Tuesday, September 27, 2016

On Tuesday, September 27, 2016 by Unknown in    

 

ஹிந்தி திரைப்படமொன்றின் படப்பிடிப்பில் பங்கேற்பதற்காக பாகிஸ்தானைச் சேர்ந்த பிரபல நடிகர்கள் ஃபாவத் கான், மஹிரா கான் ஆகியோர் இந்தியா வந்துள்ளனர். மும்பையில் தங்கி படப்பிடிப்பில் பங்கேற்று வரும் அவர்களுக்கு, 48 மணி நேரத்துக்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை கட்சியின் தலைவர்கள் வெள்ளிக்கிழமை மிரட்டல் விடுத்தனர். இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அந்தக் கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரேயின் மனைவி ஷாலினி தாக்கரே மற்றும் நிர்வாகிகளில் ஒருவரான ஏமி கோப்கர் ஆகியோர், "பாகிஸ்தான் நடிகர்கள் நாட்டை விட்டு வெளியேறாவிட்டால், மகாராஷ்டிர நவநிர்மாண் சேனையே அவர்களே வெளியேற்றும்' என்றனர்.

இசை நிகழ்ச்சிக்காக அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதிக்குச் சென்றிருந்த இளையராஜாவிடம் இந்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்விகள் கேட்டார்கள். அதற்குப் பதிலளித்த ராஜா, இசைக்கு எல்லைகள் கிடையாது; அதற்கு நாடுகள் தெரியாது என்றார். ரஹ்மான் பற்றிய கேள்விக்குப் பதிலளித்தபோது, ரஹ்மான் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறீர்கள்? நீங்கள் அவரை மதிக்கிறீர்கள். உங்களுக்கு அவரைப் பற்றித் தெரியும். ஆனால் நானும் அதேபோல எண்ணவேண்டும் என எதிர்பார்க்காதீர்கள் என்றார். 

0 comments: