Wednesday, June 17, 2020

On Wednesday, June 17, 2020 by Tamilnewstv in    
திருச்சி மாவட்டத்தில் பல ஊர்களில் பல்வேறு பெயர்களில் வைத்து நிதி நிறுவனம்.

 நடத்தி தமிழகமெங்கும் மோசடி வழக்குகள் இருந்தும் தற்போது திருச்சியில் மையமாக வைத்து எல்பின் என்ற நிறுவனம் நடத்திவரும் ராஜா என்கிற அழகர்சாமி எஸ் ஆர் கே ஆர் ரமேஷ் குமார் என்கிற ரமேஷ் அவர்களின் கூட்டாளிகள் பலரின் மீது தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

 சமீபத்தில் ராஜ்குமார் என்பவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் மாவட்ட கண்காணிப்பாளரை நேரடியாக சந்தித்து 45 லட்சம் பெற்று தருமாறு புகார் அளித்திருந்தார் தற்போது இன்றைக்கு சேகர் என்பவர் மேலும் ஒரு புகாரை புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார். 
அவர் அளித்துள்ள புகாரில்

அந்தப் புகாரில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆயின் மணி கிராமத்தைச் சேர்ந்த முருகன் என்பவர் திருச்சி கல்லுக்குழி யை தலைமையிடமாகக் கொண்ட எல்பின் நிறுவனம் என்ற சார்பு நிறுவனமான ஸ்பாரோ குளோபல் டிரேட் என்ற நிறுவனத்தில் முதலீடு செய்ய புதுக்கோட்டை மூவர் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.


 அந்த கூட்டத்தில் எங்களிடம் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என்று  ராஜா என்கிற அழகர்சாமி ஆசை வார்த்தையை நம்பி மேற்கூரிய நிறுவனத்தில் கடந்த 29.11.2019 ஆம் ஆண்டு  மொத்தம் 4 1/2 லட்ச ரூபாய் செலுத்தி உள்ளதாகவும் இந்த முதலீட்டிற்கு இரண்டு மடங்கு கூடுதலாக தருவதாகவும் செய்தி மொழி முதலீட்டு தொகையாக 9 லட்சம் ரூபாய் காசோலையை வழங்கியுள்ளனர்.

  இந்த காசோலையை பெறுவதற்கு சேகர் அலைந்து திரிந்து இரண்டு மாதங்கள்  பின்பு தான்   ஒரு வருடம் பின் தேதியிட்ட மேற்படி காசோலையை எல்பின் சகோதரர்கள் ஆலோசனையின் பேரில் இவர்களுக்கு கைக்கூலியாக பினாமியாக உள்ள நபர் பாபு கொடுத்துள்ளார்.


 இதற்கு முன்னர் பணம் கட்டியவர்களுக்கு 10 மாதம் கழித்துதான் அவர்களுடைய முதலீட்டை மட்டுமே திருப்பித் தருகிறார்கள் என சேகர் அறிந்துள்ளார். இதனால் சந்தேகப்பட்டு விசாரித்த போது இதேபோல் நிறுவனத்தில் செயல்பாடுகள் அனைத்திலும் சந்தேகம் ஏற்பட்டு உள்ளது இந்த நிறுவனத்தின் செயல்பாடுகளில் சந்தேகம் இருப்பதால் இதில் உங்களுடைய முதலீட்டை திருப்பிக் கேட்க சென்ற போது நீங்கள் யார் என்றே தெரியவில்லை என்றும் உன்னால் முடிந்ததை பார்த்துக் கொள் என்றும் தகாத வார்த்தைகளால் நிறுவனத்தில் பங்குதாரர் பாபு என்பவர் திட்டி அனுப்பி உள்ளனர் வேறுவழியில்லாமல் நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிறுவனத்தின் வழிகாட்டி என்ற பெயரில் மக்களை மோசடி செய்து வரும் ராஜா என்கிற அழகர்சாமிப் மற்றும் அவர்களுடைய பங்குதாரர்கள் அறிவுமணி பால்ராஜ் பாபு ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மாவட்ட கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளார்.

 மேலும் இவர்களின் மீது பல்வேறு புகார்கள் மற்றும் மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி என்பவர் தொடர்ச்சியாக இணையதளத்தில் மக்களுக்கு இந்த மோசடி நிறுவனம் குறித்த பல்வேறு தகவல்களை மக்களுக்கு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் வண்ணம் மக்களுக்கு செய்தியை அளித்து வந்தார்.

 ஆனாலும் மக்கள்  இவர்களின் மூளைச்சலவை ஆசை வார்த்தை நம்பி இவர்களிடம் பணம் செலுத்தி  பல லட்சம் மக்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது தொடர்ச்சியாக தனது சமூக பணியை மக்கள் பாதிக்காத அளவிற்கு மக்களின் பணத்தை மீட்டு இவர்களின் போலி முகத்திரையை கிழித்து இவர்களுக்கு தண்டனை பெற்றுத் தரும்வரை ஓயமாட்டேன் என்று சமூக ஆர்வலர் சத்தியமூர்த்தி கூறியுள்ளார்.

0 comments: