Friday, September 09, 2016

On Friday, September 09, 2016 by Unknown in    

மும்பை, மும்பை விக்ரோலி பார்க்சைடு பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அங்குள்ள நடைபாதையில் வியாபாரம் செய்து வந்தார். தான் வியாபாரம் செய்யும் இடத்தை மூதாட்டி ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, அவரை வியாபாரம் செய்யவிடாமல் பழவியாபாரி ஒருவர் துரத்தியதாக கூறப்படுகிறது. அந்த பழ வியாபாரி வடமாநிலத்தை சேர்ந்தவர். இது குறித்து மூதாட்டி விக்ரோலியை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டு உள்ளார். நேற்று அந்த கட்சியை சேர்ந்த 10 பேர் பழவியாபாரியை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அவர் வியாபாரத்திற்காக தள்ளுவண்டியில் வைத்திருந்த பழவகைகளையும் சாலையில் வீசி எறிந்தனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வடமாநிலத்தை சேர்ந்தவரை நவநிர்மாண் சேனாவினர் தாக்கிய இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.

0 comments: