Wednesday, September 28, 2016

On Wednesday, September 28, 2016 by Unknown in    

காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு தன்னை மீறிய அதிகார அமைப்பு இல்லை என்பதுபோல செயல்படுவது சரியல்ல என, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
தமிழக மீனவர்கள் கச்சத்தீவு அருகே இலங்கை கடற்படையால் தாக்கப்பட்டது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க இலங்கை அரசு அந்நாட்டு கடற்படைக்கு அறிவுறுத்த வேண்டும். மத்திய, மாநில அரசுகள் இணைந்து இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினால், மீனவர்கள் பிரச்னைக்கு நிரந்தரத்தீர்வு காணமுடியும்.
கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை, திண்டுக்கல் பிரமுகர் மீது தாக்குதல் சம்பவம் தொடர்பாக, திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்ட அறிக்கை நடுநிலையுடன் இல்லை. கடந்த சில மாதங்களுக்கு முன்பே பாஜக தமிழக உள்ளாட்சித் தேர்தலைச் சந்திக்கும் வகையில் செயல்பட்டுவருகிறது. உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசும், உச்ச நீதிமன்றமும் அவர்களுடைய அதிகாரத்தை உரிய முறையில் செயல்படுத்தும் என்றார்.

0 comments: