Tuesday, February 03, 2015

On Tuesday, February 03, 2015 by farook press in ,    
பாரதி புத்தகாலயம், பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 12வது திருப்பூர் புத்தகத் திருவிழா வெள்ளியன்று சிறப்பாகத் தொடங்கியது.
திருப்பூர் கே.ஆர்.சி. சிட்டி சென்டரில் 10 நாட்கள் நடைபெற உள்ள இக்கண்காட்சியை மாநகராட்சி துணை மேயர் சு.குணசேகரன் ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார். தொடக்க விழாவுக்கு திருப்பூர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் கே.தங்கவேல் தலைமை வகித்தார். இதைத் தொடர்ந்து கண்காட்சி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 105 அரங்கங்களில் வண்ணமயமாக குவிக்கப்பட்டுள்ள புத்தகங்களை தலைவர்கள் பார்வையிட்டனர்.
தொடக்க விழா நிகழ்ச்சியில் பின்னல் புக் டிரஸ்ட் சார்பில் என்.சுப்பிரமணியம் வரவேற்றார். இதைத் தொடர்ந்து முதல் புத்தக விற்பனையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் ஏ.சக்திவேல் தொடக்கி வைக்க, முதல் புத்தகத்தை துணை மேயர் சு.குணசேகரன் பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் சைமா செயலாளர் எம்பரர் வி.பொன்னுசாமி, டீமா தலைவர் எம்.பி.முத்துரத்தினம், பில்டர்ஸ் அசோஷியேசன் ஆப் இந்தியா திருப்பூர் மையத் தலைவர் டி.சண்முகராஜா ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
முன்னதாக நிமிர்வு கலையகத்தின் பறை முழக்கக் கலைநிகழ்ச்சி கண்காட்சிக்கு வந்திருந்த அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. முதல் நாளிலேயே வாசகர்கள், பார்வையாளர்கள் அதிக அளவில் வந்திருந்தனர்.
புத்தகக் கண்காட்சி வரவேற்புக்குழுத் தலைவர் கே.ஜெயபால், செயலாளர் செ.முத்துக்கண்ணன், பொருளாளர் அ.நிசார் அகமது, துணைத் தலைவர்கள் அரிமா எம்.ஜீவானந்தம், லிங்க்ஸ் சௌகத் அலி, வீனஸ் கே.பழனிசாமி, என்.கோபாலகிருஷ்ணன், விழிப்பு நடராஜன், கே.உண்ணிகிருஷ்ணன், எஸ்.பொன்ராம், தாண்டவக்கோன், செ.நடேசன், டிஎம்எல் ஆறுமுகம், க.சுந்தரம், இணைச் செயலாளர்கள் ஆர்.ஈஸ்வரன், கே.காமராஜ், எஸ்.சுப்பிரமணியம், பி.சௌந்திரபாண்டியன், கீதாஞ்சலி கோவிந்தப்பன், எம்.ராஜகோபால், கேரவன் எஸ்.ஆறுமுகம், பழ.விஸ்வநாதன், ஆசிரியர் பாலு உள்பட நிர்வாகிகள் மற்றும் வரவேற்புக்குழுவினர் பங்கேற்றனர். 
தொடக்க விழா நிகழ்ச்சியின் நிறைவாக சி.சந்திரசேகர் நன்றி கூறினார்.

0 comments: