Tuesday, September 27, 2016

On Tuesday, September 27, 2016 by Unknown in    

பாட்டியாலா: பாட்டியாலா அருகே, 100 வயது மிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் வயலில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டியுள்ளனர். 

பஞ்சாப் மாநிலம் பாட்டியாலா அருகே, தாவுப் காலன் கிராமத்தில் திங்கள் இரவு அந்த மூதாட்டி வாசலில் தூங்கி கொண்டிருந்தார். குடும்பத்தினர் காலையில் பார்த்த போது, மூதாட்டி மாயமாகியிருந்தார். அவரை தேடிப்பார்த்த போது, அருகில் உள்ள வயலில், அரை நிர்வாண நிலையில் இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். 

இது தொடர்பாக மரணமடைந்த பாட்டியின் பேரன் கூறுகையில், தனது பாட்டியில் கற்பழித்து கொல்லப்பட்டார். அவரது தலையில் காயம் இருந்தது என்றார்.

போலீசார் மூதாட்டி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பிரேத பரிசோதனைக்கு பிறகு கற்பழிப்பு குறித்த புகாரினை பதிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

முதல் கட்ட விசாரணையில், சொத்து தகராறில் கொலை நடந்திருக்க வாய்ப்பு இல்லை. போதைக்கு அடிமையானவர்கள் இந்த சம்பவத்தை செய்திருக்கலாம் என போலீசார் கூறியுள்ளனர்

0 comments: