Saturday, October 11, 2014

On Saturday, October 11, 2014 by farook press in ,    
நெஞ்சை படபடக்க வைக்கும் ‘‘பேய் வேடத்தில் நடிக்க ஆசைப்படுகிறேன்’’ என்று நடிகை லட்சுமிராய் கூறினார்.முனி–1’, ‘முனி–2’, ‘காஞ்சனா’ ஆகிய படங்களை கொடுத்த ராகவா லாரன்ஸ், இப்போது ‘கங்கா’ என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதையடுத்து, அவர் ‘ஒரு டிக்கெட்ல ரெண்டு சினிமா’ என்ற படத்தை டைரக்டு செய்ய இருக்கிறார்.
இதில், இடைவேளைக்கு முன்பு ஒரு படமும், இடைவேளைக்கு பின்னர் இன்னொரு படமும் இடம்பெறும் என்றும், ஒரு படத்துக்கு ‘கிழவன்’ என்றும், இன்னொரு படத்துக்கு ‘கருப்பு துரை’ என்றும் பெயர் சூட்டியிருப்பதாக அவர் கூறினார். ‘கருப்பு துரை’ என்ற படத்தில் லட்சுமிராய் கதாநாயகியாக நடிக்கிறார்.இதுதொடர்பாக ராகவா லாரன்சும், லட்சுமிராயும் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது, நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு லட்சுமிராய் அளித்த பதில்களும் வருமாறு:–
கேள்வி:– சமீபகாலமாக உங்களைப்பற்றிய பரபரப்புகள் அடங்கியிருக்கிறதே... என்ன விஷயம்?
பதில்:– ‘‘நான் பரபரப்புகளில் இருந்து விலகி இருக்கிறேன். நானுண்டு என் வேலை உண்டு என்று ஒதுங்கியிருக்கிறேன். கிசுகிசுக்களுக்கு இடம்கொடுக்காமல் நடந்துகொள்கிறேன்.
கேள்வி:– உங்களுக்கு வரப்போகிற கணவர் எப்படிப்பட்டவராக இருக்க வேண்டும்?
பதில்:– நல்ல மனிதராக இருக்க வேண்டும்.
கேள்வி:– எப்படிப்பட்ட ஆண்களை உங்களுக்கு பிடிக்கும்?
பதில்:– ஆண்களைப்பற்றிய கேள்விகளுக்கு பதில் அளிக்க நான் விரும்பவில்லை.
பேய் வேடம் 
கேள்வி:– இப்போது வருகிற பெரும்பாலான கதாநாயகிகள் பேய் வேடங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார்களே?, அதுபோல் உங்களுக்கும் ஆசை இருக்கிறதா?
பதில்:– தமிழ் படஉலகில் இப்போது பேய் படங்கள் அதிகமாக வருகின்றன. அடுத்து வரஇருக்கும் ‘அரண்மனை’யும் பேய் படம்தான். அந்த படத்திலும் நான் நடித்திருக்கிறேன். ஆனாலும், நெஞ்சை படபடக்க வைக்கும் வகையில் முழுமையான ஒரு பேய் வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது.
கேள்வி:– பெரும்பாலும் நீங்கள் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராகத்தானே நடிக்கிறீர்கள்?
பதில்:– இப்போதெல்லாம் பல கதாநாயகிகள் அல்லது பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்கும் படங்கள்தான் வருகின்றன. படங்களுக்கான பட்ஜெட் தொகை அதிகரித்துக்கொண்டே போவதால், இதுபோன்ற ‘மல்டி ஸ்டார்’ படங்கள் வருகின லட்சுமிராய் கூறினார்.

0 comments: