Tuesday, September 27, 2016
ஹிந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ஃபாவத் கான், மஹிரா கான் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மும்பையில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வரும் அவர்களுக்கு, 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மனைவி ஷாலினி தாக்கரே மற்றும் நிர்வாகிகளில் ஒருவரான ஏமி கோப்கர் ஆகியோர், "பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையே அவர்களே வெளியேற்றும்' என்றனர்.
இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதிக்குச் சென்றிருந்த இளையராஜாவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ராஜா, இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது என்றார். ரஹ்மான் பற்றிய கேள்விக்குப் பதிலளித்தபோது, ரஹ்மான் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் அவரை மதிக்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். ஆனால் நானும் அதேபோல எண்ணவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் என்றார்.
Friday, September 09, 2016
மும்பை, மும்பை விக்ரோலி பார்க்சைடு பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் அங்குள்ள நடைபாதையில் வியாபாரம் செய்து வந்தார். தான் வியாபாரம் செய்யும் இடத்தை மூதாட்டி ஆக்கிரமித்து உள்ளதாக கூறி, அவரை வியாபாரம் செய்யவிடாமல் பழவியாபாரி ஒருவர் துரத்தியதாக கூறப்படுகிறது. அந்த பழ வியாபாரி வடமாநிலத்தை சேர்ந்தவர். இது குறித்து மூதாட்டி விக்ரோலியை சேர்ந்த நவநிர்மாண் சேனா கட்சி பிரமுகர்களிடம் முறையிட்டு உள்ளார். நேற்று அந்த கட்சியை சேர்ந்த 10 பேர் பழவியாபாரியை பிடித்து சரமாரியாக தாக்கினார்கள். மேலும் அவர் வியாபாரத்திற்காக தள்ளுவண்டியில் வைத்திருந்த பழவகைகளையும் சாலையில் வீசி எறிந்தனர். இந்த காட்சியை அங்கிருந்தவர்கள் செல்போனில் படம் பிடித்து உள்ளனர். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.வடமாநிலத்தை சேர்ந்தவரை நவநிர்மாண் சேனாவினர் தாக்கிய இந்த சம்பவத்திற்கு பா.ஜனதா உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்து உள்ளன.
Thursday, September 08, 2016
மும்பை, கல்யாணில் விநாயகர் சதுர்த்தி விழாவின் போது குளத்தில் தள்ளி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை கொல்ல முயன்ற 4 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.விநாயகர் சிலை கரைப்பு தானே மாவட்டம் கல்யாணில் விநாயகர் சதுர்த்தியையொட்டி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் அங்குள்ள தீஸ்காவ் குளத்திலும் கரைக்கப்பட்டு வருகின்றன.1½ நாள் வழிபாட்டுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் ஏராளமான சிலைகள் இந்த குளத்திற்கு கரைப்பதற்காக கொண்டு வரப்பட்டு இருந்தன.இதனால் குளத்தை சுற்றிலும் கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பக்தர்கள் கூட்டம் இருந்தது. அங்கு கோல்சேவவாடி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே (வயது38) என்பவர் பாதுகாப்பு பணியில் இருந்தார். அவர் கூட்ட நெரிசலை ஒழுங்குபடுத்தி கொண்டு இருந்தார்.குளத்திற்குள் தள்ளினர் அப்போது ஜெரிமெரி கணேஷ் உற்சவ் என்ற மண்டலை சேர்ந்தவர்கள் கூட்டத்தினரை இடித்து தள்ளியபடி குளத்தை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.இதை கவனித்த சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே அவர்களை மற்றவர்களை போல வரிசையில் வரும்படி அறிவுறுத்தினார். இது அந்த மண்டலை சேர்ந்தவர்களுக்கு கோபத்தை உண்டாக்கியது. சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலேயிடம் அவர்கள் தகராறு செய்தனர்.இந்த தகராறு முற்றிய நிலையில் கடும் ஆத்திரம் அடைந்த அந்த மண்டலை சேர்ந்த நான்கு வாலிபர்கள் திடீரென சப்–இன்ஸ்பெக்டரை பிடித்து குளத்திற்குள் தள்ளி விட்டனர்.காப்பாற்ற முன்வராத அவலம் குளத்திற்குள் விழுந்து தத்தளித்த அவரை அந்த கும்பலை சேர்ந்த ஒருவர் தண்ணீருக்குள் மூழ்கடித்து கொலை செய்ய முயன்றார். ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த இடத்தில் நடந்த இந்த சம்பவத்தில் சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலேயை காப்பாற்ற யாரும் முன்வராத அவலமும் அரங்கேறியது.இருப்பினும் சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே சுதாரித்துக் கொண்டு அந்த ஆசாமியிடம் இருந்து தப்பி நீந்தி வெளியே வந்தார்.இந்த அனைத்து நிகழ்வையும் கூட்டத்தில் இருந்த யாரோ ஒருவர் தனது செல்போன் படம் பிடித்து வலைதளத்தில் வெளியிட்டார். இந்த காட்சிகள் நேற்று சமூக வலைதளங்கள் மற்றும் செய்தி சேனல்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.4 பேருக்கு வலைவீச்சு இதற்கிடையே சம்பவம் குறித்து சப்–இன்ஸ்பெக்டர் நிதின் தோண்டு டாகலே கோல்சேவாடி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.அதன்பேரில் போலீசார் வாலிபர்கள் 4 பேர் மீதும் கொலை முயற்சி உள்பட பல்வேறு குற்றப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான அவர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.அந்த நான்கு வாலிபர்களும் உள்ளூர் அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்கள் என்று கூறப்படுகிறது. விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தில் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் கொலை முயற்சிக்கு உள்ளான இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Wednesday, September 07, 2016
மகாராஷ்டிர மாநிலம், தாணே மாவட்டத்தில் உயிரிழந்த ஹிந்து மதத்தைச் சேர்ந்த முதியவரின் இறுதிச்சடங்கை முஸ்லிம் இளைஞர்கள் ஒன்றிணைந்து செய்திருப்பது மனித நேயத்துக்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.
தாணே நகரில் உள்ள கௌசா பகுதியில் வசித்துவந்த வாமன் கதம் (65) என்பவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
உறவினர்கள் என்று யாரும் இல்லாத காரணத்தால், இறுதிச்சடங்கு செய்வதற்கு உதவி கிடைக்காமல் அவரது மனைவி செய்வதறியாமல் தவித்து நின்றார்.
இதை அறிந்த மும்ப்ரா பகுதியைச் சேர்ந்த முஸ்லிம் இளைஞர்கள் 8 பேர், தாமாக முன்வந்து இந்து முறைப்படி இறுதிச்சடங்கு செய்வதற்குத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டனர்.
மூங்கில் கழி, கயிறு, மண் பானைகள், அகர்பத்திகள், ஆடைகள் உள்ளிட்ட பொருள்களை வாங்கிவந்து, பிற்பகல் 3 மணியளவில் இறுதிச் சடங்கை அவர்கள் செய்தனர்.
மனித நேயத்துக்கு எடுத்துகாட்டாக விளங்கிய அந்த இளைஞர்களை மும்ப்ரா பகுதிவாசிகள் பாராட்டினர். மும்ப்ராவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை அதிகம்.
இதற்கிடையே, மும்ப்ரா-கல்வா தொகுதி எம்எல்ஏவான ஜிதேந்திர அவாத், அந்த இளைஞர்களுக்கு வணக்கம் செலுத்துவதாக சமூக வலைதளமான முகநூலில் (ஃபேஸ்புக்) குறிப்பிட்டுள்ளார்
Saturday, October 11, 2014
இந்த நிலையில் பிபாசா பாசுக்கு தனது காதலர் ஹர்மன் பவேஜாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த அவர் திருமணம் செய்து கொள்ள தான் அவசரப்படவில்லை என்றும் தனது சினிமா வாழ்க்கையில் கவனம் செலுத்தி வருவதாக கூறினார்.
மேலும் அவர் கூறும்போது திருமண பந்தத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்கு என்று நேரம் இருக்கிறது.நான் திருமணம் செய்து கொள்வேன். நான் செய்ய வேண்டிய படங்கள் உள்ளன.நடிப்பு தவிர பலவற்றை நான் சிந்தித்து வைத்து உள்ளேன்.அதைப்பற்றி நான் கூற இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.
Tuesday, September 30, 2014
Total Pageviews
News
Pages
Popular Posts
-
பள்ளி மாணவ மாணவிகளுக்கான ஓவியப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழா! திருச்சி டிசைன் ஓவியப்பள்ளி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக...
-
கரூர் மாவட்ட ஆட்சியர் மழையால் பாதி த்த மக்களுக்கு மதிய உணவு வழங் கினர் ....
-
வெள்ளிக்கிழமை மாலை மாநாட்டு அரங்கில் தமுஎகச படைப்பாளிகளின் புதிய படைப்புகள் அறிமுக நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில் கவிதைகள், பாடல்கள் ம...
-
Thousands of Staff and students of NIT-T paid rich floral tributes to the former president of India, Dr. APJ Abdul Kalam at a program organ...
-
அங்கீகாரம் இல்லாத மருத்துவ படிப்பு சுகாதாரத்துறை அமைச்சருக்கு நடவடிக்கை எடுக்க கோரிக்கை, உடனடி நடவடிக்கை எடுக்கப்படுமா? சமூக ஆர்வலர்கள் எத...
-
திருச்சி வழக்கறிஞர்களின் மேம்பாட்டுக்காக பாடுபடுவேன் திருச்சிகுற்றவியல் வழக்கறிஞர் சங்க செயலாளர் திரு.வெங்கட் பேட்டி 28.7.2023 குற்றவியல் வ...
-
உடுமலை வட்டம் குடிமங்கலம் ஒன்றியம் முக்கூரு ஜல்லிப்பட்டியை சார்ந்த R. மருதமுத்து, அ. தி. மு.க. பொதுசெயலாளர் ஜெயலலிதாவுக்கு ஜெயில் தண்டனை எ...
-
திருச்சி ஹர்ஷமித்ரா மருத்துவமனையில், புற்றுநோய் சிகிச்சைக்கு மற்றுமோர் நவீன கருவி அறிமுகம். ஹர்ஷமித்ரா மருத்துவமனை கடந்த 12 ஆண்டுகளாக திர...