Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
35வயதாகும் நடிகை பிபாசாபாசு  தனது சினிமா பயணத்தை 2001 இல் தனடங்கினார். இவரது முதல் படம் அஜ்னபீ. இவர் தொடர்நது நடித்த ஜிசம்,ராஸ்,கார்போரேட்,அப்ஹரன்,தூம்-2, லாம்ஹா,ஆக்ரோஸ் ஆகிய படங்கள் அவருக்கு புகழை தேடித்தந்தன. பிபாசாபாசு நடித்த ஆத்மா, ஹம்சகலஸ் ஆகிய படங்கள் வெற்றி பெற்றன. சமீபத்தில் கிரியேட்டர்-3டி வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிலையில் பிபாசா பாசுக்கு தனது காதலர் ஹர்மன் பவேஜாவுடன் நிச்சயதார்த்தம் நடந்ததாக கூறப்பட்டது. இது குறித்து நிருபர்கள் கேட்டதற்கு சிரித்து கொண்டே பதில் அளித்த அவர் திருமணம் செய்து கொள்ள  தான் அவசரப்படவில்லை என்றும் தனது சினிமா வாழ்க்கையில்  கவனம் செலுத்தி வருவதாக கூறினார். 
மேலும் அவர் கூறும்போது திருமண பந்தத்தை நான் மதிக்கிறேன். ஆனால் அதற்கு என்று நேரம் இருக்கிறது.நான் திருமணம் செய்து கொள்வேன். நான் செய்ய வேண்டிய படங்கள் உள்ளன.நடிப்பு தவிர பலவற்றை நான் சிந்தித்து வைத்து உள்ளேன்.அதைப்பற்றி நான் கூற இயலாது.இவ்வாறு அவர் கூறினார்.

0 comments: