Friday, September 09, 2016
சென்னை கொருக்குப்பேட்டை கே.சி. கார்டன் 2–வது தெருவைச் சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி லட்சுமி(வயது 45). இவர், முதல் கணவரான சேகரை விட்டு பிரிந்து தற்போது குமாருடன் வசித்து வருகிறார்.லட்சுமி, 42–வது வட்ட தி.மு.க. மகளிரணி அமைப்பாளர் ஆவார். மேலும் கணவர் குமாருடன் சேர்ந்து பைனான்ஸ் தொழிலும் செய்து வந்தார்.நேற்று காலை லட்சுமி தனது வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அங்கு வந்த 2 வாலிபர்கள், லட்சுமியுடன் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் ஆத்திரம் அடைந்த ஒரு வாலிபர், தான் மறைத்து வைத்து இருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்தார். பின்னர் 2 பேரும் தப்பி ஓடிவிட்டனர்.ஆஸ்பத்திரியில் சாவு
கழுத்தில் இருந்து ரத்தம் சொட்ட சொட்ட வீட்டில் இருந்து வெளியே வந்த லட்சுமி மயங்கி விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் மிதந்த லட்சுமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளித்தும் பலன் இன்றி லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி கொருக்குபேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.செல்போன் சிக்கியது
இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரித்தனர். அப்போது கொலையாளியின் செல்போன் போலீசாரிடம் சிக்கியது. அந்த செல்போனை வைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.அதில் கொலையாளி ராஜபாளையத்தை சேர்ந்த கணேஷ்(26) என்பதும், சென்னை தண்டையார்பேட்டையில் தங்கி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேன் டிரைவராக வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.கொலை செய்யப்பட்ட லட்சுமியின் உறவினரான மேகலாவுக்கும், கணேசுக்கும் இடையே கள்ளத்தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது மேகலாவுக்கு கணேஷ் அடிக்கடி பணம் கொடுத்து வந்ததாக தெரிகிறது. திடீரென கடந்த சில மாதங்களுக்கு முன்பு மேகலா, கணேஷ் உடனான கள்ளத்தொடர்பை துண்டித்து விட்டு தனியாக சென்று விட்டார்.வாலிபர் கைது
இதனால் தனது கள்ளக்காதலி மேகலாவை தேடி வந்த கணேஷ், நேற்று காலை லட்சுமியின் வீட்டுக்கு சென்று மேகலா குறித்து கேட்டார். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் கணேஷ், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தது போலீசார் நடத்திய விசாரணையில் தெரிய வந்தது.சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் பதுங்கி இருந்த கணேசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை நடந்த 2 மணி நேரத்துக்குள் கொலையாளியை கைது செய்த கொருக்குப்பேட்டை போலீசாரை சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வெகுவாக பாராட்டினார்.பட்டப்பகலில் தி.மு.க. பெண் நிர்வாகி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
திருச்சி 3.3.18 திருச்சி திருவாணைக்காவல்47.3 கோடியில் கட்டப்பட்டு வரும் மேம்பாலப்பணி 85 சதவீதம் நிறைவு அணுகு சாலை பணிகள் முடிந்ததும் பயன...
-
திருச்சி ஸ்டார் கிம்ஸ் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் முன்னாள் அமைச்சர் செல்வராஜ் 75வது பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி தில்லைநக...
-
*எல்பின் பலே மோசடி காவல்துறை செக் எல்பின் நிறுவனம் ராஜா என்கிற அழகர்சாமி மற்றும் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ்தலைமையில் தமிழகமெங்கும் பல கோடிகள...
-
உச்சநீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து செப்.9-இல் கர்நாடகத்தில் முழு அடைப்புப் போராட்டம் நடத்தப் போவதாக கன்னட அமைப்புகளின் கூட்டமைப்பு அறிவித்துள...
-
கரூரில் 2 இடத்தில் "ஏஸி' நிழற்கூடம் அவசியம் இல்லை என அதிருப்தி கரூர் மாவட்டத்தில், 24 லட்சம் மதிப்பில், இரு இடங்களில்"ஏ...
0 comments:
Post a Comment