Tuesday, April 28, 2020

On Tuesday, April 28, 2020 by Tamilnewstv in    
மணப்பாறையில் 
காவல்துறை அனுமதி கடிதத்தோடு வெளிமாவட்டங்களுக்கு பயணிக்கும் மக்கள்.

 இது சாத்தியமா? மேலதிகாரிகள் மற்றும் அரசு தான் இதற்கு விடை அளிக்க வேண்டும். நீதிமன்ற ஆணையின்படி இப்படி கடிதம் கொடுக்கப்படுகிறதா? அல்லது தமிழக அரசு உத்தரவின் பெயரில் அனுமதி கடிதம் கொடுக்கப்பட்டு வருகிறதா? உயரதிகாரிகள்  ஏதேனும் சிறப்பு சலுகையின் பெயரில் கடிதம் கொடுக்கப்படுகிறது கேள்விக்குறியாக உள்ளது?



சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கும் சென்று வந்துள்ளதால் பரபரப்பு,
மாவட்ட ஆட்சியாளர் மட்டுமே வழங்க வேண்டிய Epass யை மணப்பாறை காவல் ஆய்வாளர் எவ்வாறு வழங்கினார் பொதுமக்கள் பரபரப்பு.



திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை இதுவரை கொரோனா தொற்று யாருக்கும் ஏற்படவில்லை. அந்த அளவில் நகராட்சி நிர்வாகம் மற்றும் வருவாய்துறையினர் அதற்கான தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.



இந்நிலையில் ஊரடங்கு பிறக்கப்பட்டுள்ள இந்த நேரத்தில் மக்கள் வேறு பகுதிக்கு செல்ல வேண்டும் என்றால் அரசிடம் இபாஸ் பெற்று அதன் பின்னரே செல்ல முடியும். அப்படி இபாஸ் பெற வேண்டும் என்றாலும் கூட இறப்பு, திருமணம், மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்காக மட்டுமே பெற்றுச் செல்ல முடியும். அந்த இபாசிலும் கூட யார் செல்கின்றனர் அவர்களின் செல்போன் என்ன என்பது உள்ளிட்ட தகவல்கள் இடம் பெறும்.



இது அரசின் கவனத்திற்குள் எப்போதும் இருக்கும். இந்த இபாசை பொறுத்தவரை மாவட்ட நிர்வாகத்திடம் மட்டுமே பெற முடியும் என்றும் கூட அரசு அறிவித்திருந்தது.





ஆனால் தற்போது மணப்பாறை பகுதியைப் பொறுத்தவரை பலரும் காவல் நிலையத்தில் காவல்துறையினரின் ஒரு அனுமதி கடிதம் பெற்றுக் கொண்டு சென்னை, தேனி என பல்வேறு  சென்று வருகின்றனர். அப்படி கொடுக்கப்படும் கடிதத்தில் எத்தனை நபர்கள் செல்கின்றனர்? அவர்களின் பெயர் என்ன? அவர்கள் செல்போன் எண் என்ன? என்ற எந்த தகவலும் இல்லை? என்பதுடன் அவர்களுக்கு வழங்கப்படும் கடிதத்தின் நகலை கூட காவல் நிலையத்தில் வாங்கி வைப்பதில்லை.


கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே தான் இந்த இபாஸ் முறை நடைமுறைப்படுத்தி மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கிட முடியும் என்ற நிலையில் தற்போது மணப்பாறை காவல் நிலையத்தில் காவல்துறையினரே இதுபோன்ற கடிதம் வழங்கும் முறையை நடைமுறைபடுத்தி இருப்பது கொரோனா அச்சத்திற்கான வழிவகையை ஏற்படுத்தும் நிலை உள்ளது.
இதுமட்டுமின்றி யார் செல்கின்றனர் என்ற விபரமும் காவல் நிலையத்தில் இல்லை என்பது தான் மிகவும் வேதனைக்குரிய விஷயம்.



ஆகவே இப்படியாக மக்கள் கோரோனா சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்ட பகுதிக்கும் வழக்கம் போல் சென்று வரும் நிலையில் மணப்பாறை பகுதிக்கும் கொரோனா தொற்று உருவாகிவிடுமோ என்ற அச்சத்தின் உச்சத்தில் மக்கள் உறைந்து கிடக்கின்றனர்.



ஆகவே இதுபோன்று காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மற்றும் அவரின் பெயரால் காவல்துறையினர் அனுமதி கடிதம் கொடுக்கலாமா? 144 தடை உத்தரவு உள்ள நிலையில் எப்படி அந்த கடிதம் கொடுக்க முடியும்? அந்த கடிதம் கொடுப்பதற்கான அதிகாரம் எங்கிருந்து வந்தது? கடிதத்தை பார்த்து மற்ற மாவட்டங்களில் எப்படி போலீசார் அனுமதிக்கின்றனர் என்பதையெல்லாம் விரிவாக விசாரணை நடத்தி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை சீர்குலைக்க முயலும் காவல் ஆய்வாளர் கண்ணதாசன் மீது கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


0 comments: