Friday, August 19, 2022
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:*
*டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை*
தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு
‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர்.
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவர்கள் பெயரில் போலி குறுந்தகவல் அனுப்பி புதிய வகை
'ஆன்லைன்' மோசடி நடைபெற்றுள்ளது. இந்த நிலையில் அவர் நேற்று விழிப்புணர்வு வீடியோ பதிவு ஒன்றை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார்.
அதில் டி.ஜி.பி. சைலேந்திரபாபு பேசியிருப்பதாவது:-
ஆன்லைனில் புதிய வகை மோசடி வந்துள்ளது.
நீங்கள் வேலை பார்க்கும் இடத்தில், பெரிய அதிகாரி, கலெக்டர், டி.ஜி.பி. போன்றவர்கள் செல்போனில் பேசுவது போன்று பேசி, நான் ஆலோசனை கூட்டத்தில் இருக்கிறேன்.
அமேசான் பரிசு கூப்பன் தேவைப்படுகிறது. ஒரு கூப்பன் விலை ரூ.10 ஆயிரம். 10 கூப்பன் வாங்கி அனுப்புங்கள். நான் அப்புறம் பணம் கொடுத்து விடுகிறேன்.' என்று கூறுவார்கள்.
கூப்பன் என்று சொன்னால் ரூ.5 லட்சம் ஆகும். இதெல்லாம் முடிந்த பின்னர், எங்கள் அதிகாரி இப்படி கேட்க மாட்டார். நான் ஏமாந்துவிட்டேன்
என்பது உங்களுக்கு தெரியும்.
இதுபோன்ற மோசடி நடைபெற்றால் உடனடியாக போலீஸ் கட்டுப்பாட்டு அறையின் 100, 112 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளலாம்.
காவலன் உதவி செயலியை உங்களுடைய செல்போனில் பதவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
இதில் ஆன்லைன் மோசடி என்பதை தொட்டாலே, 1930 என்ற எண்ணுக்கு அழைப்பு போய் விடும்.
இதன் மூலம் உங்களுடைய பணத்தை காப்பாற்றி கொள்ளலாம்.
தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு
'பாஸ் ஸ்கேம்' என்று பெயர் ஆகும். உங்களுக்கு வரும் அழைப்பை பார்த்தால் உங்கள் அதிகாரி பெயர், புகைப்படம், எண் போன்றே இருக்கும்.
ஆனால் அது அவர்கள் கிடையாது. எனவே மோசடி பேர்வழி தான் நம்மை தொடர்பு கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர வேண்டும். எனவே இது போன்ற மோசடியில் அரசு, தனியார் நிறுவன ஊழியர்கள் விழுந்து உங்கள் பணத்தை இழந்துவிடாதீர்கள்.
பணம் மட்டுமின்றி உங்கள் மானமும் போய்விடும் என்று காவல்துறை தலைமை இயக்குனர் சைலேந்திரபாபு அறிவித்துள்ளார்.
Thursday, June 18, 2020
Wednesday, June 17, 2020
Tuesday, June 16, 2020
Monday, June 15, 2020
மேலணைக்கு வந்த தண்ணீரை விவசாயிகள் மலர்கள் தூவியும், விதை நெல்களை தூவியும் உற்சாகத்துடன் வரவேற்றனர்.
பொதுப்பணித்துறை அதிகாரிகளும் பூஜைகள் செய்து காவிரியை வழிபட்டு டெல்டா பாசனத்துக்காக தண்ணீரை முழுவதுமாக காவிரியில் திறந்து அனுப்பினர்.
திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை டெல்டா மாவட்டங்களில், குறுவை மற்றும் சம்பா பருவ நெல் சாகுபடி அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது.
தண்ணீர் இருந்தால் தாளடியும் சேர்த்து மூன்று போகங்கள் சாகுபடி செய்யும் சூழல் இருந்தது. ஆனால், கடந்த 9 ஆண்டுகளாக குறுவைக்கு தண்ணீர் கிடைப்பது அரிதாகி விட்டது.
குறுவை பயிருக்கு மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் 12 ஆம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும். அதிமுக அரசு பொறுப்பேற்றதும் 2011இல் ஜூன் 6ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
இதன்மூலம், டெல்டா மாவட்டங்களில் 3.4 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்றது. இதன்பிறகு கடந்த 9 ஆண்டுகளாக போதுமான நீர் இருப்பு இல்லாததால் குறுவை பாசனத்திற்கு முறையாக தண்ணீர் திறக்கவில்லை. இதனால், நிலத்தடி நீராதாரங்களை கொண்டு ஒரு லட்சம் ஏக்கர் வரை மட்டுமே குறுவை சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்வதற்கு 40 டி.எம்.சி. தண்ணீர் தேவை. இந்தாண்டு அணையின் நீர்மட்டம் 100 அடிக்கும் மேலேயே தொடர்ந்து வந்ததால் திட்டமிட்டபடி ஜூன் 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.
தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி, மேட்டூருக்கு நேரில் வந்து பாசனத்துக்கு தண்ணீரை திறந்தார். விநாடிக்கு 10 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீரானது நாமக்கல், கரூர் மாவட்டங்களை கடந்து திருச்சி மாவட்டத்தின் எல்லைப் பகுதியான முக்கொம்புக்கு திங்கள்கிழமை வந்து சேர்ந்தது.
கரூர் மாயனூர் கதவணைக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு வந்ததால், முக்கொம்புக்கு திங்கள்கிழமை காலை வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பேட்டைவாய்த்தலைக்கே காலையில்தான் வந்து சேர்ந்தது. மணல் அள்ளியதால் மேடு, பள்ளங்கள் அதிகம் இருந்ததால் அவற்றை நிரப்பியபடி வந்து செல்ல தாமதமானது. பின்னர், தாமதமாக முக்கொம்பு மேலணைக்கு பிற்பகலில் வந்தது.
இதையடுத்து அங்கு திரண்டிருந்த விவசாயிகள் காவிரி ஆற்றில் மலர்களை தூவி தண்ணீரை வரவேற்றனர். சிறப்பு பூஜைகளும் நடத்தி காவிரித் தாயை வழிபட்டனர். இதேபோல பொதுப் பணித்துறை அதிகாரிகள் மற்றும் கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களும் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு காவிரி தண்ணீரை வரவேற்றனர்.
பின்னர் முக்கொம்பு அணையில் உள்ள மதகுகள் வழியாக கல்லணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் திங்கள்கிழமை இரவுக்குள் கல்லணையைச் சென்றடையும். அங்கிருந்து செவ்வாய்க்கிழமை காலை பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடப்படுகிறது.
முக்கொம்பில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில், விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் மற்றும் சுற்றுப்பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.
Sunday, June 14, 2020
Thursday, June 11, 2020
Wednesday, June 10, 2020
முன்னணி
Total Pageviews
News
Pages
Popular Posts
-
மதுரை ஈவெரா மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சாதனை மாணவிகளை உருவாக்கும் ஆயத்த பயிற்சி வகுப்புகளை மேயர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தா...
-
THE TAMIL NADU PROTECTION OF INTERESTS OF DEPOSITORS (IN FINANCIAL ESTABLISHMENTS) ACT, 1997 (TAMIL NADU ACT 44 OF 1997) (As modifie...
-
திருச்சி 6.5.16 சபரிநாதன் 9443086297 திருச்சி அஇஅதிமுக வேட்பாளர் பரமேஸ்வரி முருகன் மண்ணச்சநல்லூ...
-
சென்னையில் இருந்து ஹஜ் பயணத்திற்கு 450 பயணிகளுடன் முதல் விமானம் புறப்பட்டு சென்றது. ஹஜ்பயண முதல் விமானம் உலகத்தில் உள்ள முஸ்லிம்கள் தங்கள் ...
-
*திருச்சியில் முழுமையாக முடிக்கப்படாமல் உள்ள ஜங்ஷன் மேம்பாலம் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் சிவராசு பேட்டி.* திரு...
-
பொங்கலூர் அருகே உள்ள எஸ்.வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் முத்துசாமி. இவரது மகன் நடராஜ்(வயது46). இவர் கடந்த 2–ந்தேதி விஷம் குடித்துள்ளார். இதன...
-
தமிழ்நாடு சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு மற்றும் மறுஆய்வுக் கூட்டம் - சட்டமன்ற மனுக்கள் குழுத்தலைவர் மனோகரன் தலைமையில் நடைப...
-
*புதிய வகை* *ஆன்லைன் மோசடி:* *டி.ஜி.பி. சைலேந்திர பாபு எச்சரிக்கை* தற்போது நடைபெறும் இந்த மோசடிக்கு ‘பாஸ் ஸ்கேம்’ என்று பெயர். தமிழக போலீ...




















