேதி தண்ணீர் திறக்கப்படவில்லை.
எனவே சம்பா சாகுபடிக்காக காவிரியில் உடனடியாக 50 டி.எம்.சி. தண்ணீர் திறந்து விடுமாறு கர்நாடகத்துக்கு உத்தரவிடக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, உடனடி நிவாரணமாக தமிழகத்துக்கு வினாடிக்கு 15 ஆயிரம் கன அடி வீதம் 10 நாட்களுக்கு தண்ணீர் (12.96 டி.எம்.சி.) திறந்து விடுமாறு கடந்த திங்கட்கிழமை கர்நாடக அரசுக்கு உத்தரவிட்டது.
ஆனால் இதற்கு கர்நாடகத்தில் பலத்த எதிர்ப்பு கிளம்பி உள்ளது. தமிழகத்துக்கு தண்ணீர் திறந்துவிடக்கூடாது என்று கோரி மண்டியா, மத்தூர், பெங்களூரு நகரங்களிலும், அங்குள்ள காவிரி பாசன பகுதிகளிலும் விவசாயிகளும், கன்னட அமைப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையே சாலை போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது.காவிரியில் தண்ணீர் திறப்பு
இந்த நிலையில், கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா பெங்களூருவில் நேற்று முன்தினம் அனைத்து கட்சி தலைவர்கள் மற்றும் காவிரி பிரச்சினை தொடர்பான வழக்கில் கர்நாடகத்தின் சார்பில் ஆஜராகும் வக்கீல்கள் கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில், சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நிறைவேற்ற தவறினால் சட்ட சிக்கல்கள் ஏற்படும் என்பதால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவது என்று முடிவு செய்யப்பட்டது.
அதன்படி, நேற்று முன்தினம் நள்ளிரவு 12.05 மணி முதல் மண்டியா மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 11 ஆயிரம் கனஅடி வீதமும், மைசூரு மாவட்டத்தில் உள்ள கபினி அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டது. அதாவது இரு அணைகளில் இருந்தும் வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடி வீதம் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டு இருக்கிறது. அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு இரு மாநில எல்லையில் உள்ள பிலிகுண்டுலுவை வந்து சேரும் போது சற்று குறைந்துவிடும் வாய்ப்பு உள்ளதால், ஆயிரம் கனஅடி நீர் கூடுதலாக திறந்து விடப்பட்டு உள்ளது.இன்று வந்து சேரும்
இந்த தண்ணீர் இன்று (வியாழக்கிழமை) காலை பிலிகுண்டுலுவை கடந்து ஒகேனக்கல் வந்து சேரும் என்றும், அதன்பிறகு இரவுக்குள் மேட்டூர் அணையை வந்து அடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி பிலிகுண்டுலுவுக்கு வினாடிக்கு 3,300 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்று 76 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,079 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,250 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது.
சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை தொடர்ந்து கர்நாடகம் தற்போது திறந்து விட்டுள்ள தண்ணீர் மேட்டூர் அணையை வந்து அடையும் போது நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது. ஒரு நாளைக்கு ஒரு அடி வீதம் நீர்மட்டம் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.கிறிஸ்தவ கோவில் கோபுரம்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் குறையும் போதெல்லாம் அணையின் நீர்த்தேக்க பகுதியான பண்ணவாடியில் உள்ள கிறிஸ்தவ கோவில் கோபுரம் முதலில் வெளியே தெரியும். பின்னர் அணையின் நீர்மட்டம் 68 அடியாக குறையும் போது நந்திசிலை, ஜலகண்டேஸ்வரர் கோவில் கோபுரம் ஆகியவை வெளியே தெரியும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்து, புராதன நினைவுச்சின்னங்கள் வெளியே தெரிந்தன. இவற்றை காண தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் பண்ணவாடிக்கு வந்து சென்றனர்.
இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையினாலும், கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட உபரிநீராலும் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடந்த சில தினங்களாக உயர்ந்து வருகிறது. இதனால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் வெளியே தெரிந்த நந்தி சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு தண்ணீரில் மூழ்கியது.
தற்போது அணையின் நீர்மட்டம் 76 அடியாக உயர்ந்துள்ளதால் பண்ணவாடி நீர்த்தேக்க பகுதியில் உள்ள கிறிஸ்தவ கோவில் கோபுரமும் தண்ணீரில் மூழ்க தொடங்கி இருக்கிறது
சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த டி.கே.ராஜேந்திரன் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். உடனடியாக அவர் பதவி ஏற்றுக்கொண்டார். தமிழக மக்களுக்கு பணியாற்றுவதற்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாக அவர் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
திடீர் விருப்ப ஓய்வு
தமிழக காவல்துறையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் தொடங்கிய அதிரடி மாற்றங்கள் நேற்றும் நீடித்தது.
நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக பணியாற்றிய அசோக்குமார் திடீரென்று விருப்ப ஓய்வில் சென்றார். இந்த மாற்றம் நேற்று முன்தினம் நள்ளிரவில் தமிழக காவல்துறையில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.
தமிழக காவல்துறையின் புதிய சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யார்? என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்து நின்றது.
டி.கே.ராஜேந்திரன்
அந்த பதவிக்கு அனைவரும் எதிர்பார்த்தபடி சென்னை நகர போலீஸ் கமிஷனராக பணியாற்றிய டி.கே.ராஜேந்திரன் அந்த பொறுப்புக்கு நேற்று பகலில் நியமிக்கப்பட்டார்.
அவர் தமிழக உளவுத்துறையின் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. முழு பொறுப்பையும் அவர் கூடுதலாக கவனிப்பார் என்றும் நேற்று அரசு பிறப்பித்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
பொறுப்பு ஏற்றார்
தலைமை செயலாளர் ராமமோகனராவ் இதற்கான உத்தரவில் கையெழுத்திட்டிருந்தார். இந்த உத்தரவு வந்த உடன் டி.கே.ராஜேந்திரன் தமிழக காவல்துறை இயக்குனர் அலுவலகத்திற்கு விரைந்து வந்தார்.
தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி. பொறுப்பையும், உளவுப்பிரிவு டி.ஜி.பி.யாகவும் பதவி ஏற்றுக்கொண்டார். பதவி ஏற்ற உடன் அவருக்கு கூடுதல் போலீஸ் டி.ஜி.பி.க்கள் திரிபாதி, சஞ்சை அரோரா, உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி, உள்ளிட்ட உயர் அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.
மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு
பதவிஏற்ற உடன் டி.கே.ராஜேந்திரன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக மக்களுக்கு பணியாற்றுவதற்காக இந்த நல்ல வாய்ப்பை கொடுத்துள்ள தமிழக முதல்-அமைச்சருக்கும், தமிழக அரசுக்கும், எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எனக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பொறுப்பை செவ்வன நிறைவேற்ற பாடுபடுவேன். சட்டம் ஒழுங்கை காப்பாற்றுவதற்கு முக்கியத்துவம் கொடுத்து எனது பணிகள் இருக்கும். அனைவரும் இந்த சிறப்பான பணியை செய்வதற்கு எனக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
தேடி வந்த பதவி
தமிழக காவல்துறையின் புதிய டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன் நேர்மையான சிறந்த பண்பாளர் என்று அனைவராலும் போற்றப்படுபவராவார். அவரது நற்பண்புகளுக்காக இந்த உயர்ந்த பதவி அவரைத் தேடிவந்துள்ளது என்று தமிழக காவல்துறை வட்டாரத்தில் பேசப்படுகிறது. அவர் ஏற்கனவே தமிழக காவல்துறையில் சட்டம் ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி. உள்ளிட்ட பல்வேறு உயர் பதவிகளை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
திருவண்ணாமலை மாவட்டம்
டி.கே.ராஜேந்திரனின் சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம், ஓலைப்பாடி கிராமம் ஆகும். ஆரம்ப கல்வியை கிராமத்தில் உள்ள அரசு பஞ்சாயத்து பள்ளியில் பயின்றார். இளங்கலை பட்டப்படிப்பை வேலூர் மாவட்டத்தில் உள்ள ஊரீஸ் கல்லூரியிலும், முதுகலை பட்டப்படிப்பை சென்னை பல்கலைக்கழகத்திலும் முடித்தார். அங்கு அவர் பாதுகாப்பு சம்பந்தமான படிப்பையும் பயின்றார்.
1984-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வு பெற்று தமிழக போலீஸ் துறையில் அவர் காலடி எடுத்து வைத்தார். அதன் பின்னர் போலீஸ் துறையில் பல்வேறு முக்கிய பதவிகளை வகித்தார்.
கோவை மாவட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டாகவும், திருச்சி, தஞ்சாவூர், விருதுநகர் மாவட்டங்களில் போலீஸ் சூப்பிரண்டாகவும் இருந்துள்ளார். தமிழக உளவுப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி.யாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.
Total Pageviews
News
Pages
Popular Posts
-
திருப்பூர் மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர்., இளைஞரணி சார்பில், திருப்பூர் வாலிபாளையம், கே.பி.என்., காலணி, முள்ளுக்காடு பகுதிகளில் எம்.ஜி.ஆர் பிறந...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
பொங்கலூர் ஒன்றியம் வேலம்பட்டியில்ரூ.11. 06 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய கால்நடை மருத்துவமனையை அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் திறந்து வைத்தார்...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
தமிழ்நாடு தவ்ஹித்ஜமாத் சார்பில் புகைபழக்கத்திற்கு எதிராய் பிரசார சீட்டு வழங்கி வடச்சென்னையில் பிரசாரம் செய்து வருகின்றனர்.
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...